Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரிவினைவாத தலைவர் யாசீன் மாலிக்கை மன்மோகன் சிங் சந்தித்தது ஏன்? மக்களவையில் நிர்மலா சீதாராமன் கேள்வி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஜம்மு காஷ்மீர் பிரிவினைவாத அமைப்பான JKLF தலைவர் யாசீன் மாலிக்குடன் 2006 ஆம் ஆண்டு மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் பேச்சு வார்த்தை நடத்தியதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டி இருக்கிறார்.

விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி இயக்கத்தில் வெளியான தி காஷ்மீர் பைல்ஸ் படத்தை பார்த்துவிட்டு பிரதமர் நரேந்திர மோடி நேரில் அழைத்து படக்குழுவுக்கு பாராட்டு தெரிவித்தார். அத்துடன் பாஜக ஆளும் மாநிலங்களில் இந்த படத்துக்கு வரிவிலக்கும் அளிக்கப்பட்டது.

அதே நேரம் தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தில் உண்மைக்கு புறம்பான தகவல்களும், மதக் கலவரத்தை தூண்டும் வகையிலான காட்சிகளும் இருப்பதாக பலர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

 கேரள காங்கிரஸ் குற்றச்சாட்டு

கேரள காங்கிரஸ் குற்றச்சாட்டு

இந்த படம் குறித்து கேரள மாநில காங்கிரஸின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் விமர்சனம் முன்வைக்கப்பட்டது. அதில், "காஷ்மீர் தாக்குதல்களின்போது பண்டிட்டுகளுக்கு பாதுகாப்பு அளிக்காமல் அப்போது ஆளுநராக இருந்த பாஜக-ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர் ஜக்மோகன் அவர்களை காஷ்மீரை விட்டு வெளியேற சொன்னார்." எனக் குற்றம்சாட்டியது.

நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

மக்களவையில் தாக்கல்செய்யப்பட்ட ஜம்மு காஷ்மீருக்கான ரூ.1.4 லட்சம் கோடி மதிப்பு பட்ஜெட் மீதான விவாதத்துக்கு நிர்மலா சீதாராமன் பதிலளித்துப் பேசினார். அப்போது கேரள மாநில காங்கிரஸின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அவர், "காஷ்மீரில் பண்டிட்டுகள் வெளியேற்றப்பட்டபோது காங்கிரஸ் அப்போது கூட்டணியில் இருந்தது. காஷ்மீரின் முதலமைச்சராக இருந்தவர் பண்டிட்டுகளை காப்பாற்ற தவறிவிட்டார்.

யாசீன் மாலிக்கை மன்மோகன் சிங் சந்தித்தது ஏன்?

யாசீன் மாலிக்கை மன்மோகன் சிங் சந்தித்தது ஏன்?

காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது, பிரதமராக இருந்த மன்மோகன் சிங் இந்திய விமானப்படை அதிகாரிகள் 4 பேரை சுட்டுக்கொன்ற ஜம்மு காஷ்மீர் பிரிவினைவாத குழுவின் தலைவர் யாசீன் மாலிக்கை சந்தித்து பேசினார். அவருடன் கைகளை குலுக்கினார். இந்திய விமானப்படை அதிகாரியை தான் கொன்றதாக சர்வதேச தொலைக்காட்சி முன் ஒப்புக்கொண்டவர் யாசின் மாலிக்.

சிறப்பு சட்டம் ரத்துக்கு எதிராக நிர்மலா பேச்சு

சிறப்பு சட்டம் ரத்துக்கு எதிராக நிர்மலா பேச்சு

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த 370 என்ற சிறப்பு அதிகாரச் சட்டத்தால் அம்மாநிலம் சாதாரண நிலையில் இல்லை. சிறப்பு சட்டத்தை ரத்து செய்வதற்கு முன் அங்கு போலியான இயல்புநிலை இருந்தது. அந்த சட்டத்தை நமது அரசு ரத்து செய்ததற்கு பிறகுதான் அங்கு இயல்பான நிலை நீடிக்கிறது. காஷ்மீர் பண்டிட்டுகளின் மறுவாழ்வு தொடர்பாக அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்." என்றார்.

எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கருத்தின்போது காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சிகளின் உறுப்பினர்கள் இடைமறிக்க முயன்றனர். ஆனால், சபாநாயகர் ஓம் பிர்லா எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு அனுமதி மறுத்தார். இதனை எதிர்த்து அவர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+