மத்திய பிரதேசத்தில் மகுடம் யாருக்கு.. "காங்கிரஸ் vs பாஜக.." கடும் போட்டி! வெல்வது யார்! புது சர்வே
டெல்லி: மத்தியப் பிரதேசத்தில் இன்னும் சில வாரங்களில் தேர்தல் நடைபெறும் நிலையில், அங்கு எந்த கட்சி வெல்ல வாய்ப்புள்ளது என்பது குறித்த புதிய சர்வே முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளது.
இந்தாண்டு இறுதியில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா மற்றும் மிசோரம் என 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. அடுத்தாண்டு நடக்கும் லோக்சபா தேர்தலுக்கு இது அரையிறுதியாகப் பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே இந்த 5 மாநில தேர்தல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுவிட்டது. இதில் இந்தி பேசும் மாநிலங்களான மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் போட்டி முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. ஏனென்றால் அங்கே பாஜக காங்கிரஸ் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.
முட்டி மோதும் அரசியல் கட்சிகள்: பாஜகவைப் பொறுத்தவரை எப்படியாவது இந்த மாநிலங்களில் வெல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது. பாஜக பொதுவாகவே இந்தி பேசும் மாநிலங்களில் வலுவாக உள்ள ஒரு கட்சியாகும் இதனால் நிச்சயம் வெல்ல வேண்டும் என்ற நினைப்பில் உள்ளது. அவர்கள் பிரதமர் மோடியை முன்னிறுத்தியே பிரசாரம் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
மறுபுறம் காங்கிரஸைப் பொறுத்தவரைக் கர்நாடகாவில் அவர்கள் பாஜகவை நேரடியாகவே வீழ்த்தியிருந்தனர். இது காங்கிரஸ் தொண்டர்கள் மட்டுமின்றி நிர்வாகிகளுக்கும் கூட மிகப் பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதே வெற்றியை மீண்டும் இந்த 5 மாநில தேர்தலில் அடைய வேண்டும் என்ற முனைப்பில் அவர்கள் இறங்கி வேலை செய்து வருகிறார்கள். இதில் மத்தியப் பிரதேசத்தில் இரு கட்சிகளுக்கும் இடையேயான போட்டி முக்கியமானது.
மத்தியப் பிரதேசம்: கடந்த காலங்களில் மத்தியப் பிரதேசத்தில் பாஜக வலுவாகவே இருந்துள்ளது. அங்கே இப்போது சவுஹான் தலைமையிலான பாஜக அரசு ஆட்சியில் இருக்கிறது. அங்கே கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் தேர்தலை எதிர்கொள்கிறது. மத்தியப் பிரதேசத்தைப் பொறுத்தவரை அங்கே ஒரே கட்டமாக வரும் நவ. 17ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. தொடர்ந்து டிச. 3ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
மத்தியப் பிரதேச சட்டசபைத் தேர்தல் குறித்து ஜன்மத் என்ற அமைப்பு நடத்திய சர்வே முடிவுகள் வெளியாகியுள்ளது. மத்தியப் பிரதேசத்தைப் பொறுத்தவரை அங்கே மொத்தம் 230 தொகுதிகள் உள்ளது. அதில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்க ஒரு கட்சிக்குக் குறைந்தது 116 இடங்கள் தேவை. இந்தச் சூழலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களைப் பெறும் என்று ஜன்மத் சர்வேயில் கூறப்பட்டுள்ளது.
வெல்வது யார்: அடுத்த மாதம் நடைபெறும் தேர்தலில் காங்கிரஸ்117 முதல் 119 இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அடுத்து ஆளும் கட்சியாக இருக்கும் பாஜக ஆட்சியை இழக்கும் என்றும் அவர்கள் 101- 103 இடங்களில் மட்டுமே வெல்ல வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அங்கே மாயாவதியின் பகுஜுன் சமாஜ் கட்சிக்கும் ஓரளவுக்கு நல்ல ஆதரவு இருக்கிறது. அங்கே பகுஜுன் சமாஜ் கட்சியால் 4 அல்லது 5 இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் கடைசியாக நடந்த 2018 சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் 114 இடங்களிலும் பாஜக 109 இடங்களிலும் வென்றன. காங்கிரஸ் அங்கே ஆட்சியை அமைத்த போதிலும், கமல்நாத் அரசு 15 மாதங்கள் மட்டுமே நீட்டித்தது. சிந்தியா கமல்நாத்திற்கு எதிராகக் கலகம் செய்ய, மொத்தம் 22 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து பாஜகவில் ஐக்கியமானார்கள். இதனால் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து, மீண்டும் பாஜகவின் சவுஹான் முதல்வர் ஆனார். இந்தச் சூழலில் தான் அடுத்து மீண்டும் அங்கே காங்கிரஸ் வெல்ல வாய்ப்பு அதிகம் என புது சர்வேயில் கூறப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications