"டிரஸே போடல.." 5 ஸ்டார் ஹோட்டலில் நிர்வாணமாக நின்ற வெளிநாட்டு பெண்..! ஊழியரை தாக்கி அடாவடி
டெல்லி: ராஜஸ்தான் மாநிலத்தில் 5 நட்சத்திர விடுதியில் வெளிநாட்டுப் பெண் நிர்வாணமாகச் சண்டை போடும் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பல்வேறு உலக நாடுகளில் இருந்தும் ஒவ்வொரு ஆண்டும் வெளிநாட்டுப் பயணிகள் இந்தியாவைச் சுற்றிப் பார்க்க வருகின்றனர். இந்தியாவின் பலதரப்பட்ட கலசாரம் உணவு உள்ளிட்டவை அவர்களைப் பெரிதும் கவரும்.
அதேநேரம் சில வெளிநாட்டுப் பயணிகள் இந்தியாவில் அத்துமீறி நடந்து கொள்வார்கள். அப்படியொரு மோசமான சம்பவம் தான் ராஜஸ்தான் மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

நிர்வாணம்
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் தான் இந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. அங்கு உள்ள 5 நட்சத்திர ஹோட்டல் ஒன்றின் காரிடரில், நிர்வாணமாக நிற்கும் வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு பெண் அங்குள்ள ஹோட்டல் ஊழியர்களுடன் சண்டையிடுவது அந்த வீடியோவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது. வீடியோவில் அந்த பெண் ஹோட்டல் ஊழியர்கள் மீது கடும் கோபத்தில் இருப்பது தெளிவாகத் தெரிகிறது. விடுதியில் தன்னை ஊழியர்கள் முறையாக நடத்துவதில்லை எனக் கூறி அந்த பெண் கத்துகிறார்.

தாக்குதல்
அந்தப் பெண் ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்தவர் என்று தெரிகிறது. மிகவும் ஆவேசமாகக் கத்தும் அந்த வெளிநாட்டவரை அருகே உள்ள ஒரு ஹோட்டல் ஊழியர் சமாதானம் செய்ய முயல்கிறார். இருப்பினும், அதைப் பார்த்தும் அந்த பெண் மேலும் கோபமடையவே செய்கிறார். ஒரு கட்டத்தில் கோபம் தலைக்கேறியதால், அந்த வெளிநாட்டுப் பெண் ஹோட்டல் ஊழியரைத் தாக்கவும் தொடங்குகிறார். ஹோட்டல் ஊழியரின் முடியைப் பிடித்துத் தாக்கி அடிக்கும் அவர், முகத்திலேயே குத்தவும் செய்கிறார்.

பரபர வீடியோ
இதையடுத்து கோபமடையும் அந்த பெண் ஹோட்டல் ஊழியர் தான் போலீசை அழைக்க உள்ளதாக அங்கிருந்து நகர்கிறார். இந்த சம்பவங்களைப் பார்த்து அருகே ரூம் எடுத்தவர்கள் அச்சமடைந்தனர். இவை அனைத்தும் அந்த வீடியோவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெட்டிசன்கள் பலரும் அந்தப் வெளிநாட்டுப் பெண்ணையே கடுமையாகச் சாடி வருகின்றனர்.

போலீசார்
விடுதியில் இப்படி முறையற்று நடந்து, ஊழியரைத் தாக்குவது சரியானது இல்லை எனச் சாடி வருகின்றனர். மேலும், அவரை உடனடியாக நாடுகடத்த வேண்டும் என்றும் பலரும் ட்வீட் செய்து வருகின்றனர். மேலும், சிலர் இந்த வீடியோவை ஜெய்ப்பூர் போலீசின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தையும் டேக் செய்து பதிவிட்டு வருகின்றனர். இருப்பினும், இதில் யாராவது புகார் அளித்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும் என ஜெய்ப்பூர் போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நிர்வாணமாக 5 நட்சத்திர ஹோட்டலில் அந்த பெண் அத்துமீறித் தாக்கும் வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
புழுதி புயலில் சிக்கிய ராஜஸ்தான்.. வீடுகளை மூடியதால் மூச்சுவிட முடியாமல் மக்கள் தவிப்பு.. வீடியோ பாருங்க -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications