டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பழைய விவகாரம்.. பல்ஸ் பார்த்த பாஜக.. எடப்பாடி மீது ஏக "அப்செட்டில்" டெல்லி தலைகள்? என்ன நடக்குது?

Google Oneindia Tamil News

சென்னை: சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி டெல்லி போன போதும் சரி.. பிரதமர் மோடி சென்னை வந்த போதும் சரி.. எடப்படியால் பிரதமர் மோடியை சந்திக்க முடியவில்லை. தனியாக மோடியை சந்தித்து பேச எடப்பாடி பல முறை முயன்றதாக சொல்லப்பட்டாலும் தனியாக இவர்கள் சந்திப்பு நடக்கவில்லை.

அதுமட்டுமின்றி எடப்பாடி பழனிசாமி பொதுக்குழுவில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட போதும் கூட அதற்கு பாஜக தலைகள் யாரும் வாழ்த்தவில்லை. அதோடு அதிமுக பொதுக்குழு வழக்கில் தேர்தல் ஆணையத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் டெல்லியின் "உதவியை" சில விஷயங்களில் எடப்பாடி தரப்பு நாடியதாக கூறப்படுகிறது.

“துண்டை” போட்ட எடப்பாடி.. கோட்டைவிட்ட” பன்னீர்! டார்கெட் இரட்டை இலை“துண்டை” போட்ட எடப்பாடி.. கோட்டைவிட்ட” பன்னீர்! டார்கெட் இரட்டை இலை

ஆனால் இதற்கும் டெல்லி தரப்பு எடப்பாடி தரப்பிற்கு உதவ முன் வரவில்லை என்றே கூறப்படுகிறது. சமீபத்தில் எடப்பாடிக்கு சாதகமாக மோடியிடம் பேசிய எம்பி தம்பிதுரைக்கும் சாதகமான பதில்கள் கிடைக்கவில்லை என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எடப்பாடி மீது டெல்லி அப்செட்டில் இருக்க அப்படி என்னதான் காரணம்? ஏன் இப்படி டெல்லி பாஜக தலைகள் எடப்பாடியுடன் நெருக்கம் காட்ட வருகிறார்கள்?.. இது தொடர்பாக அதிமுக - பாஜக வட்டாரத்தில் அவர்கள் பல விஷயங்களை குறிப்பிட்டனர்.

கூட்டணி

கூட்டணி

அதில் முதல் விஷயமே ஒரு பழைய கருத்து வேறுபாடு என்று கூறப்படுகிறது. கடந்த சட்டசபை தேர்தலில் எடப்பாடிக்கும் பாஜகவிற்கும் ஏற்பட்ட சின்ன கருத்து வேறுபாடுதான் இந்த மோதலுக்கு பிள்ளையார் சுழி போட்டது என்கிறார்கள். அந்த சட்டசபை தேர்தலில் பாஜக அதிமுக கூட்டணியில் அதிக இடங்களை கேட்டதாகவும்.. டிடிவி தினகரன், சசிகலாவுடன் சேர்ந்து செயல்பட எடப்பாடியை பாஜக அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதை எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

அப்செட்

அப்செட்

அதோடு எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக அறிவித்து தேர்தலை சந்திக்க வேண்டாம் என்றும் பாஜக கூறியது என்று கூறப்படுகிறது. ஆனால் இதை மீறி எடப்பாடி செயல்பட்டதாக கூறப்படுகிறது. பாஜகவை முதலில் அப்செட் ஆக்கிய விஷயம் இதுதான் என்கிறார்கள். அதோடு இல்லாமல் தேர்தலுக்கு பின் வரிசையாக கூட்டணி கட்சிகள் வெளியேறும் வகையில் எடப்பாடி செயல்பட்டார். பாமக கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டது.

 கூட்டணிக்கு கல்தா

கூட்டணிக்கு கல்தா

பாஜகவையும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கழற்றிவிட்டது. இதனால் எடப்பாடி மீது பாஜக அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. எடப்பாடி கட்டுப்பாட்டின் கீழ் அதிமுக இருந்தால் கூட்டணிகளை அரவணைத்து செல்ல மாட்டார். கேட்கிற இடங்களை கொடுக்க மாட்டார் என்று பாஜக கருதுகிறதாம்.. அதிமுகவில் இரட்டை தலைமை அல்லது "சசி - ஓபிஎஸ் - இபிஎஸ்" என்று மூவரின் கீழ் பதவிகள் பிரிந்து இருந்தால் அதிமுகவை தங்கள் கட்டுப்பாட்டில் வைக்க முடியும் என்று பாஜக நினைப்பதாக கூறப்படுகிறது. எடப்பாடியை டெல்லி நேரடியாக ஆதரிக்காமல் போனதற்கு இது முக்கிய காரணம் என்கிறார்கள்.

 பாஜகவிற்கு என்ன பயன்?

பாஜகவிற்கு என்ன பயன்?

அதோடு எடப்பாடி ஒற்றை தலைமையில் இருப்பதால் பாஜக தங்களுக்கு என்ன பயன் என்றும் பார்த்து வருகிறதாம். எடப்பாடி ஒற்றை தலைமையில் இருக்கும் போது அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் முக்குலத்தோர் வாக்குகளை நாமும் சேர்ந்து இழப்போம் என்று பாஜக கருதுகிறதாம். அதோடு ஓபிஎஸ், சசிகலா, டிடிவி, பாமக இல்லாமல் எடப்பாடி மட்டும் தனியாக எவ்வளவு இடங்களை பாஜக கூட்டணிக்கு வென்று கொடுக்க போகிறார் என்ற சந்தேகமும் பாஜக தரப்பிற்கு எழுந்து இருக்கிறது .

நம்பிக்கை இல்லை

நம்பிக்கை இல்லை

எடப்பாடி பெரிய தலைவர் என்றாலும்.. அவர் தனியாக அதிமுகவை வழிநடத்தும் அளவிற்கு வலுவானவர் இல்லை என்று பாஜக நினைக்கிறதாம். எடப்பாடியின் "சீட் வின்னிங்" பலம் குறைவாக இருப்பதாக பாஜக கணக்கு போடுவதும் இதற்கு காரணம் என்கிறார்கள். இப்படி பல விஷயங்களை பல்ஸ் பார்த்த பின்புதான் எடப்பாடியை இதுவரை டெல்லி பாஜக ஆதரிக்கவில்லை என்று கூறப்படுகிறது. தமிழ்நாடு பாஜக தலைவர்களும் எடப்பாடியை பெரிதாக வாழ்த்தவில்லை.

Recommended Video

    PTR Reveals | ஊழல் பத்திலாம் பேச நேரமில்லை *Politics
     வெயிட் அண்ட் சீ

    வெயிட் அண்ட் சீ

    அதோடு ஸ்டாலின் பெரிய தலைவராக இருக்கிறார். அப்படி இருந்தாலும் கூட அவர் கூட்டணி கட்சிகளை அரவணைக்கிறார். ஸ்டாலினை எதிர்க்க வேண்டும் என்றால் எடப்பாடி, ஓபிஎஸ், சசிகலா எல்லோரும் ஒன்றாக இருக்க வேண்டும். ஆனால் இதை எடப்பாடி ஏற்க மறுக்கிறார் என்ற அப்செட்டும் பாஜக தரப்பிற்கு இருப்பதாக கமலாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதை எல்லாம் சரி கட்ட வரும் நாட்களில் முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.. வெயிட் அண்ட் சீ என்றும் கூறுகிறார்கள் கமலாலய வட்டாரத்தினர்.

    English summary
    Why is Delhi and TOP BJP brass upset with Edappadi Palanisamy? அதுமட்டுமின்றி எடப்பாடி பழனிசாமி பொதுக்குழுவில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட போதும் கூட அதை பாஜக தலைகள் யாரும் வாழ்த்தவில்லை.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X