Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மோடிக்கு வந்த பயம்? என்டிஆர் மகள் வேண்டாம்.. மீண்டும் ஓம்பிர்லா சபாநாயகரானது எப்படி? பரபர பின்னணி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: லோக்சபா புதிய சபாநாயகராக பாஜக கூட்டணி வேட்பாளர் ஓம்பிர்லா மீண்டும் தேர்வாகி உள்ளார். இந்நிலையில் தான் பாஜக கூட்டணி சார்பில் சபாநாயகர் பதவிக்கு ஓம்பிர்லாவுடன், மறைந்த நடிகர் என்டி ராமராவின் மகள் புரந்தேஸ்வரி பெயர் முன்னிலையில் இருந்தது. ஆனால் கடைசியில் புரந்தேஸ்வரிக்கு பதில் பாஜக மேலிடம் ஓம்பிர்லாவை தேர்வு செய்ததன் பின்னணி குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.

லோக்சபா தேர்தலில் மத்தியில் ஆட்சியமைக்க தேவையான 272 எம்பிக்கள் எந்த கட்சிக்கும் கிடைக்கவில்லை. இதனால் 240 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக மாறிய பாஜக தனது கூட்டணி கட்சிகளின் 53 எம்பிக்களின் ஆதரவில் மத்தியில் ஆட்சியை பிடித்துள்ளது. மீண்டும் நரேந்திர மோடி 3வது முறையாக பிரதமராகி உள்ளார். மோடியுடன் சேர்த்து 72 பேர் மத்திய அமைச்சர்களாக உள்ளனர்.

narendra modi om birla

இந்நிலையில் தான் லோக்சபா சபாநாயகர் தேர்தல் ஜுன் 26ம் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று லோக்சபா சபாநாயகர் தேர்தல் குரல் வாக்கெடுப்பு மூலம் நடந்து முடிந்தது. பாஜக கூட்டணி வேட்பாளராக ஓம்பிர்லா, ‛இந்தியா’ கூட்டணி வேட்பாளரான கேரளாவை சேர்ந்த காங்கிரஸ் எம்பி சுரேசை வீழ்த்தி சபாநாயகர் பதவியை மீண்டும் கைப்பற்றினார்.

முதல் நாளே லோக்சபாவில் சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு டோஸ்+நெருக்கடி கொடுத்த விசிக திருமாவளவன்!


குரல் வாக்கெடுப்பில் ஓம்பிர்லாவுக்கு 297 எம்பிக்களின் ஆதரவு கிடைத்த நிலையில், சுரேசுக்கு 232 எம்பிக்களின் ஆதரவு மட்டுமே கிடைத்தது. இதனால் 2வது முறையாக ஓம்பிர்லா சபாநாயகராகி உள்ளார். இவர் கடந்த 2019 முதல் 2024 வரை ஏற்கனவே 5 ஆண்டுகள் சபாநாயகராக இருந்த நிலையில் மீண்டும் அந்த பதவியை எட்டிபிடித்துள்ளார். இந்நிலையல் தான் முதலில் சபாநாயகர் பதவிக்கு ஓம்பிர்லாவுடன் மேலும் 2 பாஜக தலைவர்களின் பெயர்கள் முன்னிலையில் இருந்தன.
அதாவது ஓம்பிர்லா, ஆந்திரா எம்பியும், மறைந்த நடிகர் என்டி ராமராவின் மகளுமான புரந்தேஸ்வரி (ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மனைவி புவனேஸ்வரியின் சகோதரி), ஒடிசா மாநிலம் கட்டாக் எம்பியான பத்ருஹரி மஹ்தாப் ஆகியோரின் பெயர்கள் இருந்தன.

‛‛மனமார்ந்த வாழ்த்துகள்’’..ராகுல் காந்திக்கு திடீரென வாழ்த்து கூறிய நடிகர் விஜய்..கவனம் ஈர்த்த பதிவு


இதில் பத்ருஹரி மஹ்தாப் இடைக்கால சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார். இதனால் முழுநேர சபாநாயகர் பதவிக்கான ரேஸ் பட்டியலில் அவரது பெயர் இடம்பெறவில்லை. ஆனால் கடைசி வரை ஓம்பிர்லாவுடன், மறைந்த நடிகர் என்டி ராமராவின் மகள் புரந்தேஸ்வரியின் பெயர் இருந்ததாக கூறப்படுகிறது. அதில் பிரதமர் மோடி உள்பட பாஜக மேலிட தலைவர்கள் ஓம்பிர்லாவையே சபாநாயகராக்க முடிவு செய்துள்ளனர். இதன் பின்னணியில் புரந்தேஸ்வரியை சபாநாயகராக்க பாஜக தயங்கியதன் பின்னணியில் அச்சம் உணர்வு ஒன்று இருந்துள்ளது.

‛மாப்பிள்ளை நான் பாஜககாரன்’.. சாதியை குறிப்பிட்டு திருச்சி சூர்யா போட்ட பதிவு.. ஆர்கே சுரேஷ் பதிலடி


அதாவது சபாநாயகர் பதவி என்பது மிகவும் முக்கியத்துவமானது. மத்தியில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைந்தால் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் தற்போது பாஜக கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. இதனால் கூட்டணி கட்சிகள் எப்போது வேண்டுமானாலும் போர்க்கொடி உயர்த்தலாம். இந்த வேளையில் மத்தியில் ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்றால் அதற்கு சபாநாயகரின் உதவி வேண்டும். ஏனென்றால் நம்பிக்கை வாக்கெடுப்பு, எம்பிக்கள் தகுதி நீக்கம் உள்ளிட்டவற்றில் சபாநாயகரின் முடிவே இறுதியானது. இதனால் தான் தொடக்கம் முதலே பாஜக சபாநாயகர் பதவியை கூட்டணியில் உள்ள சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ் குமார் தரப்புக்கு வழங்க மறுத்தது.

ஒருவேளை சந்திரபாபு நாயுடு போர்க்கொடி உயர்த்தினால் அவரது மனைவியின் சகோதரியான புரந்தேஸ்வரிக்கு (ராஜமுந்திரி லோக்சபா தொகுதியின் பாஜக எம்பி) சபாநாயகர் பதவியை கொடுக்க பாஜக மேலிடம் விரும்பியது. ஆனால் புரந்தேஸ்வரி அடிப்படையில் பாஜகவை சேர்ந்தவர் இல்லை. அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவுக்கு வந்தவர். அதோடு சந்திரபாபு நாயுடுவின் மனைவியின் சகோதரியாவார். தந்தை என்டிராமராவிடம் இருந்து தெலுங்கு தேசம் கட்சியை அபகரித்ததால் சந்திரபாபு நாயுடுவுடன் புரந்தேஸ்வரிக்கு நல்ல உறவு இல்லை. ஆனால் ஆந்திராவில் பாஜக - தெலுங்கு தேசம் கட்சியால் இருவருக்கும் இடையே ஒருவேளை சந்திரபாபு நாயுடு கூட்டணிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினால் புரந்தேஸ்வரியின் நடவடிக்கை என்பது பாஜகவுக்கு எதிராக மாறிவிடுமோ என்ற சந்தேகம் பாஜகவுக்கு இருந்தது.

மாறாக லோக்சபா சபாநாயகராக தேர்வாகி உள்ள ஓம்பிர்லா நீண்டகாலமாக பாஜகவில் செயல்பட்டு வருகிறார். இவர் ஆர்எஸ்எஸ் பின்புலம் கொண்டவர். இவர் கோட்டா மாவட்ட பாஜக மாநில இளைஞர் அணி தலைவராக 1987 ல் செயல்பட்டார். அதன்பிறகு 2003 முதல் 2014 வரை 3 முறை ராஜஸ்தானில் எம்எல்ஏவாக இருந்தார். அதன்பிறகு ராஜஸ்தான் மாநிலம் கோட்டா லோக்சபா தொகுதியில் 3வது முறையாக வெற்றி பெற்றுள்ளார்.

கடந்த 2014, 2019 தேர்தல்களை தொடர்ந்து தற்போது 3வது முறையாக அவர் அந்த தொகுதியில் எம்பியாக வெற்றி பெற்றுள்ளார். இவருக்கு பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் மிகவும் நெருக்கமானவர். இவர் எந்த சூழலிலும் பாஜகவை விட்டு கொடுப்பது இல்லை. இதற்கு கடந்த 5 ஆண்டுகளாக சபாநாயகராக அவர் செயல்பட்டதே சாட்சியாகும். மேலும் தற்போது கூட்டணி ஆட்சி நடப்பதால் புரந்தேஸ்வரியை காட்டிலும் ஓம்பிர்லாவை சபாநாயகராக நியமனம் செய்வது தான் சிறந்தது என்று பிரதமர் மோடி உள்பட பாஜக மூத்த தலைவர்கள் நினைத்தனர். அதன்படியே ஓம்பிர்லா சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அதேபோல் இடைக்கால சபாநாயகராக நியமிக்கப்பட்ட பத்ருஹரி மஹ்தாப் ஒடிசாவை சேர்ந்தவர். இவர் ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதாதளம் கட்சியில் செயல்பட்டு வந்தார். அதன்பிறகு கடந்த லோக்சபா தேர்தலுக்கு முன்பாக தான் பாஜகவில் இணைந்தார். இவர் கடந்த 1998 முதல் கட்டாக் தொகுதி எம்பியாக உள்ளார். 1998, 1999, 2004, 2009, 2014, 2019 ஆகிய தேர்தல்களில் கட்டாக் தொகுதியில் பிஜு ஜனதாதளம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பிறகு 2024ல் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால் அவரும் பிஜு ஜனதாதளம் கட்சியில் இருந்து வந்ததால் சபாநாயகர் பதவியை வழங்க பாஜக மேலிடம் தயங்கியது. இருப்பினும் சீனியர் என்ற அடிப்படையில் இடைக்கால சபாநாயகர் பதவி அவருக்கு வழங்கப்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+