பிசிசிஐயை நினைச்சா அசிங்கமா இருக்கு! உலக கோப்பையே சர்க்கஸ் மாதிரி ஆகிடுச்சு! விளாசிய சுமந்த்! ஏன்?
சென்னை: உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது. இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம் பிசிசிஐ அமைப்பை பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். கிரிக்கெட் விமர்சகர் சுமந்த் சி ராமனும் பிசிசிஐ அமைப்பை விமர்சனம் செய்துள்ளார்.
இந்தியா ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி தற்போது நடந்து வருகிறது. இதில் முதலில் பேட்டிங் இறங்கிய ஆப்கானிஸ்தான் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வருகிறது. 3 விக்கெட்டுகளை இழந்து 66 ரன்களை எடுத்து ஆப்கானிஸ்தான் ஆடி வருகிறது.
இந்திய அணியில் அஸ்வின் நீக்கப்பட்டு உள்ளார். ஷரத்துல் தாக்கூர் அணியில் சேர்க்கப்பட்டு உள்ளார். டெல்லியில் இந்த மேட்ச் நடந்து வருகிறது. ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் , ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விமர்சனம்: கடந்த உலகக் கோப்பை வரை.. 50 ஓவர் உலக கோப்பை தொடர் நடக்கிறது என்றாலே பெரிய அளவில் கொண்டாட்டமான மனநிலை இருக்கும். மக்கள் பலரும் இதற்காக காத்து இருப்பார்கள் . தொடர் தொடங்குகிறது என்றாலே பெரிய எதிர்பார்ப்பு மனநிலை இருக்கும். ஆனால் இந்த முறை அப்படி கொண்டாட்டமான மனநிலை இல்லை.

உதாரணமாக முதல் போட்டி நடந்த அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் பெரிதாக கூட்டமே இல்லை. முதல் போட்டி நடந்த போதே பிசிசிஐ அமைப்பின் செயலாளராக இருக்கும் ஜெய் ஷா மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டன. மைதானத்தில் 10000 பேர் கூட இல்லை என்று விமர்சனம் வைக்கப்பட்டது. 1.5 லட்சம் பேர் இருக்க வேண்டிய மைதானத்தில் வெறும் 15000 பேர் கூட இல்லை. உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தில் இந்த நிலைமை. அதுவும் உலகக் கோப்பை கிரிக்கெட்டின் முதல் போட்டியில் இந்த நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால்தான் செயலாளர் ஜெய் ஷா மீது கடுமையாக விமர்சனம் வைக்கப்பட்டது.
ஐசிசி உலகக் கோப்பை 50 ஓவர் தொடர் 2023க்கு பொறுப்பான பிசிசிஐ செயலாளரான ஜெய் ஷா, இந்தியா நடத்தும் மிகப்பெரிய தொடரின் தொடக்க ஆட்டத்தில் தனது சொந்த மாநிலத்தில் 50% மைதானம் கூட நிரம்பியிருப்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. டிக்கெட் சரியாக விற்கப்படவில்லை. மிகக் குறைந்த அளவிலான டிக்கெட்டுகள் மட்டுமே உண்மையான ரசிகர்களுக்குக் கிடைத்தன. கடைசி வரை இவர்கள் டிக்கெட்டை விற்கவில்லை என்பது இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது.
தர்மசாலா: அதேபோல் தர்மசாலா மைதானம் மோசமாக இருக்கிறது. மைதானத்தில் ஓடவே முடியவில்லை. ஈரமாக இருக்கிறது. புல் தரை மோசமாக உள்ளது. புல் தரை ஈரமாக சொத சொதவென்று இருக்கிறது. இதனால் அங்கே ஆட முடியவில்லை என்று கிரிக்கெட் வீரர்கள் பலர் கூறி இருந்தனர். இதன் காரணமாகவும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா மீது கடுமையாக விமர்சனம் வைக்கப்பட்டது.
( இப்போ சொல்லுங்க சீக்கா! இதுதான் சுத்திப்பார்க்க வந்த பாகிஸ்தானா? கிரிஸ் ஸ்ரீகாந்தை விளாசிய நெட்டிசன்)
தொடக்க விழா : இந்த நிலையில் தற்போது தொடக்க விழா மீண்டும் நடக்க உள்ளது. அதன்படி அகமதாபாத்தில் இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் நடக்க உள்ளது. இந்த போட்டிக்கு முன்பாக தொடக்க விழா கொண்டாடப்பட உள்ளது. இதில் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். இதை பலரும் விமர்சனம் செய்கின்றனர்.
முதல் நாள் தொடக்க விழா நடத்தாமல் இப்போது நடத்துவதை விமர்சனம் செய்துள்ளனர். இதை கிண்டல் செய்துள்ள கிரிக்கெட் விமர்சகர் சுமந்த் சி ராமன், தொடருக்கான தொடக்க விழா நடத்தப்படவில்லை. ஆனால் ஒரே ஒரு உலக கோப்பை போட்டிக்கு இதெல்லாம் தேவையா? இந்த #CricketWorldCup2023 சர்க்கஸாக மாறி வருகிறது. பிசிசிஐ அமைப்பை நினைத்தால் அசிங்கமாக இருக்கிறது என்று சுமந்த் சி ராமன் கூறியுள்ளார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications