ஒரு நொடி ஜடேஜா சட்டென கோபப்பட.. அப்படியே திரும்பி.. ஏ ஏய் நிறுத்து.. ஆப்கானிஸ்தான் மேட்சில் பரபரப்பு
சென்னை: இந்தியா ஆப்கானிஸ்தான் இடையிலான உலகக் கோப்பை 2023 போட்டியில் நடந்த சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான உலகக் கோப்பை லீக் ஆட்டம் தற்போது நடந்து கொண்டு இருக்கிறது., டெல்லி மைதானத்தில் இந்தியா ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் முதலில் பேட்டிங் இறங்கிய ஆப்கானிஸ்தான் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வருகிறது. 3 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்களை எடுத்து ஆப்கானிஸ்தான் ஆடி வருகிறது.
இந்திய அணியில் அஸ்வின் நீக்கப்பட்டு உள்ளார். ஷரத்துல் தாக்கூர் அணியில் சேர்க்கப்பட்டு உள்ளார். டெல்லியில் இந்த மேட்ச் நடந்து வருகிறது. ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் , ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.பிட்ச் ஸ்பின் பவுலிங்கிற்கு வசதியாக இருக்காது என்பதால் அஸ்வினுக்கு பதிலாக ஷரத்துல் தாக்கூர் சேர்க்கப்பட்டு உள்ளார். தொடக்கத்தில் வரிசையாக விக்கெட் விழுந்தது. ஆனால் தற்போது ஹஷ்மத்துல்லா ஷாஹிதி மற்றும் அஸ்மத்துல்லா உமர்சாய் ஆகியோர் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடி வருகின்றனர். இரண்டு பேருமே 40 ரன்களை கடந்து அரைசதம் நோக்கி சென்று கொண்டு இருக்கின்றனர்.80 ரன்கள் பார்ட்னர்ஷிப் மூலம் இந்திய அணிக்கு இவர்கள் இரண்டு பேருமே பிரஷர் கொடுத்துள்ளனர்.

பிரஷர்: இந்த மேட்சில் 24வது ஓவரில் ஜடேஜா விக்கெட் எடுத்தார். ஆனால் அது ப்ரீ ஹிட் என்பதால் விக்கெட் விழவில்லை. முதல் பந்தில் ஜடேஜா ஓவரில் ஹஷ்மத்துல்லா பவுண்டரி அடித்தார். அந்த பந்தில் ஒரு பீல்டர் வட்டத்திற்கு வெளியே நின்றார். இதை ஹஷ்மத்துல்லா கண்டுபிடித்து நடுவரிடம் கூறினார். இதனால் அடுத்த பந்தில் நோ பால் கொடுக்கப்பட்டது.
அடுத்த பந்தில் ஹஷ்மத்துல்லா கேட்ச் கொடுத்தாலும் கூட அது ப்ரீ ஹிட் என்பதால் விக்கெட் விழவில்லை. இந்த நிலையில் தற்போது இரண்டு வீரர்களும் அதிரடியாக ஆடிக்கொண்டு இருக்கின்றனர். கிட்டத்தட்ட 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடிக்கொண்டு இருக்கின்றனர். இந்தியா வீசிய சில லூஸ் பந்துகள் காரணமாக ஆப்கானிஸ்தான் அதிரடியாக ஆடிக்கொண்டு இருக்கின்றனர்.
( பிசிசிஐயை நினைச்சா அசிங்கமா இருக்கு! உலகக் கோப்பையே சர்க்கஸ் மாதிரி ஆகிடுச்சு! விளாசிய சுமந்த்! ஏன்?)
ஜடேஜா கோபம்: இந்த மேட்சில் ஜடேஜா பாதியில் கோபம் அடைந்தார். அவரின் ஓவருக்கு முன் பீல்டிங் செய்து கொண்டு இருந்தார். அப்போது அங்கே டோல் வாசித்துக்கொண்டு இருந்தனர். தொடர்ந்து டோல் வாசித்துக்கொண்டு இருந்ததால் ஜடேஜாவிற்கு குழப்பம் ஏற்பட்டது, அவருக்கு தொல்லையாக இருந்தது.
இதனால் கோபம் அடைந்த ஜடேஜா.. ஏ ஏய் அதை நிறுத்து என்பது போல கத்தினார். தன்னால் கவனிக்க முடியவில்லை என்று கூறினார். இதையடுத்து அந்த இசை உடனடியாக நிறுத்தப்பட்டது. அதன்பின் ஜடேஜா அங்கிருந்து செல்லும் வரை இசை வாசிக்கப்படவில்லை. அவர் சென்ற பின்பே வாசிக்கப்பட்டது. ஜடேஜா இப்படி இடையில் வாசிக்கப்பட்ட இசை கருவியை நிறுத்த சொன்ன சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க!












Click it and Unblock the Notifications