சைதை துரைசாமியின் மகன் வெற்றி இமாச்சல் பிரதேசம் வந்தது ஏன்? எதற்காக?
டெல்லி: இமாச்சல் பிரதேசத்திற்கு சைதை துரைசாமியின் மகன் எதற்காக சென்றார் என்ற விவரங்கள் வெளியாகியுள்ளன.
சென்னையின் 48-ஆவது மேயராக 2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு அப்பதவியில் இருந்தார். இவருக்கு மல்லிகா என்ற மனைவியும் வெற்றி துரைசாமி என்ற மகனும் உள்ளனர்.

சைதை துரைசாமி மனிதநேயம் ஐஏஎஸ் அகாதெமி என்ற ஒன்றை நடத்தி வருகிறார். இதற்கு அவருடைய மகன் வெற்றி உருதுணையாக இருந்து வருகிறார். இந்த நிலையில் அவர் இயக்குநராகவும் உள்ளார். இவர் 2021 ஆம் ஆண்டு என்றாவது ஒரு நாள் என்ற படத்தை இயக்கியுள்ளார்.
இந்த நிலையில் இமாச்சல் பிரதேசத்தில் கசாங் நலா அருகே என் 5 எனும் தேசிய நெடுஞ்சாலையில் அந்த மாநில பதிவு எண் கொண்ட காரில் வெற்றி, அவருடைய நண்பர் கோபிநாத் உள்ளிட்ட 3 பேர் சென்றுக் கொண்டிருந்தனர்.
அப்போது கார் தாறுமாறாக ஓடி அங்கிருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. ஆற்றில் மூழ்கிய நிலையில் காரின் சக்கரங்கள் வெளியே தெரிந்ததால் அவ்வழியாக வந்த சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்து போலீஸில் தகவல் கொடுத்தனர்.
போலீஸாரும் தேசிய பேரிடர் மீட்பு படையினரும் சம்பவ இடத்திற்கு வந்தனர். அங்கு கார் கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்து பாலத்தின் கவிழ்ந்த போது அங்கிருந்த கற்களில் விழுந்து திருப்பூரை சேர்ந்த கோபிநாத் காயமடைந்தார். இதையடுத்து அவர் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அது போல் பேரிடர் மீட்பு குழுவினர், சட்லஜ் ஆற்றில் விழுந்த காரை மீட்டனர். அதில் கசா பகுதியை சேர்ந்த ஓட்டுநர் டென்சின் என்பவரின் உடல் மீட்கப்பட்டது. சைதை துரைசாமியின் மகன் வெற்றியை காணவில்லை என்பதால் அவரை தேடும் பணிகள் தொடர்ந்து வருகின்றன.
வெற்றி, சுற்றுலாவுக்காக இமாச்சல் வந்ததாக கூறப்படும் நிலையில் அவர் த்ரில்லர் படத்திற்கு லொகேஷன் பார்க்க தனது உதவியாளர் கோபிநாத்துடன் வந்தார். அவர் ஓட்டுநர் டென்சின் என்பவருடன் வாடகை காரில் சென்ற போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் நெஞ்சை பிடித்தபடியே டென்சின் அவதிப்பட்ட நிலையில் ஒரு கட்டத்தில் காரை இயக்க முடியாமல் சாலையில் தாறுமாறாக ஓடியது.
இதையடுத்து அங்கிருந்த பள்ளத்தில் கவிழ்ந்துபோது விபத்தில் சிக்கியது தெரியவந்துள்ளது. தற்போது வெற்றியை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. பனிப்பொழிவு அதிகம் காணப்படுவதால் வெற்றியை தேடும் பணிகளில் அவ்வப்போது தொய்வு ஏற்பட்டுள்ளது. சட்லஜ் வற்றாத நதிகளில் ஒன்றும் ஆகும். இங்கு எப்போதுமே தண்ணீர் இருந்து கொண்டே இருக்கும்.
-
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்?












Click it and Unblock the Notifications