கொரோனா பரவல் உச்சத்தில் இருக்கும்போது.. குறைவான தடுப்பூசிகளுக்கு மட்டும் ஆர்டர்.. காரணம் என்ன
டெல்லி: இந்தியாவில் கொரோனா பரவல் உச்சமடைந்துள்ள நிலையில், மருந்து நிறுவனங்கள் தடுப்பூசி உற்பத்தியை அதிகரித்துள்ள நிலையிலும் மத்திய அரசு மிகக் குறைவான தடுப்பூசிகளையே ஆர்டர் செய்துள்ளது.
இந்தியாவில் தற்போது கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் அரசு வேகப்படுத்தியுள்ளன.
இருந்தாலும்கூட, மத்திய அரசு தேவையான அளவு கொரோனா தடுப்பூசிகளை விரைந்து ஆர்டர் அளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு முன் வைக்கப்படுகிறது. அது உண்மைதான் என்றாலும் அதற்கான காரணங்களும் உள்ளன.

6.6 கோடி தடுப்பூசிகள்
இந்தியாவில் ஜனவரி 16ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெறுகிறது. முதல்கட்டமாக ஒரு கோடி சுகாதார ஊழியர்கள் உட்பட மூன்று கோடி முன்களப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு முடிவு செய்தது. இரண்டு டோஸ்களுக்கு கணக்கிட்டு வேஸ்டெஜ்களையும் சேர்த்து மத்திய அரசு 6.6 கோடி தடுப்பூசிகளுக்கு ஆர்டர் அளித்தது.

பிஎம் கேர்ஸ்
சீரம் நிறுவனத்திடம் 5.6 கோடி தடுப்பூசிகளும், பாரத் பயோடெக் நிறுவனத்திடம் ஒரு கோடி தடுப்பூசிகளும் ஆர்டர் அளிக்கப்பட்டது. இதற்கான ரூ 1300 கோடி நிதி பிஎம் கேர்ஸில் இருந்து மருந்து நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டது. அமைச்சரவை ஒப்புதல் எனக் கால தாமதம் ஏற்படுவதைத் தவிர்க்கவே பிஎம் கேர்ஸ்-இல் இருந்து மருந்து நிறுவனங்களுக்குப் பணம் செலுத்தப்பட்டது.

கொரோனா 2ஆம் அலை
இருப்பினும், கொரோனா அதிகரித்து வரும் நிலையால் குறைவான அளவில் வெறும் 6.6 கோடி தடுப்பூசிகளுக்கு மட்டும் ஆர்டர் அளித்தற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளதாக அரசு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கொரோனா பரவலின் இரண்டாம் அலை இவ்வளவு விரைவில் இந்தியாவை தாக்கும் என்றும் அதன் பாதிப்பு இவ்வளவு மோசமாக இருக்கும் என்றும் மத்திய அரசு எதிர்பார்க்கவில்லை.

பன்றி காய்ச்சல்
மற்றொரு முக்கிய காரணம், 10 ஆண்டுகளுக்கு முன் பன்றி காய்ச்சல் பரவிய போது ஏற்பட்ட நிகழ்வு. அதாவது 2009இல் உலகளவில் பன்றி காய்ச்சல் பரவ தொடங்கியபோது, இந்தியாவில் தேவையான தடுப்பூசிகளை உற்பத்தி செய்து கையிருப்பில் வைத்துக்கொள்ள சீரம், பாரத் பயோடெக், பேனேசியா பயோடெக் ஆகிய நிறுவனங்களுடன் மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டது.

Array
அதன்படி மருந்து நிறுவனங்கள் மூன்று மாதங்களில் பன்றிக் காய்ச்சலுக்கான தடுப்பூசியை உற்பத்தி செய்ய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும், மருத்துவ பரிசோதனைகள் காரணமாக மருந்து நிறுவனங்கள் சற்று காலதாமதம் செய்தன. அதற்குள் பன்றி காய்ச்சலின் அச்சம் மறைந்துவிட்டது. மத்திய அரசும் தனது ஆர்டர்களை ரத்து செய்துவிட்டதால், தடுப்பூசிகள் வேறு வழியின்றி அழிக்கப்பட்டன. இது தொடர்பான வழக்கிலேயே மத்திய அரசை நீதிமன்றம் விமர்சித்திருந்தது.

முதலில் தயக்கம்
இந்த இரண்டு காரணங்களால் தான் மத்திய அரசு குறைவான தடுப்பூசிகளை மட்டுமே ஆர்டர் அளித்திருந்தது. தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கியபோது, வைரஸ் பாதிப்பு நாட்டில் மோசமாக இல்லை. மேலும், முன்களப் பணியாளர்களும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள முதலில் தயக்கம் காட்டினார்கள். இதன் காரணமாகவே மத்திய அரசு குறைவான தடுப்பூசிகளே ஆர்டர் செய்திருந்து. ஆனால், இப்போது நிலைமை மிக மோசமாகச் சென்று கொண்டிருப்பதால், போதிய தடுப்பூசிகள் இல்லாமல் திண்டாடி வருகிறது.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications