2 முறை தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை ஏற்காத மோடி.. கடைசியில் மனம் மாறியது எப்படி? ஷாக் பின்னணி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரின் போராட்டத்தை தொடர்ந்து நேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது. முன்னதாக போராட்டத்துக்கு மத்தியில் தர்மேந்திர பிரதான் 2 முறை தனது பதவியை ராஜினாமா செய்ய முன்வந்தும் பிரமதர் மோடி ஏற்காததும், கடைசியில் நேற்று ராஜினாமா முடிவை ஏற்றதன் பின்னணி குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

'நீட்' வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் ஒரு மாதத்துக்கு மேலாக போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தை தொடர்ந்து தர்மேந்திர பிரதான் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.

why-did-pm-modi-accepts-dharmendra-pradhan-resignation-yesteday-after-rejected-two-times-earlier

இதையடுத்து கல்வித்துறை என்பது மத்திய உணவு விநியோகம் மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சராக இருக்கும் பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஜந்தர் மந்தரில் நடந்த கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரின் போராட்டம் முடிவுக்கு வந்தது.

இந்நிலையில் தான் தர்மேந்திர பிரதானின் ராஜினாமா குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரின் போராட்டம் தீவிரமானதால் தர்மேந்திர பிரதான் 2 முறை தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய முன்வந்துள்ளார். ஆனால் பிரதமர் மோடி ஏற்கவில்லை என்பதும், கடைசியாக நேற்று வழியின்றி தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை ஏற்றது தெரியவந்துள்ளது.

அதாவது கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் தங்களின் பிரதான கோரிக்கையாக தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை தான் முன்வைத்தனர். கடந்த 20ம் தேதி கரப்பான்பூச்சி கட்சியினர் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி சென்றனர். அப்போது போலீசார் தடியடி நடத்தினர். போலீசார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. டெல்லியே போர்க்களமாக மாறியது. இதுதொடர்பாக அன்றைய தினம் மூத்த அமைச்சர்களின் முக்கிய ஆலோசனை கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தின்போது தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ய முன்வந்தார். ஆனால் பிரதமர் மோடி ஏற்கவில்லை. ராஜினாமா முடிவை கைவிட்டு கல்வித்துறையில் சீர்த்திருத்தம் கொண்டு வருவதற்கான பணியை மேற்கொள்ள உத்தரவிட்டார். கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரை எப்படியாவது சமாதானம் செய்துவிடலாம் என்று மத்திய அரசு நம்பியதோடு, வினாத்தாள் கசிவுக்கு விரைவு நீதிமன்றம்அமைத்தல், கல்வித்துறை செயலாளர் மாற்றம், தேசிய தேர்வு முகமையில் 47 அதிகாரிகள் பணி நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்தது.

ஆனால் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் சமாதானம் அடையவில்லை. தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை தான் முன்வைத்து தொடர்ந்து போராட்டம் நடத்தினர். இந்த சமயத்தில் மீண்டும் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய முன்வந்தார். அப்போதும் மோடி தடுத்து வைத்திருந்தார். இதற்கிடையே தான் நேற்று முன்தினம் 2வது கட்டமாக மத்திய அமைச்சர்கள் ஜேபி நட்டா, ஜிதேந்திர சிங் ஆகியோர் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரின் பிரதிநிதிகளுடன் 2வது கட்ட பேச்சுவார்த்தையை நடத்தினர்.

அப்போது அவர்கள் தர்மேந்திர பிரதான் கட்டாயமாக ராஜினாமா செய்ய வேண்டும். இல்லாவிட்டால் மீண்டும் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி செல்வோம் என்று மிரட்டல் விடுத்தனர். ஏற்கனவே கடந்த 20ம் தேதி நாடாளுமன்றம் நோக்கி பேரணியால் டெல்லியே போர்க்களமானது. இதனால் மத்திய அரசு மீண்டும் நாடாளுமன்றம் நோக்கிய பேரணியை விரும்பவில்லை. அதுமட்டுமின்றி இந்த போராட்டத்தை பயன்படுத்தி நாட்டில் அமைதியை சீர்க்குலைக்க தேசவிரோத சக்திகள் முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக உளவுத்துறையும் வார்னி்ங செய்து அறிக்கை சமர்ப்பித்து இருந்தன. குறிப்பாக பாகிஸ்தானில் இருந்து 100 இன்ஸ்டாகிராம் கணக்குகள் மூலமாக நம் நாட்டுக்கு எதிராக தவறான தகவல்கள் பரப்பபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

அதோடு குற்றப்பின்னணி கொண்ட 400க்கும் அதிகமானவர்கள் ஜந்தர் மந்தர் போராட்டத்தில் நுழைந்து இருப்பது Facial Recognition System மூலமாக கண்டறியப்பட்டது. இதனால் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கத்தில் வேறு வழியின்றி பிரதமர் மோடி, நேற்று தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவிற்கு ஓகே சொன்னார். இதையடுத்து தான் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி திரெளபதி முர்மு ஏற்றுக்கொண்ட பிறகு கல்வித்துறை பொறுப்பு மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி வசம் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+