அழுத்திய பாஜக.. அடங்காத காங்கிரஸ்.. டெல்லியில் ட்விஸ்ட்.. ராகுல் யாத்திரை 9 நாள் நிறுத்தம்.. ஏன்?
டெல்லி: கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரையிலான ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை டெல்லியை அடைந்துள்ளது. கொரோனா பரவலை காரணம் காட்டி யாத்திரையை தற்காலிகமாக ஒத்திவைக்க மத்திய சுகாதாரத்துறை கூறிய நிலையில் காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பை தெரிவித்தது. இந்நிலையில் தான் தற்போது காங்கிரஸ் கட்சி பாரத் ஜோடோ யாத்திரையை 9 நாட்கள் ஒத்திவைத்துள்ளது. இதனால் பாஜகவின் கோரிக்கையை காங்கிரஸ் ஏற்றதா? என்ற கேள்வி எழுந்த நிலையில் அதற்கு அந்த கட்சி புதுவிளக்கம் அளித்துள்ளது.
இந்தியாவின் பழம்பெரும் கட்சியான காங்கிரஸ் 2014ல் இருந்து சரிவை சந்தித்து வருகிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு இமாச்சல பிரதேச மாநில தேர்தலில் பாஜகவிடம் இருந்து காங்கிரஸ் ஆட்சியை பறித்துள்ளது.
இதற்கிடையே தான் பாஜக வெறுப்பை பரப்பி பிரித்தாளும் சூழ்ச்சி செய்கிறது. இந்தியாவை ஒற்றுமைப்படுத்த வேண்டும் எனக்கூறி ராகுல் காந்தி பாதயாத்திரையை தொடங்கினர்.

டெல்லியை அடைந்த யாத்திரை
கடந்த செப்டம்பர் மாதம் 7 ம் தேதி கன்னியாகுமரியில் ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை எனும் இந்திய ஒற்றுமை பயணத்தை தொடங்கினார். இந்த யாத்திரை காஷ்மீர் வரை 12 மாநிலம், 2 யூனியன் பிரதேசம் வழியாக 150 நாட்கள் வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது இந்த யாத்திரை 100 நாட்களை தாண்டி உள்ளது. தமிழ்நாட்டில் புறப்பட்ட கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், அரியானாவை கடந்து பதர்பூர் எல்லை வழியாக நேற்று காலை தலைநகர் டெல்லியை அடைந்தது.

கமல்ஹாசனுடன் யாத்திரை
108 வது நாளான நேற்று டெல்லியில் ராகுல் காந்தி யாத்திரை சென்றார். ராகுல் காந்தியுடன் அவரது தாய் சோனியா காந்தி, தங்கை பிரியங்கா காந்தி, நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்டவர்கள் கைகோர்த்தனர். மேலும் சுமார் 40 ஆயிரம் காங்கிரஸ் தொண்டர்கள் பல்வேறு கட்டங்களாக யாத்திரையில் பங்கேற்றனர். மதுரா ரோடு, ஜாகீர் உசேன் மார்க், இந்தியா கேட், திலக் மார்க், ஐடிஓ வழியாக ஆசிரமம் சென்று செங்கோட்டை வரை யாத்திரை சென்றது. அதன்பிறகு ராகுல் காந்தி ராஜ்காட்டுக்கு சென்று முன்னாள் பிரதமர்களான இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, அடல் பிஹாரி வாஜ்பாயின் சமாதியிலும் ராகுல் அஞ்சலி செலுத்தினார்.

9 நாட்கள் நிறுத்தம்
இதுவரை தமிழ்நாடு முதல் டெல்லி வரை சுமார் 50 மாவட்டங்களை ராகுல் காந்தி நடந்து கடந்துள்ளார். இவருக்கு கூட்டணி கட்சி தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள், நடிகர், நடிகைகள் உள்பட பல்வேறு பிரபலங்கள் ஆதரவு தெரிவித்தனர். இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜனும் ராகுல் காந்தியின் யாத்திரையில் பங்கேற்றார். இந்நிலையில் தான் தற்போது ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அதன்படி இன்று முதல் ஜனவரி 2ம் தேதி வரை என மொத்தம் 9 நாட்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பாஜக கோரிக்கையை ஏற்காத காங்கிரஸ்
சீனாவில் ஓமிக்ரான் உருமாறிய பிஎப் 9 வகை வைரஸ் பரவலால் பாதிப்பு என்பது தொடர்ந்து பல மடங்கு அதிகரித்து வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பு இந்தியாவிலும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் ராகுல் காந்தி தனது யாத்திரையை தற்காலிகமாக ஒத்திவைக்க வேண்டும் என சில நாட்களுக்கு முன்பு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா கடிதம் எழுதியிருந்தார். இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ராகுலின் பாதயாத்திரைக்கு பெருகும் ஆதரவால் பாஜக கொரோனாவை புதிதாக உருவாக்குகிறது என காங்கிரஸ் கட்சி சார்பில் குற்றம்சாட்டப்பட்டது. இந்நிலையில் தான் தற்போது ராகுலின் யாத்திரை நிறுத்தப்பட்டுள்ளது. இதுபற்றி விசாரித்தபோது தான் புதிய தகவல் வெளியானது.

யாத்திரை நிறுத்தத்துக்கு காரணம்
அதாவது ராகுலின் பாதயாத்திரை டெல்லியில் இருந்து பஞ்சாப் வழியாக காஷ்மீர் செல்ல உள்ளது. கன்னியாகுமரியில் இருந்து டெல்லி வரை சென்ற யாத்திரையில் யாத்ரீகர்களின் வசதிக்காக கண்டெய்னர்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது யாத்திரைக்கு பயன்படுத்தப்படும் கண்டெய்னர்கள் புனரமைக்கப்பட வேண்டி உள்ளது. இந்த புனரமைப்பு பணியானது நொய்டாவில் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்கு சில நாட்கள் ஆகும் என்பதால் யாத்திரை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆண்டு இறுதி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு அடுத்தடுத்து வருவதால் யாத்திரை நிறுத்தப்பட்டு கண்டெய்னர்கள் புனரமைப்பு பணிக்கு கொடுக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி தரப்பில் கூறப்படுகிறது.
-
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications