மூல வழக்கு எது? டாஸ்மாக் வழக்கில் அதிமுகவிற்கு சைலண்ட்டாக செக் வைத்த உச்ச நீதிமன்றம்! திமுக எஸ்கேப்
டெல்லி: டாஸ்மாக் வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் இன்று கேட்கப்பட்ட ஒரு கேள்வி அமலாக்கத்துறையை விட அதிமுகவை அதிக அச்சத்திற்கும் பயத்திற்கும் உள்ளாக்கி இருக்கும் என்று அரசியல் வல்லுனர்கள் கூறுகின்றனர்.
டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி முறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டியுள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள், சென்னை மணப்பாக்கத்தில் உள்ள டாஸ்மாக் மேலாண் இயக்குனர் விசாகன் வீட்டில் ரெய்டு நடத்தினார்கள். இரண்டு நாட்களாக அங்கே ரெய்டு நடத்தப்பட்டு வந்தது. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை அதிகவிலைக்கு விற்பனை செய்தது, பார் உரிமம் வழங்கியது உள்ளிட்டவற்றில் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார் கூறப்பட்டது.

இதுதொடர்பாக, கடந்த 2017 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்த வழக்குகளின் அடிப்படையில் அமலாக்கத் துறையினர், சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் மாதம் சோதனை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக தற்போது கடந்த சில நாட்களாக மீண்டும் ரெய்டுகள் நடத்தப்பட்டு வருகிறது.
உயர் நீதிமன்ற வழக்கு
டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத் துறை நடத்திய சோதனையை சட்டவிரோதமானது என அறிவிக்க கோரி, தமிழக அரசும், டாஸ்மாக் நிர்வாகமும் தாக்கல் செய்த வழக்குகளை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகர் அமர்வு பிறப்பித்த உத்தரவில், டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 2017 முதல் 2024 ம் ஆண்டு வரை பதிவு செய்யப்பட்ட 41 முதல் தகவல்கள் அறிக்கைகளின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டுள்ளதே தவிர, வெறும் செவி வழி தகவல்களின் அடிப்படையில் அல்ல.
நியாயமான சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை நடத்த அமலாக்கத்துறைக்கு சட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எந்த வழக்குகளின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது என்பதை டாஸ்மாக் நிர்வாகத்திற்கு தெரிவிக்க சட்டத்தில் எந்த வழிவகையும் இல்லை. அந்த விவரங்களை வழங்கினால், ஆதாரங்களை மறைக்கவும், அழிக்கவும் வாய்ப்புகள் உள்ளதால் வழக்குகளின் விவரங்களை வழங்க உத்தரவிட முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.
உச்ச நீதிமன்றம்
இந்த உத்தரவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் டாஸ்மாக் சார்பாக தொடரப்பட்ட வழக்கில்தான் இன்று அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. அமலாக்கத்துறை அனைத்து வரம்புகளையும் மீறி செயல்படுவதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக டாஸ்மாக்கிற்கு எதிரான விசாரணையை தொடர்ந்து நடத்தலாம் என்று கடந்த மாதம் உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம். இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை 22-ந்தேதி (வியாழக்கிழமை) விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் தலைமையிலான முதல் அமர்வு, தனி நபர் செய்த தவறுகளுக்காக ஒரு நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுப்பதா? எந்த மூல வழக்கின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது ? என்று அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியது. அமலாக்கத்துறை வரம்பு மீறி செயல்படுகிறது என்றும் கண்டனம் தெரிவித்தது. இறுதியில், டாஸ்மாக்கிற்கு எதிரான அமலாக்கத்துறையின் விசாரணைக்கு தடை விதித்தது உச்சநீதிமன்றம்.
அதிமுகவிற்கு சிக்கல்
இந்த வழக்கில், தலைமை நீதிபதி கவாய், அமலாக்கத் துறை அனைத்து விதிகளையும் மீறுகிறது; வரம்பு மீறி நடக்கிறது. முறைகேடு நடந்தது என்றால் சம்பந்தப்பட்ட தனி நபர்கள் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கலாம் டாஸ்மாக் தொடர்பான வழக்கில், அதிகாரிக்கு எதிராக FIR பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், அமலாக்கத்துறைக்கு அங்கு என்ன வேலை?
தனி நபர் செய்த விதிமீறலுக்காக ஒரு நிர்வாகம் மீது நடவடிக்கை எடுப்பதா. எந்த மூல வழக்கின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது? டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை தன்னுடைய எல்லைகளை தாண்டி செயல்பட்டுள்ளது. கூட்டாட்சி அமைப்பையே தனது நடவடிக்கையால் சிதைத்துள்ளது என்று அமலாக்கத்துறை விசாரணைக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி காட்டமாக தெரிவித்துள்ளார்.
மூல வழக்கு எது?
அதாவது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் பதிவு செய்துள்ள எப்ஐஆரில் அவர்களே நடவடிக்கை எடுக்கட்டும் நீங்கள் ஏன் எடுக்கிறீர்கள் என்று கேட்டுள்ளனர். இதனால் அமலாக்கத்துறைக்கு கடிவாளம் போடப்பட்டு உள்ளது.
எந்த மூல வழக்கின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது ? என்று கேள்வி கேட்டுள்ளது. ஏனென்றால் டாஸ்மாக் தொடர்பாக 52 எப்ஐஆர் உள்ளன. இதில் பல அதிமுக மாஜிக்களுக்கு எதிரான எப்ஐஆர் இதில் எது என்று அமலாக்கத்துறை கூறினால் அது திமுகவிற்கு மட்டுமல்ல.. பாஜக கூட்டணியில் உள்ள அதிமுகவிற்கு சிக்கல். அதனால் அமலாக்கத்துறைக்கு புதிய சிக்கல் வந்துள்ளது. இதன் மூலம் அப்போது அமைச்சராக இருந்த தங்கமணி உள்ளிட்டோருக்கு சிக்கல் ஏற்படும் சூழல் ஏற்பட்டு உள்ளது.
-
"பீர் டூ ஒயின் வரை".. தேர்தலால் டாஸ்மாக்கில் மதுபானம் வாங்க கட்டுப்பாடு! எத்தனை பாட்டில் வாங்கலாம்? -
மதுக்கடைகளுக்கு தேர்தல் ஆணையம் போடும் கடிவாளம்.. ஓவர் டைம் என புலம்பும் டாஸ்மாக் பணியாளர்கள்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம்












Click it and Unblock the Notifications