உங்களால் சம்பாதிக்க முடியாதா? ரூ.12 கோடி + BMW காரை ஜீவனாம்சம் கேட்ட இளம்பெண்ணை விளாசிய தலைமை நீதிபதி
டெல்லி: திருமணமாகி 18 மாதங்கள் மட்டுமே கணவருடன் சேர்ந்து வாழ்ந்துவிட்டு பிரிந்த இளம்பெண் ஒருவர் தனது கணவரிடம் இருந்து ரூ.12 கோடி, மும்பையில் உள்ள ஒரு வீடு, பிஎம்டபிள்யூ காரை ஜீவனாம்சமாக கேட்ட இளம்பெண்ணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பிஆர் கவாய் விளாசினார். உங்களால் பணம் சம்பாதிக்க முடியாதா? படித்த இளம்பெண் யாரையும் நம்பி இருக்க கூடாது. கணவரின் பணத்தை சார்ந்து இருக்காமல் சுயமாக சம்பாதிக்க வேண்டும் என்று கூறினார்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்தவருக்கும், இளம்பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. இதில் இளைஞர் பணக்காரர். திருமணமான புதிதில் அவர்கள் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். அதன்பிறகு கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது.

இதனால் இருவரும் பிரிந்து வாழ தொடங்கினர். மும்பையில் கல்பட்டாரு குடியிருப்பு பகுதியில் இருக்கும் ஒரு பிளாட்டை இளம்பெண்ணுக்கு வழங்க ஒப்புக்கொள்ளப்பட்டது. இருவரும் கையெழுத்திட்டனர்.
மேலும் மும்பை உயர்நீதிமன்றத்தில் விவாகரத்து கோரப்பட்டது. இதற்கிடையே தான் அந்த இளம்பெண் கூடுதல் ஜீவனாம்சம் கேட்க தொடங்கினார். இதற்கு அவரது கணவர் மறுப்பு தெரிவித்தார். இதுதொடர்பாக விசாரணை நடத்திய மும்பை உயர்நீதிமன்றம், சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு முதலில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் மற்றும் உறுதிமொழி பத்திரத்தில் இருந்து விலக முழு உரிமை உள்ளது என்று உத்தரவிட்டது.
இதனால் அந்த இளைஞர், இளம்பெண் கேட்பதை ஜீவனாம்சமாக வழங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். இதையடுத்து அவர் டெல்லி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி பிஆர் கவாய், நீதிபதிகள் கே வினோத் சந்திரன் மற்றும் என்பி அஞ்சரியா ஆகியோர் அமர்வில் நேற்று விசாரிக்கப்பட்டது.
இளம்பெண் சார்பில் ஒரே நேரமாக ரூ.12 கோடி, பிஎம்டபிள்யூ கார் மற்றும் மும்பையில் உள்ள ஒரு பிளாட் உள்ளிட்டவற்றை அவர் ஜீவனாம்சமாக கோரியிருந்தார். அப்போது தலைமை நீதிபதி பிஆர் கவாய், ஜீவனாம்சம் கோரிய இளம்பெண்ணுக்கு முக்கிய அட்வைசை வழங்கினார்.
இளம்பெண் தரப்பில், ‛‛கணவர் பணக்காரர். அவர் அதிகம் சம்பாதிக்கிறார். நான் மனஅழுத்தம், மனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டதாக கூறி துன்புறுத்தினார். இப்போது விவாகரத்து கோரியுள்ளார்'' என்று கூறினார்.
அதற்கு இளைஞர் தரப்பில் ஆஜரான வழக்கில் சீனியர் வழக்கறிஞர் மாதவி திவான், ‛‛இளம்பெண் ஏற்கனவே மும்பையில் வசித்து வருகிறார். அவருக்கு 2 பார்க்கிங் வசதிகளுடன் கூடிய பிளாட் இருக்கிறது. அதில் இருந்து வருமானம் வருகிறது. அதேபோல் அவர் வேலையும் செய்ய வேண்டும். இதனால் அவர் இந்த மாதிரியான டிமாண்ட்டை வைக்க கூடாது. அவர் கேட்கும் பிஎம்டபிள்யூ கார் 10 ஆண்டு பழமையானது. இப்போது அந்த மாடல் நிறுத்தப்பட்டுள்ளது'' என்று வாதாடினார்.
இருதரப்பு வாதங்களை கேட்ட தலைமை நீதிபதி பிஆர் கவாய், ‛‛திருமணமாகி 18 மாதங்கள் மட்டுமே கணவன் - மனைவியாக சேர்ந்து வாழ்ந்துள்ளனர்கள். இப்போது ரூ.12 கோடி, மும்பையில் உள்ள ஒரு பிளாட், பிஎம்டபிள்யூ காரை ஜீவனாம்சமாக கேட்கிறீர்கள். ஒரு மாதத்துக்கு ஒரு கோடி கேட்கிறீர்கள்.
எம்பிஏ படித்து உள்ளீர்கள். ஐடி துறையில் எக்ஸ்பர்ட்டாக பணியாற்றிய அனுபவம் கொண்டவராக இருக்கிறீர்கள். படித்த இளம்பெண் கணவரின் பணத்தை சார்ந்து இருக்காமல் சுயமாக சம்பாதிக்க வேண்டும். நீங்களே பணம் சம்பாதித்த சாப்பிட வேண்டும். அதற்கான திறமை உங்களிடம் உள்ளது'' என்றார். மேலும் இருவரும் தங்களின் சம்பளம் மற்றும் வருமானங்கள் குறித்த ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி விசாரணையை ஒத்திவைத்தார்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications