சீனாவின் "மெகா அணை.." அதுவும் எல்லைக்கு மிக அருகில்.. இந்தியாவுக்கு இதனால் என்ன ஆபத்து? பகீர்
டெல்லி: இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே விரிசல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், எல்லைக்கு மிக அருகே சீனா பெரிய அணை ஒன்றைக் கட்டுகிறது. இது இந்தியாவுக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாகவே எல்லையில் நல்ல ஒரு உறவு இருந்ததே இல்லை. அதிலும் குறிப்பாக கல்வான் மோதலுக்குப் பிறகு எல்லையில் நிலைமை மேலும் மோசமானது.
இரண்டு தரப்புமே எல்லையில் தொடர்ச்சியாக ராணுவத்தைக் குவித்து வந்தது. உள்கட்டமைப்பில் முதலீடு செய்து வந்தது. இங்கு ராணுவத்தை வாபஸ் பெற வைக்கவே பல கட்ட பேச்சுவார்த்தைகள் தேவைப்பட்டன.

புதிய அணை
இப்போதும் எல்லையில் முழுமையாக அமைதி திரும்பிவிடவில்லை. அங்கு இந்தியாவுக்கு மிக அருகில் சீனா பல கட்டுமானங்களை மேற்கொண்டு வருகிறது. அதிலும் திபெத்தில் எல்லைக்கு மிக அருகில் சீனா புதிய அணையைக் கட்ட திட்டமிட்டுள்ளது கவலையை ஏற்படுத்துவதாக உள்ளது. சீனாவில் இருந்து வந்து கங்கையில் கலக்கும் துணை நதிகளில் ஒன்றில் சீனா இந்த அணையைக் கட்ட உள்ளது. சமீபத்தில் வெளியான சாட்டிலைட் படங்கள் இந்த கட்டுமானத்தை உறுதி செய்தன. எல்லையில் ஏற்கனவே மோசமான சூழல் நிலவும் நிலையில், சீனாவின் இந்த புதிய அணை இந்தியாவுக்கு புதிய தலைவலியாகவே அமையும்.

அங்கு அமைகிறது
இந்தியா, சீனா, நேபாளம் என்று மூன்று நாடுகளின் எல்லையில் சீனா இந்த அணையைக் கட்ட திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் மப்ஜா சாங்போ நதியின் நீரைச் சீனாவால் கட்டுப்படுத்த முடியும். சீனாவில் யார்லுங் சாங்போ என்று அழைக்கப்படும் இந்த நதி அருணாச்சல பிரதேசத்தில் சியாங் என்றும் அசாமில் பிரம்மபுத்திரா என்றும் அழைக்கப்படுகிறது. உத்தரகண்ட்டின் காலாபானி பகுதிக்கு எதிரே இந்த அணை அமைக்கப்பட உள்ள நிலையில், நதியின் போக்கைப் பாதிக்கும் இந்த கட்டுமானம் இந்தியாவின் நீர் வாய்ப்புகளைப் பாதிக்கும் வாய்ப்பு அதிகம்.

இந்தியாவுக்கு ஆபத்து
சமீபத்தில் வெளியான சாட்டிலைட் படங்கள், நதியின் இயற்கையான பாதை ஏற்கனவே கட்டுமான நடவடிக்கைகளால் தடைப்பட்டுள்ளதைக் காட்டுகிறது. அணைக்கான கட்டுமானங்கள் தொடங்கப்பட்டுள்ளதும் சாட்டிலைட் படங்களில் தெளிவாகத் தெரிகிறது. இதன் மூலம் கோடைக் காலங்களில் சீனாவில் நீரை இந்தியாவுக்கு அனுப்பாமல் வைக்க முடியும். அதேபோல வெள்ளம் அதிகம் ஏற்படும்போது, அணையில் இருந்து அதிகப்படியான நீரைச் சீனா திறந்தால் அதுவும் இந்தியப் பகுதிகளில் திடீரென வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தும் ஆபத்தும் உள்ளது.

அணை மட்டுமில்லை
அணை மட்டுமில்லாமல், அதற்கு அருகிலேயே சீனா ஒரு ஏர்போர்ட்டையும் கட்டி வருகிறது. இது இந்தியாவுக்குச் சிக்கலையே தரும். ஏற்கனவே எல்லையில் இந்தியாவின் சில பகுதியைச் சீனா ஆக்கிரமித்துள்ளது. இது மட்டுமின்றி, அருணாச்சல பிரதேசம் தனக்குச் சொந்தம் என்றும் சீனா கூறி வருகிறது. இந்த பகுதிகள் தங்களுக்குச் சொந்தம் என்று நிலைநாட்டச் சீனா தொடர்ச்சியாக அங்குக் கிராமங்கள், ராணுவ தளங்களைக் கட்டி வருகிறது. இந்தச் சூழலில் எல்லைக்கு மிக அருகே அமையும் ஏர்போர்ட்டை சீனா தீவிரமாகக் கவனிக்க வேண்டியது கட்டாயமாகிறது.

இந்திய ராணுவம்
தற்போதைய சூழலில் சீன எல்லையில் நிலைமை சீராக உள்ளது என்று கூறிய இந்திய ராணுவ தளபதி மனோஜ் பாண்டே, இருப்பினும், வரும் காலத்திலும் நிலைமை இப்படியே இருக்கும் என்று கணிக்க முடியாது என்றும் இந்த மாத தொடக்கத்தில் அவர் தெரிவித்தார். எல்லைக்கு அருகே சீனாவுக்கு ஏற்ப இந்தியாவும் ராணுவத்தை நிலைநிறுத்தியுள்ளதாகத் தெரிவித்த அவர், எல்லையில் எந்த சூழல் ஏற்பட்டாலும் அதைச் சமாளிக்கத் தயாராக உள்ளதாகத் தெரிவித்தார்.

அதிகரிக்கும் சிக்கல்
எல்லையில் ஏற்கனவே இரு தரப்பிற்கும் இடையே மோசமான உறவு இருந்து வரும் நிலையில், சீனாவின் இந்த புதிய அணை கட்டுமானம் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை மேலும் சிக்கலான ஒன்றாக மாற்றிவிடுகிறது. இது எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ள கிராமங்களுக்குத் தண்ணீர் பிரச்சினையைக் கூட ஏற்படுத்தலாம் என்று அஞ்சப்படுகிறது. வரும் காலங்களில் இது குறித்து மேலும் சில பகீர் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்!












Click it and Unblock the Notifications