‛‛50 நாள் சிறை’’.. கைதாகியும் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யாதது ஏன்? கெஜ்ரிவால் சொன்ன காரணம்
டெல்லி: அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாலும் கூட முதல்வர் பதவியை ராஜினாமா செய்யாதது ஏன்? என்பது பற்றி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம் அளித்துள்ளார்.
டெல்லியில் ஆம்ஆத்மி கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார். இந்நிலையில் தான் டெல்லி அரசு கொண்டு வந்த புதிய மதுபான கொள்கை வழக்கில் முறைகேடு புகார் எழுந்தது. இதையடுத்து புதிய மதுபான கொள்கை கைவிடப்பட்டது.

இருப்பினும் முறைகேடு புகாரில் ஆம்ஆத்மி கட்சியின் தலைவர்கள் அடுத்தடுத்து சிபிஐ, அமலாக்கத்துறை ரெய்டுக்கு உள்ளாகி கைது செய்யப்பட்டனர். இதில் டெல்லி துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோடியா, சஞ்சய் சிங் எம்பி, அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டனர். அதேபோல் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவின் மகள் கவிதாவும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதில் மணிஷ் சிசோடியா, கவிதா சிறையில் உள்ளனர். சஞ்சய் சிங் எம்பியை தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று ஜாமீனில் திகார் சிறையில் இருந்து வெளியே வந்தார். அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி கைது செய்யப்பட்ட நிலையில் நேற்று உச்சநீதிமன்றம் வழங்கிய ஜாமீனை (ஜுன் 1ம் தேதி வரை இடைக்கால ஜாமீன்) தொடர்ந்து 50 நாட்களுக்கு நேற்று கெஜ்ரிவால் சிறையில் இருந்து வெளியே வந்தார்.
இதையடுத்து இன்று அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி கன்னாட் பிளேஸில் உள்ள ஹனுமான் கோவிலுக்கு தனது மனைவி சுனிதா, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உள்ளிட்டோருடன் சென்று சாமி தரிசனம் செய்தார். அதன்பிறகு கட்சி அலுவலகத்திற்கு சென்றார். அப்போது அவரை பார்த்து ஆம்ஆத்மி தொண்டர்கள் உற்சாகமடைந்தனர். இதையடுத்து கெஜ்ரிவால் அவர்களுக்கு ‛பிளையிங் கிஸ்' கொடுத்தார். அதன்பிறகு அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
நான் சிறையில் இருந்து நேரடியாக உங்களை பார்க்க வருகிறேன். 50 நாட்களுக்கு பிறகு இது உண்மையில் சந்தோஷமாக இருக்கிறது. நான் எனது மனைவி பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுடன் ஹனுமன் கோவிலுக்கு சென்றேன். பஜ்ரங்பாலி நம்மையும், நம் கட்சியையும் ஆசீர்வதிப்பார். ஆம்ஆத்மி கட்சி என்பது 2 மாநிலங்களில் ஆட்சி செய்யும் சிறிய கட்சி.
ஆனால் பிரமதர் மோடி ஆம்ஆத்மியை நசுக்க நினைக்கிறார். இதனால் அடுத்தடுத்து 4 தலைவர்களை சிறைக்கு அனுப்பினார். கட்சியின் 4 முக்கிய லீடர்கள் சிறைக்கு சென்றால் கட்சியின் செயல்பாடு முடங்கிவிடும் என பிரதமர் மோடி நம்புகிறார். மேலும் ஆம்ஆத்மி கட்சிதான் நாட்டின் எதிர்காலத்துக்காக இருப்பதாகவும் அவர் நினைக்கிறார். இதனால் தான் ஆம்ஆத்மியை நசுக்க நினைக்கிறார்.
மேலும் நான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாலும் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யாதது ஏன்?. ஏனென்றால் ஆம்ஆத்மி கட்சி டெல்லியில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. அதோடு டெல்லியில் நம்மை அடுத்த 20 ஆண்டுகளில் வீழ்த்த முடியாது என்பதும் அவர்களுக்கு (பாஜகவினருக்கு) தெரியும். இதனால் சதித்திட்டம் தீட்டி என்னை ராஜினாமா செய்ய வைத்து ஆம்ஆத்மி அரசை கவிழ்க்க நினைத்தனர். இதனால் தான் நான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவில்லை. சிறையில் இருந்தே அரசை நடத்தினேன்'' என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications