"இந்தியாவின் மர்மம்.." பல கிமீ பயணித்து இங்கு வந்து கொத்தாக தற்கொலை செய்யும் பறவைகள்! ஒன்னும் புரியல
டெல்லி: அசாம் மாநிலத்தில் குறிப்பிட்ட ஒரு கிராமத்தில் திடீரென பறவைகள் அப்படியே கொத்து கொத்தாக உயிரிழக்கிறது. இதற்கான காரணம் என்னவென்று புரியாமல் ஆய்வாளர்கள் குழம்பிப் போய் உள்ளனர்.
இந்த கிராமம் அசாம் மாநிலம் ஜதிங்கா என்ற கிராமத்தில் இருக்கிறது.. சரியாக அனைத்து பறவைகளும் இந்தக் கிராமத்திற்கு வந்து தான் தற்கொலை செய்து கொள்கிறது. இந்த வினோதமான நிகழ்வு பல காலமாகவே இந்த கிராமத்தில் நடந்து வருகிறது. அதிலும் குறிப்பாக ஆகஸ்ட், நவம்பர் மாதங்களில் தான் இங்கே அதிகப்படியான பறவைகள் இறக்கிறதாம்..

பல்வேறு வகையான பறவைகளும் இந்த குறிப்பிட்ட இடத்திற்கு வந்து உயிரிழக்கிறது. எதனால் இந்த பறவைகள் சரியாக இந்த இடத்தில் வந்து உயிரிழக்கிறது என்பது நமக்குத் தெளிவாகத் தெரியவில்லை. இதனால் இந்த பறவைகளின் மரணம் என்பது மர்மமாகவே தொடர்வதாக இங்குள்ள மக்கள் கூறுகின்றனர்.
அச்சம்: இந்த மர்மமான உயிரிழப்புகள் எல்லாம் இருண்ட இரவுகள் இருக்கும் நிலவு இல்லாத நாட்களில் தான் அதிகம் நடக்கிறதாம்.. பல ஆண்டுகளாக இங்கு வசிக்கும் மக்கள் தீய ஆவிகள் தான் இதுபோல பறவைகளைக் கொல்வதாக நம்பினர். இதனால் ஒரு நாள் எங்கு அந்த ஆவிகள் தங்களையும் கொன்றுவிடுமோ என்றும் கூட அஞ்சினர். இதனால் அவர்கள் சுற்றுப்புறங்களில் மூங்கில் குச்சிகளை வைக்கும் பழக்கத்தையும் பின்பற்றினர்.
இந்த விசித்திரமான நிகழ்வை மையமாக வைத்துப் பல கதைகளும் கூட இங்கே உலா வந்து கொண்டு இருக்கிறது. இருப்பினும், சரியாக இந்த இடத்திற்கு வந்து ஏன் பறவைகள் தற்கொலை செய்து கொள்கிறது என்பது மக்களுக்குத் தெரியவில்லை. அதுவும் இந்த வினோத நிகழ்வு ஆண்டில் குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே நடக்கிறதாம். அதிலும் குறிப்பிட்ட கிளைமேட் இருக்கும்போது மட்டுமே இப்படி ஒட்டுமொத்தமாகப் பறவைகள் தற்கொலை செய்து கொள்வதாக கூறுகின்றனர்.

காரணம் 1: இதற்கு இரண்டு வகையான காரணங்களை ஆய்வாளர்கள் முன்வைக்கிறார்கள். முதலில் அசாம் அடிக்கடி வெள்ளம் ஏற்படும் ஒரு பகுதியாகும். இங்கே பருவமழை காலத்தில் வெள்ளம் ஏற்படும் போது பறவைகள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள இடம்பெயர வேண்டிய கட்டாயம் ஏற்படும். அப்போது அதிக காற்று மற்றும் அடர்த்தியான மூடுபனி இருக்கும் நிலையில், இந்த குழப்பத்தால் பறவைகள் உயிரிழக்கலாம் எனக் கூறப்படுகிறது.
காரணம் 2: இதில் மற்றொரு விஷயத்தையும் ஆய்வாளர்கள் முன்வைக்கிறார்கள். ஜடிங்காவில் பறவைகளின் நடத்தை குறித்து விரிவாக ஆய்வு செய்த டாக்டர் சுதின் சென்குப்தா இது குறித்து சில கருத்துகளைத் தெரிவித்துள்ளார். மழைக்காலங்களில், பாறைகளில் இருக்கும் நீர் நிலத்தடி நீர்மட்டம் உயரும்.. அப்போது இந்த இடத்தில் இருக்கும் காந்த மற்றும் மின் பண்புகளைப் பாதிக்கும். இது அப்பகுதியில் இருக்கும் பறவைகளைப் பாதிக்கும். இந்த காந்த புலன் பாதிப்பால் பறவைகளின் நரம்புகள் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும்.
சரியாக இந்த 1.5 கிமீ சுற்றளவில் தான் இந்த உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இந்தக் கிராமத்தைச் சுற்றிலும் பருவமழை காலத்தில் தான் இதுபோன்ற உயிரிழப்புகள் நடக்கிறது. அறிவியல் பூர்வமாக இதற்கு சில விளக்கங்கள் இருந்தாலும் கூட உறுதியாக இதற்கு என்ன காரணம் என்பது தெளிவாகத் தெரிவதில்லை. இதனால் இங்குள்ள கிராம மக்கள் இன்னுமே பேய் காரணமாக இந்த சம்பவங்கள் நடப்பதாகக் கூறி வருகின்றனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications