50 ஆண்டு பந்தம்னா சும்மாவா? அப்பா முதல் மகள் ஷேக் ஹசீனா வரை இந்தியா அரவணைப்பது ஏன்? ஹிஸ்டரி இதுதான்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: வங்கதேசத்தில் ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து அந்த நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு நம் நாட்டில் தஞ்சமடைந்துள்ளார். அவருக்கு இந்தியா தற்காலிகமாக அடைக்கலம் கொடுத்துள்ளது. மேலும் ஷேக் ஹசீனாவுக்கு தேவையான பாதுகாப்பை வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் தான் ஷேக் ஹசீனாவின் பாதுகாப்புக்கு நம் நாடு ஏன் முக்கியத்துவம் கொடுக்கிறது? அதன் பின்னணி என்ன என்ற பல கேள்விகள் எழுந்துள்ளது? அதற்கான சிலிர்க்க வைக்கும் தகவலை இந்த செய்தியில் பார்க்கலாம்.

வங்கதேசம்.. பாகிஸ்தானின் ஒரு பகுதியாக இருந்து வந்தது. கிழக்கு பாகிஸ்தான் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது. அதன்பிறகு 1971ம் ஆண்டில் தான் வங்கதேசம் பாகிஸ்தானில் இருந்து பிரிந்து தனி நாடாக உருவானது. வங்கதேசம் தனிநாடாக உருவாக காரணமாக இருந்தவர் யார்? என்றால் தற்போது பிரதமர் பதவியை ராஜினாமா செய்து நம் நாட்டில் தஞ்சமடைந்துள்ள ஷேக் ஹசீனாவின் தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மான் தான்.

Bangladesh Sheikh Hasina

இவர் தான் பாகிஸ்தானுக்கு எதிராக தனி நாடு கோரி புரட்சி செய்தார். அதற்கு அப்போதைய நம் நாட்டின் பிரதமர் இந்திரா காந்தி உதவி செய்தார். வங்கதேசம் உருவாக ஷேக் முஜிபுர் ரஹ்மானுக்கு பக்கப்பலமாக இருந்து உதவியது இந்திரா காந்தி தான். பாகிஸ்தானுக்கு எதிரான யுத்தத்தில் வெற்றி பெற இந்திரா காந்தி தான் ஷேக் முஜிபுர் ரஹ்மானுக்கு உதவினார். அதோடு கிழக்கு பாகிஸ்தான் என அழைக்கப்பட்ட பகுதியை வங்கதேசம் என்ற தனிநாடாக உருவாக்கி அங்கீகரித்தார்.

இந்நிலையில் தான் வங்கதேசம் தனி நாடாக உருவாக காரணமாக இருந்த ஷேக் முஜிபுர் ரஹ்மானின் மகள் ஷேக் ஹசீனா தற்போது பிரதமர் பதவியை ராஜினாமா செய்து தந்தை உருவாக்கிய நாட்டில் இருந்தே வெளியேறி இங்கு தஞ்சமடைந்துள்ளார். இதற்கு காரணம் அந்த நாட்டில் வங்கதேசம் உருவாக போராடிய தியாகிகளின் வாரிசுகளுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டுக்கு எதிரான மாணவர்களின் போராட்டம் தான். தற்போது ஷேக் ஹசீனா தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அந்த நாட்டின் விமானப்படையின் C-130 J ரக விமானத்தில் இந்தியா வந்தார். கடும் அச்சுறுத்தலுக்கு நடுவே அவர் அந்த நாட்டு விமானப்படை விமானத்தில் நம் நாட்டுக்கு வந்தார். இங்கு தற்காலிகமாக தங்கும் ஷேக் ஹசீனா விரைவில் பிரிட்டனில் தஞ்சமடையலாம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் தான் நம் நாட்டில் ஷேக் ஹசீனாவை பாதுகாப்பாக தங்க வைக்க தேவையான ஏற்பாடுகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இது ஒருபுறம் இருக்க பலருக்கும் ஷேக் ஹசீனாவுக்கு ஏன் இந்தியா அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது? என்றால் அதற்கு முக்கிய காரணம் அவருக்கும் இந்தியாவுக்கும் இடையேயான 50 ஆண்டு பந்தம் தான் முக்கியமானதாகும். அதாவது தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மான் முதல் அவரது மகள் ஷேக் ஹசீனா வரை இந்தியாவுடன் நெருக்கமான பந்தம் உள்ளது.

அதாவது வங்கதேசத்தை தனி நாடாக உருவாக்க புரட்சி செய்தபோது ஷேக் ஹசீனாவின் தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மானுக்கு இந்திரா காந்தி உதவியாக இருந்தார். அவர் வங்கதேசம் தனி நாடாக உருவாக உதவினார். பாகிஸ்தானை எதிர்த்து வெற்றி பெற உதவி செய்தார். அதன்பிறகு சுதந்திர வங்கதேசத்தின் ஷேக் முஜிபுர் ரஹ்மான் முதல் பிரதமராக செயல்பட்டார். அவரது குடும்பத்தினரும் சொந்த நாட்டு ராணுவத்தினராலேயே கொல்லப்பட்டனர். அப்போது முஜிபுர் ரஹ்மான் மகள்களாகிய ஷேக் ஹசீனாவும் ரெஹானாவும் ஜெர்மனியில் தங்கி இருந்தனர்.

அதன்பிறகு 2009 முதல் ஷேக் ஹசீனா தான் பிரதமராக தொடர்ந்து 15 ஆண்டுகள் பொறுப்பு வகித்து வருகிறார். இந்த காலக்கட்டத்தில் தான் அவர் பல்வேறு முக்கிய முடிவுகளை எடுத்தார். ஆட்சி அதிகாரத்தில் உச்சநீதிமன்றம், ராணுவம் தலையீடுவதை குறைக்கும் வகையில் சீர்த்திருத்தம் செய்தார். மதசார்பற்ற கொள்கைகளை முன்னெடுத்தார். மேலும் தனது முடிவில் மிகவும் தெளிவாகவும், உறுதியாகவும் இருந்தார். இதனால் அவரது ஆட்சிக்காலத்தில் வங்கதேசம் பொருளாதார ரீதியாக முன்னேற தொடங்கியது.

அதன்பிறகு 1977ல் ஜெனரல் ஜியாவுர் ரஹ்மான் பிரதமரானார். இவர் 1981ல் படுகொலை செய்யப்பட்டார். பிறகு அவரது மகன் அப்துஸ் சத்தார் பிரதமரான நிலையில் 1982ல் ஆட்சி கவிழ்ந்தது. இதையடுத்து ராணுவ தளபதி எச்எம் எர்ஷாத் தலைமையில் ஆட்சி நடந்தது. தொடர்ந்து நடந்த பிரச்சனையால் அவரும் 1990ல் பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து தான் கலீதா ஜியா அரசியலில் என்ட்ரி கொண்டார். இவர் யார் என்றால் மறைந்த முன்னாள் பிரதமரும், மாஜி ஜெனரலும் ஜியாவுர் ரஹ்மானின் மனைவி ஆவார். இவர் 1991 முதல் 1996 வரை ஆட்சி செய்தார். அதன்பிறகு வங்கதேசத்தில் ஷேக் ஹசீனாவின் கட்சி ஆட்சியை பிடித்தது. 1996 முதல் 2001 வரை ஷேக் ஹசீனா முதல் முறையாக பிரதமரானார்.அதன்பிறகு 2001ல் மீண்டும் கலீதா ஜியா பிரதமரானார். அவரது ஆட்சி கவிழ்ந்த நிலையில் பிரச்சனை வெடித்தது. இதையடுத்து எமர்ஜென்சி அமலானது. காபந்து அரசு உருவானது. இந்த அரசு 2008 வரை நீடித்தது.

அதன்பிறகு 2009 முதல் ஷேக் ஹசீனா தான் பிரதமராக தொடர்ந்து 15 ஆண்டுகள் பொறுப்பு வகித்து வருகிறார். இந்த காலக்கட்டத்தில் தான் அவர் பல்வேறு முக்கிய முடிவுகளை எடுத்தார். ஆட்சி அதிகாரத்தில் உச்சநீதிமன்றம், ராணுவம் தலையீடுவதை குறைக்கும் வகையில் சீர்த்திருத்தம் செய்தார். மதசார்ப்ற்ற கொள்கைகளை முன்னெடுத்தார். மேலும் தனது முடிவில் மிகவும் தெளிவாகவும், உறுதியாகவும் இருந்தார். இதனால் அவரது ஆட்சிக்காலத்தில் வங்கதேசம் பொருளாதார ரீதியாக முன்னேற தொடங்கியது.

குறிப்பாக இந்தியாவுடன் நல்லுறவு ஏற்பட்டது. ஷேக் ஹசீனா இந்தியா ஆதரவு நிலைப்பாட்டில் இருந்தார். வங்கதேசம் உருவாக தனது தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மானுக்கு இந்திரா காந்தி உதவியதை அவர் என்றும் மறக்கவில்லை. அந்த பெரிய உதவியை அவர் நினைவில் வைத்திருந்தார். மேலும் தந்தை ஷேக் முஜ்புர் ரஹ்மான் கொலை செய்யப்பட்ட பிறகு ஜெர்மனியில் இருந்த ஷேக் ஹசீனா, ரெஹானா இருவரும் உயிர் அச்சத்தில் இருந்த போது பெர்லினில் இருந்து ரகசியமாக டெல்லிக்கு அழைத்து வர ஏற்பாடு செய்தார் இந்திரா காந்தி.

டெல்லி பந்த்ரா சாலையில் உள்ள 'ரா' அமைப்பின் பாதுகாப்பு இடம் ஒன்றில் ஷேக் ஹசீனாவும் அவரது சகோதரியும் தங்க வைக்கப்பட்டனர். இந்தியாவில் 6 ஆண்டுகள் இருவரும் 'விருந்தினர்களாக' தங்கி இருந்தனர். அப்போது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் ஜனாதிபதிபதியுமான பிரணாப் முகர்ஜி ஆலோசகர் போன்று செயல்பட்டார். பிரணாப் முகர்ஜியின் மனைவி சுவ்ரா, ஷேக் ஹசீனாவை தனது உறவினர் என்றே அழைத்து வந்தார். அவர்கள் 2 பேரும் மறைந்த போது ஷேக் ஹசீனா நேரில் வந்து இறுதி சடங்கில் பங்கேற்றார்.

2009ல் நம் நாட்டில் மத்தியில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்தது. அப்போது மன்மோகன் சிங் பிரதமராக இருந்தார். இந்த சமயத்தில் பொருளாதார ரீதியாக சரிவில் இருந்த வங்கதேசத்துக்கு மத்திய அரசு மனிதாபிமான உதவிகளை வழங்கியது. இதனால் இந்திரா காந்தி முதல் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்த வரை ஷேக் ஹசீனா நல்ல உறவை வைத்துள்ளார். இந்த உறவு இன்று வரை தொடர்கிறது. இதனை கடந்த ஜூன் மாதம் ஷேக் ஹசீனா இந்தியா வரும்போது சோனியா காந்தி உள்ளிட்டவர்களை சந்தித்தது மூலம் உறுதி செய்து கொள்ளலாம்.

இப்படி ஷேக் ஹசீனாவுக்கு காங்கிரஸ் தலைவர்களுடன் பந்தம் உள்ள நிலையில் பாஜகவுடன் மற்றொரு வகையில் நெருங்கிய உறவு உள்ளது. அதாவது கடந்த 2014ல் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்றார். இந்த வேளையில் ஷேக் ஹசீனா மத்திய அரசுடன் இணக்கமாகவே செயல்பட தொடங்கினார். காங்கிரஸ் ஆட்சியில் இல்லை என அவர் இந்தியாவுக்கான ஆதரவில் இருந்து பின்வாங்கவில்லை.

மேலும் வங்கதேசத்தில் மத தீவிரவாதம் அந்த சமயத்தில் அதிகம் இருந்தது. இதனை கட்டுப்படுத்த பிரதமர் மோடி கோரிக்கை வைத்தார். அதனை ஏற்ற ஷேக் ஹசீனா உள்நாட்டில் மத தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தார். மேலும் இருநாடுகள் இடையேயான கடல் சார் பிரச்சனைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட்டது. எல்லை ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. மத்திய அரசும் பல பில்லியன் டாலர்களை கடனாக வங்கதேசத்துக்கு வழங்க தொடங்கியது. இதனால் அந்த நாட்டின் பொருளாதாரமும் வளர தொடங்கியது. உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டன.

மேலும் 2013, 2018 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் வங்கதேசத்தில் நடந்த தேர்தலின்போது ஷேக் ஹசீனா வெற்றி பெற்றார். அந்த வேளையில் இந்தியாவுடன் இணக்கமாக செயல்படுவதால் அவர் பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்தார். பாகிஸ்தான், சீனா, அமெரிக்கா உள்பட மேற்கத்திய நாடுகளின் விமர்சனத்தை சந்தித்தார். ஆனாலும் கூட ஷேக் ஹசீனா இந்தியா உடனான உறவை மட்டும் விட்டு கொடுக்கவே இல்லை. இதற்கு உதாரணம் கூற வேண்டும் என்றால் 3வது முறையாக நரேந்திர மோடி பிரதமராகி உள்ள 2 மாதத்துக்கு 2 முறை ஷேக் ஹசீனா நம் நாட்டுக்கு வந்து சென்றுள்ளார்.

இப்படியாக கடந்த 1971 முதல் ஷேக் ஹசீனாவின் தந்தை ஷேக் முஜ்புர் ரஹ்மான் முதல் இன்று வரை ஷேக் ஹசீனாவுக்கு இந்தியாவுடன் 50 ஆண்டு கால நெருக்கமான உறவு உள்ளது. இதனால் தான் இந்தியா அவருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து நம் நாட்டில் தற்காலிகமாக அடைக்கலம் கொடுத்துள்ளது. மேலும் நேற்று ஹெலிகாப்டரில் இந்திய வான்வெளி பரப்பில் பறந்து வந்தபோது அவரது பாதுகாப்புக்காக 2 ரஃபேல் விமானங்களை இந்திய விமானப்படை அனுப்பி வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+