முதல் நாளே லோக்சபாவில் சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு டோஸ்+நெருக்கடி கொடுத்த விசிக திருமாவளவன்!
டெல்லி: 18-வது லோக்சபா சபாநாயகராக இன்று தேர்ந்தெடுக்கப்பட்ட ஓம் பிர்லாவுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி பேசிய பேச்சு நெருக்கடி கொடுத்தது. லோக்சபாவில் திருமாவளவன் பேசிக் கொண்டிருந்த போதே மைக் அணைக்கப்பட்டதற்கு எதிராக "இந்தியா" கூட்டணி எம்.பிக்கள் உரத்து முழக்கம் எழுப்ப சலசலப்பு ஏற்பட்டது.
லோக்சபாவில் இன்று புதிய சபாநாயகர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. பாஜக அணியின் வேட்பாளர் ஓம் பிர்லா, குரல் வாக்கெடுப்பு மூலமாக வெற்றி பெற்றார். பின்னர் பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் சபாநாயகர் ஓம் பிர்லாவை இருக்கையில் அமர வைத்து வாழ்த்துத் தெரிவித்தனர்.

பின்னர் பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, திமுக லோக்சபா குழு தலைவர் டிஆர் பாலு, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் புதிய சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு வாழ்த்து தெரிவித்து பேசினர்.
இந்த வரிசையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் எம்பி, ஓம் பிர்லாவுக்கு வாழ்த்து தெரிவித்துப் பேசினார். அப்போது, சபையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட உங்களுக்கு நான் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பிலும் இந்தியா கூட்டணியின் சார்பிலும் எனது மனம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தங்களது இருக்கையின் வலது பக்கத்தில் செங்கோல் உள்ளது. செங்கோல் என்பது அதிகாரத்தின் அடையாளம் அல்ல. யார் பக்கமும் சாயக் கூடாது. நேர்மையாக இருக்க வேண்டும் என்பதற்கான நீதி தவறாமையின் அடையாளமாகும். இந்த இருக்கையின் அழகே நீதி தவறாமைதான்.
கடந்த காலங்களில் மிகச் சிறப்பான சபாநாயகர் என்பதை நிரூபித்திருக்கிறீர்கள். ஆனால் ஆளும் கட்சிக்கு ஒரு சார்பாகவும் எதிர்க்கட்சிக்கு ஒரு வகையாகவும் அணுகியிருக்கிறீர்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மை. ஆளும் கட்சி என்பது வலுவான அதிகாரத்துடன் இருக்கும் கட்சி. ஆகவே சார்புநிலை இருக்கக் கூடாது என்பதையே எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி இருக்கிறார்கள் (சபாநாயகர் குறுக்கிட்டு அமர சொல்கிறார்)
கடந்த காலத்தில் பல்வேறு பண மசோதாக்கள் உள்ளிட்டவைகளை ஆளும் கட்சி அறிமுகப்படுத்தியது. மசோதாக்களை தீர்மானிக்கும் அதிகாரம் உங்களுக்குதான் இருக்கிறது. அந்த அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்திய ஆளும் கட்சி மீண்டும் அத்தகைய முயற்சியை மேற்கொள்ளலாம். அதற்கு ஒருபோதும் நீங்கள் வளையக் கூடாது என்பது வேண்டுகோள்.
ஒரு மக்களவைத் தலைவர் என்ற அதிகாரத்தை பயன்படுத்தி (சபாநாயகர் குறுக்கீடு), நாடாளுமன்ற வளாகத்தில் இருந்த புரட்சியாளர் அம்பேத்கர், அண்ணல் மகாத்மா காந்தி அடிகள் உள்ளிட்டோரின் சிலைகள் ஒரு ஓரமாய் கொண்டு போய் (மைக் இணைப்பு துண்டிக்கப்பட்டது)... பின்னரும் திருமாவளவன் தொடர்ந்து பேசினார். அப்போது இந்தியா கூட்டணியின் எம்பிக்கள் சபாநாயகரின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications