"துணை சபாநாயகர் யார்!" பாஜக கூட்டணிக்குள் எழுந்த சிக்கல்? முக்கிய பதவி யாருக்கு செல்கிறது.. பரபர
டெல்லி: நமது நாட்டில் சபாநாயகர் பதவிக்கு முதல்முறையாகத் தேர்தல் நடக்கும் சூழல் உருவாகியுள்ள நிலையில், துணைச் சபாநாயகர் யார் என்பதிலும் கேள்வி எழுந்துள்ளது. வழக்கமாக இந்த துணைச் சபாநாயகர் பதவி எதிர்க்கட்சிகளுக்கே வழங்கப்படும். ஆனால், இந்த முறை என்டிஏ கூட்டணியில் உள்ள ஒரு கட்சிக்கு இந்த துணைச் சபாநாயகர் பதவியை பாஜக தர உள்ளதாகக் கூறப்படுகிறது.
18-வது லோக்சபா கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இந்தக் கூட்டத்தொடர் வரும் ஜூலை 3ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. நேற்று முதல் புதிய எம்பிக்கள் பதவியேற்று வரும் நிலையில், எம்பிக்கள் பதவியேற்பு இன்றுடன் முடிவடைகிறது.

இவர்களுக்குத் தற்காலிக சபாநாயகராக பர்த் ருஹரி மஹ்தப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இன்று அனைத்து எம்பிக்களும் பதவியேற்கும் நிலையில், நாளை லோக்சபா சபாநாயகர் தேர்தல் நடைபெறும்.
துணைச் சபாநாயகர் யார்: நமது நாட்டில் எப்போதும் சபாநாயகர் பதவிக்குத் தேர்தல் நடந்தது இல்லை. எப்போதும் ஆளும் தரப்பு நிறுத்தும் வேட்பாளருக்கு எதிர்க்கட்சிகளும் அனைவரும் ஆதரவு தருவார்கள். மறுபுறம் எதிர்க்கட்சி தரப்பிற்குத் துணைச் சபாநாயகர் பதவி வழங்கப்படும். கடந்த காலங்களில் இதுபோலவே நடந்துள்ளது. ஆனால், இந்த முறை அப்படி நடக்க வாய்ப்பே இல்லை என்றே தெரிகிறது.
இந்த முறை லோக்சபா சபாநாயகரைப் போட்டியின்றி ஒருமனதாகத் தேர்வு செய்ய மத்திய பாஜக அரசு முயன்றாலும் துணைச் சபாநாயகர் பொறுப்பை எதிர்க்கட்சிகளுக்கு வழங்கத் தயாராக இல்லை என்றே தெரிகிறது.
எதிர்க்கட்சிகள்: சபாநாயகர் தேர்தல் தொடர்பாக மூத்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் காங்கிரஸ் தேசிய தலைவர் கார்கேவை தொடர்பு கொண்டு பேசியதாகவும் தகவல் வெளியானது. துணைச் சபாநாயகர் பதவி எதிர்க்கட்சிகளுக்கு வழங்கப்பட்டால் சபாநாயகர் பதவிக்கு பாஜக நிறுத்தும் வேட்பாளரை ஆதரிப்பதாக கார்கே கூறியதாகத் தெரிகிறது. ஆனால், பாஜக இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் சபாநாயகர் பதவிக்குத் தேர்தல் நடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
சபாநாயகர் தேர்தல் இப்படி ஒரு பக்கம் பரபரப்பாக இருக்கத் துணைச் சபாநாயகர் யார் என்பதிலும் கேள்வி எழுந்துள்ளது. இப்போதுள்ள சூழலை வைத்துப் பார்க்கும் போது எதிர்க்கட்சிகளுக்குத் துணைச் சபாநாயகர் பதவி செல்ல வாய்ப்பே இல்லை. இதற்கிடையே என்டிஏ கூட்டணியில் உள்ள கட்சிகள் தங்களுக்குத் துணைச் சபாநாயகர் பதவி வேண்டும் எனக் கேட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கூட்டணிக் கட்சிகள்: குறிப்பாக என்டிஏ கூட்டணியில் இரண்டாவது பெரிய கட்சியாக இருக்கும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் மற்றும் 3வது பெரிய கட்சியாக இருக்கும் நிதிஷ்குமாரின் ஜேடியு என இரு கட்சிகளும் துணைச் சபாநாயகர் பதவியைக் கேட்கிறார்களாம். இரு தரப்பும் தங்களுக்கு தான் துணை சபாநாயகர் பதவி வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளதாக தெரிகிறது.
சிக்கல்: இதனால் பாஜக கூட்டணிக்குள்ளேயே யாருக்கு துணை சபாநாயகர் பதவி என்பதில் சிக்கல் எழுந்துள்ளது. இது தொடர்பாக பாஜக தலைமை ஆலோசனை நடத்தி வருகிறது. சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் என இரு தரப்பும் கேட்கும் நிலையில், இரு கட்சிகளில் யாராவது ஒருவருக்குத் துணைச் சபாநாயகர் பொறுப்பு செல்லும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications