இப்போ சொல்லுங்க சீக்கா! இதுதான் சுத்திப்பார்க்க வந்த பாகிஸ்தானா? கிரிஸ் ஸ்ரீகாந்தை விளாசிய நெட்டிசன்
சென்னை: பாகிஸ்தான் அணி இந்தியாவை சுற்றிப்பார்க்க வந்ததாக கிரிஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கூறியதை தற்போது நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
சமீபத்தில் நீயா நானா நிகழ்ச்சி நடந்தது. உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் வெல்லப்போவது யார் என்பது தொடர்பாக இதில் விவாதம் செய்யப்பட்டது. அதில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா வெல்லும் என்று ஒரு பக்கம் மக்கள் பேச.. இன்னொரு பக்கம் இந்தியா வெல்லாது என்று மற்றவர்கள் பேசினார்கள்.
இந்த விவாதம் சுவாரசியமாக நடந்தது. அதில் இந்தியா ஏன் வெல்லும் என்பதற்கான காரணங்கள் அடுக்கப்பட்டன. அதேபோல் இந்தியா ஏன் வெல்லாது என்பதற்கான காரணங்கள் கூட எதிர் தரப்பால் வைக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட இந்திய அணியின் முன்னாள் வீரர் கிரிஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கலந்து கொண்டார்.

அதேபோல் கிரிக்கெட் வல்லுனர் நானியும் இதில் கலந்து கொண்டார். இதில் பேசிய நானி .. இந்திய அணி பேலன்ஸாக இருக்கிறது. அணியின் பேட்டிங், பவுலிங் இரண்டும் உள்ளது. பிட்ச் எல்லாம் நமக்கு சாதகமாக உள்ளது. அதனால் இந்தியாதான் இதில் வெல்லும் என்று கூறினார். இன்னொரு பக்கம் இந்தியா வெற்றிபெறாது என்று எதிர் தரப்பில் இருந்த ஸ்ரீகாந்த் குறிப்பிட்டார்.
ஸ்ரீகாந்த்: இதில் பாகிஸ்தான் பற்றி பேச்சு வந்த போது.. பாகிஸ்தான் எல்லாம் இங்கே வெற்றிபெற வாய்ப்பே இல்லை. அவர்கள் சுற்றி பார்க்க வந்துள்ளனர். இதுதான் அண்ணா அறிவாலயம்.. இதுதான் மெரினா.. இதுதான் அண்ணா சமாதி என்று சுற்றிப்பார்க்க வந்துள்ளனர். அவர்கள் இதற்காகவே வந்துள்ளனர் என்று கூறினார். அப்போது பதிலடி கொடுத்த நீயா நானா கோபிநாத்.. சார் நீங்களே கூட 83 உலகக் கோப்பையில் கப் அடிக்க சென்ற போதும் கூட..
இப்படித்தான் நடந்தது என்பதை மறக்க வேண்டாம். நீங்களும் கூட சுற்றி பார்க்கவே சென்று.. கடைசியில் கோப்பையை வென்றீர்கள் என்பதை மறக்க வேண்டாம் என்று கூறி இருந்தார். இப்படிப்பட்ட நிலையில்தான் நேற்று நடந்த போட்டியில் பாகிஸ்தான் அதிரடியாக ஆடி வென்றுள்ளது. நேற்று இலங்கை - பாகிஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத்தில் மேட்ச் நடந்தது. உலகக் கோப்பை வரலாற்றில் மிகப்பெரிய சேசிங் செய்து நேற்று பாகிஸ்தான் சாதனை படைத்தது.
( தோனி செய்த பெரிய தவறு! நேற்று நடந்த மேட்சில் கவனிச்சீங்களா?சொல்லி சொல்லி அடித்து காட்டிய வீரர்! ஷாக் )
நேற்று முதலில் இறங்கிய இலங்கை அணி குஷால் மெண்டிஸ் அதிரடியால் 344 ரன்களை எடுத்தது. குஷால் இதில் 122, சமரவிக்ரம் 108 ரன்கள் எடுத்து அதிரடி காட்டினர். இதையடுத்து இறங்கிய பாகிஸ்தான் அடுத்தடுத்து அவுட்டாகி தோல்வி அடையும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் பாகிஸ்தானின் டாப் ஆர்டரில் பாபர், இமாம் உல் ஹக் அவுட் ஆனாலும் கூட அப்துல்லா., ரிஸ்வான் கூட்டணி அமைத்து அதிரடியாக ஆடி வந்தனர். தொடக்கத்தில் இருந்து அதிரடி காட்டிய அப்துல்லா 103 பந்தில் 113 ரன்கள் எடுத்தார். இன்னொரு பக்கம் உடல் முழுக்க அடியை வாங்கிக்கொண்டு ரிஸ்வான் 131 ரன்களை 121 பந்தில் எடுத்தார்.
இதன் மூலம் எட்டமுடியாத இலக்கு என்று நினைக்கப்பட்ட 345 ரன்களை வெறும் 48.2 ஓவரில் எடுத்து பாகிஸ்தான் வென்றது. இந்த நிலையில்தான் நெட்டிசன்கள் பலரும் இதுதான் சுற்றி பார்க்க வந்த பாகிஸ்தானா.. பாருங்கள் எவ்வளவு அதிரடியாக ஆடுகிறார்கள். எவ்வளவு சிறப்பாக ஆடுகிறார். இதை பாருங்கள்.. இனியும் அவர்களை கலாய்க்க முடியுமா என்று கேட்டுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications