33 விவசாயிகள் மரணம்.. வாய் திறக்காத பிரதமர் மோடி.. காரணம் கேட்கும் காங்கிரஸ்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் போராடிய 33 விவசாயிகள் இறப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி இதுவரை வாய்த் திறக்காதது ஏன் என காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் 26-ஆம் தேதி முதல் வேளாண் சட்டங்களை நீக்கக் கோரி டெல்லியில் சிங் எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் வயதான விவசாயிகளும் தங்கள் உரிமைக்காகவும் வாழ்வாதாரத்திற்காகவும் போராடுகிறார்கள்.

இந்த கடுங்குளிரால் பாதித்த 33 விவசாயிகள் போராட்டக் களத்திலேயே இறந்தனர். 33 விவசாயிகளின் இறப்பை அடுத்து அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிக்கு அகில இந்திய விவசாயிகள் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.

எல்லை

எல்லை

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஷாமா முகமது செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் 33 விவசாயிகள் இறப்பு குறித்து மோடி ஒரு வார்த்தையை கூட உதிர்க்காதது ஏன், நமக்கு உணவளிப்பவர்கள் டெல்லி எல்லையில் தங்கள் மனைவி, குழந்தைகளுடன் போராடி வருகிறார்கள்.

வங்கத்தில் அமித்ஷா

வங்கத்தில் அமித்ஷா

ஆனால் நமது உள்துறை அமைச்சருக்கோ அவர்களை பார்க்க நேரமில்லாமல் மேற்கு வங்க பொதுக் கூட்டத்திற்கு செல்ல மட்டும் நேரம் இருக்கிறது. 33 பேரின் இறப்புக்கு மோடி அரசுதான் பொறுப்பு. வீட்டிற்குள் உட்கார்ந்திருக்கும் போதே கடுங்குளிரை உணர்கிறோம், ஹீட்டரை பயன்படுத்துகிறோம். ஆனால் இவர்கள் வெட்ட வெளியில் சாலையில் போராடுகிறார்கள்.

பாராட்டுக்குரியது

பாராட்டுக்குரியது

பிரதமர் என்பவர் இந்த நாட்டையும் நாட்டு மக்களையும் நேசிப்பவராக இருக்க வேண்டும் என்கிறார்கள். தங்களையும் தங்கள் குடும்பத்தினரையும் பிரதமர் பார்த்தால் போதும் என்கிறார்கள். குருத்வாராவுக்கும் கோயிலுக்கும் போவது நல்ல விஷயமாகும். பழமையான குருத்வாராவில் பிரதமர் நரேந்திர மோடி வழிப்பட்டது பாராட்டுக்குரியது.

மோடி

மோடி

இது போன்ற மத வழிப்பாட்டு தலங்களுக்கு செல்வதற்கு பதிலாக மோடி விவசாயிகளை சென்று பார்க்க வேண்டும். அவர்களது கோரிக்கைகளை காதுகொடுத்து கேட்க வேண்டும். கருப்பு சட்டத்தை எதிர்த்து போராடும் இந்த விவசாயிகளுக்கு நீதி வேண்டும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+