முஷரப்பை புகழ்ந்து பேசினேன் என்றால்.. நீங்கள் 2003-ல் செய்தது என்ன? பாஜகவை அட்டாக் செய்த சசிதரூர்
இந்தியாவுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்ட பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் அதிபரை புகழ்ந்து பேசுவதா? என எதிர்ப்பு தெரிவித்த பாஜக சசிதரூருக்கு கடும் கண்டனம் தெரிவித்தது.
டெல்லி: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் நேற்று காலமானார். முஷரப் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ட்விட் செய்த சசிதரூர், அவரை புகழ்ந்து பதிவிட்டு இருந்தார். முஷரப்பை பாராட்டியதற்கு பாஜக, சசி தரூரை கடுமையாக சாடியிருந்த நிலையில் சசிதரூர் தற்போது பதிலடி கொடுத்து ட்விட் செய்துள்ளார்.
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப் நேற்று மரணம் அடைந்தார். முஷரப் மறைவு குறித்து பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்தனர்.
அந்த வகையில், முஷரப் மறைவுக்கு காங்கிரஸ் எம்.பியும் முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சருமான சசிதரூர் இரங்கல் தெரிவித்து தனது ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.

வருடம் தோறும் சந்தித்துள்ளேன்
அந்த ட்விட்டர் பதிவில், "பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப் மறைந்துவிட்டார். ஒரு காலத்தில் இந்தியாவின் அடக்க முடியாத எதிரியாக இருந்த முஷரப், 2002 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரை சமாதானத்திற்கான உண்மையான சக்தியாக மாறினார். ஐக்கிய நாடுகள் அவையில் இருந்த காலத்தில் அவரை வருடம் தோறும் சந்தித்துள்ளேன். தனது வியூகத்தில் தெளிவாக முஷரப் செயல்பட்டார். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்" என்று பதிவிட்டு இருந்தார்.

முஷரப் ஒரு சர்வாதிகாரி
இந்தியாவுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்ட பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் அதிபரை புகழ்ந்து பேசுவதா? என எதிர்ப்பு தெரிவித்த பாஜக சசிதரூருக்கு கடும் கண்டனம் தெரிவித்தது இருந்தது. இது தொடர்பாக பாஜக செய்தி தொடர்பாளர் ஷெசாத் பூனவல்லா கூறுகையில், "முஷரப் ஒரு சர்வாதிகாரி. கார்கில் போரை கட்டமைத்தவர். தலீபான்களையும் பின்லேடனையும் சகோதரக்ள் என்றும் மாவீரர்கள் என்று பாராட்டியிருந்தவர்.

பாகிஸ்தான் கருத்தையே ஆதரிக்கிறது
கார்கில் போரில் இறந்த தங்கள் நாட்டு வீரர்களின் உடலைக் கூட வாங்க மறுத்தவர். கொடிய குற்றங்களில் ஈடுபட்ட முஷரப்பை காங்கிரஸ் கட்சி புகழ்கிறது. ராகுல் காந்தியை ஜெண்டில்மேன் என்று முஷரப் புகழ்ந்து பேசியிருந்தார். தனது குடும்பத்தினரை மன்மோகன் சிங் விருந்திற்கு அழைத்ததாக கூறினார். முஷரப்புடன் காங்கிரஸ் நெருக்கமாக இதுபோன்ற விஷயங்கள்தான் காரணம் ஆகிவிட்டது போல் தெரிகிறது. 370- பிரிவு நீக்கத்தை எதிர்த்தது, சர்ஜிக்கல் தாக்குதலை சந்தேப்பட்டது என பாகிஸ்தானின் கருத்தையே காங்கிரஸ் எதிரொலிக்கிறது. இது வெட்கக்கேடானது" என்று பாஜக சாடியிருந்தது.

சசிதரூர் பதிலடி
பாரதிய ஜனதா கட்சி கடுமையாக விமர்சித்து இருந்த நிலையில், திருவனந்தபுரம் எம்.பி சசிதரூர் பாஜகவிற்கு பதிலடி கொடுத்துள்ளார். வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசு முஷரப்பிடம் சண்டை நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியது எனவும் சசிதரூர் கேள்வி எழுப்பியிருக்கிறார். இது தொடர்பாக சசிதரூர் தனது ட்விட் பதிவில் கூறியிருப்பதாவது:- "தேசபக்தி மிக்க இந்தியர்களுக்கு வெறுப்பானவராக முஷரப் இருந்திருந்தால், அவருடன் பாஜக அரசாங்கம் 2003 ஆம் ஆண்டு சண்டை நிறுத்தம் தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தியது ஏன்?. 2004 ஆம் ஆண்டு முஷரப் - வாஜ்பாய் கூட்டு அறிக்கையில் கையெழுத்திட்டது ஏன்? அப்போது அவர் நம்பகமான அமைதி கூட்டாளியாக பார்க்கப்படவில்லையா? என்று பதிவிட்டு இருக்கிறார்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான்












Click it and Unblock the Notifications