டீமை விட்டே அனுப்புங்க.. டென்சன் ஏற்றிய இந்திய வீரர்.. வசமாக மாட்டிகிட்டாரே.. அடுத்த மேட்சில் ஆப்பு
சென்னை: 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி வீரர் ஒருவர் ஆடிய விதம் பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான முதல் உலகக் கோப்பை 2023 லீக் ஆட்டம் இரண்டு நாட்களுக்கு முன் நடந்தது. நேற்று முதலில் பேட்டிங் இறங்கிய ஆஸ்திரேலியா 199க்கு ஆல் அவுட ஆனது. ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் யாரும் அரைசதம் கூட அடிக்கவில்லை.
அந்த போட்டியில் ஜடேஜாதான் ஆட்டத்தை மாற்றினார். இன்று ஜடேஜா மட்டும் 3 விக்கெட், குல்தீப், பும்ரா 2 விக்கெட் , சிராஜ், அஸ்வின் தலா 1 விக்கெட் எடுத்தனர். இதன் பின் இறங்கிய இந்திய அணி கோலியின் 85 மற்றும் கே எல் ராகுலின் 97 ரன்கள் காரணமாக இந்தியா வென்றது.
இந்த நிலையில்தான் தற்போது இந்தியா ஆப்கானிஸ்தான் இடையிலான ஆட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில், இந்திய அணியில் அஸ்வின் நீக்கப்பட்டு உள்ளார். ஷரத்துல் தாக்கூர் அணியில் சேர்க்கப்பட்டு உள்ளார். டெல்லியில் இந்த மேட்ச் நடந்து வருகிறது. ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் , ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் முதலில் பேட்டிங் இறங்கிய ஆப்கானிஸ்தான் அணி தொடக்கத்திலேயே 3 விக்கெட்டுகளை இழந்தது. டெல்லி பிட்ச் ஸ்பின் பவுலிங்கிற்கு வசதியாக இருக்காது என்பதால் அஸ்வினுக்கு பதிலாக ஷரத்துல் தாக்கூர் சேர்க்கப்பட்டு உள்ளார். தொடக்கத்தில் வரிசையாக விக்கெட் விழுந்தது. ஆனால் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி மற்றும் அஸ்மத்துல்லா உமர்சாய் ஆகியோர் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடினர்.
இரண்டு பேருமே மிடில் ஓவர்களில் அதிரடியாக ஆடி ஆப்கானிஸ்தான் அணியை சரிவில் இருந்து மீட்டனர். ஹஷ்மத்துல்லா ஷாஹிதி 80 ரன்கள், அஸ்மத்துல்லா உமர்சாய் 62 ரன்கள் எடுத்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். ஆனால் இரண்டு பேரும் அவுட்டான பின் ஆப்கானிஸ்தான் வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். இதனால் 272-8 ரன்கள் எடுத்த நிலையில் ஆப்கானிஸ்தான் அணி இன்னிங்ஸ் முடிந்தது.
சிராஜ் பவுலிங்: இந்த மேட்சில் பும்ரா மீண்டும் பார்மிற்கு திரும்பினார். டெல்லி பிட்ச் பவுலிங்கிற்கு சாதகமாக இல்லை என்றாலும் வேகமான பவுலிங்கை பயன்படுத்திக்கொண்டு அவர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை எடுத்தார். மொத்தம் 4 விக்கெட்டுகளை எடுத்த பும்ரா வெறும் 39 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார்.
ஆனால் இன்னொரு பக்கம் சிராஜ் 9 ஓவர் போட்டு ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. 76 ரன்கள் கொடுத்த அவர்.. 8.40 எக்கனாமியில் பவுலிங் செய்தார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மேட்சிலும் தொடக்கம் முதலே சரியாக பவுலிங் செய்யாத அவர் கடைசி ஓவரில் மட்டுமே ஒரே ஒரு விக்கெட் எடுத்தார். இரண்டு மேட்சிலும் லூஸ் பந்துகளை போட்டு இவர் அவுட் ஆனார்.

இரண்டு மேட்சிலும் அவரின் பவுலிங்கில் பெரிய அளவில் சோபிக்கவில்லை. முக்கியமாக சரியான லைன் மற்றும் லென்தில் கூட அவர் பவுலிங் செய்யவில்லை. இந்த நிலையில்தான் அடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக நடக்கும் மேட்சில் அவரை நீக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஷமியை சேர்க்க வேண்டும்.
இந்த போட்டி அகமதாபாத்தில் நடக்கிறது. அந்த பிட்ச் குஜராத்தில் ஷமி ஐபிஎல் ஆடுகையில் அவருக்கு பிரபலமான பிட்ச். அங்கே நன்றாக அவர் விக்கெட்டும் எடுப்பார். அந்த வகையில், ஷமியை அணியில் எடுத்துவிட்டு சிராஜை அணியில் இருந்து எடுக்க வேண்டும். அவர் தொடர்ந்து அணியில் நீடிக்க கூடாது என்று நெட்டிசன்கள் விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications