"பெட்ரோலை முழுசா நிரப்பாதீங்க.. கோடை வெப்பத்தால் வெடிக்குமாம்?" உண்மை என்ன.. நாம் என்ன செய்யணும்
டெல்லி: கோடை வெயில் அதிகரிக்கும் நிலையில், எரிபொருளை முழு டேங்க் அளவுக்கு நிரப்ப வேண்டாம் என்று இணையத்தில் தகவல் பரவியது. இதைப் பலரும் ஷேர் செய்த நிலையில், உண்மையில் முழு டேங்க் நிரப்புவது ஆபத்தானதா என்பதைப் பார்க்கலாம்.
இந்தியாவில் இப்போது கோடை வெயில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் பல இடங்களில் வெப்ப நிலை தொடர்ந்து 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பத்தைக் கடந்தே பதிவாகி வருகிறது.
கடந்த சில நாட்களாக மழை பெய்தாலும் கூட கோடை வெயில் அதிகமாகவே இருக்கிறது. இதனால் பொதுமக்கள் பல்வேறு சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். அதீத வெப்பம் காரணமாகப் பொதுமக்களால் வெளியே கூட செல்ல முடியாத சூழலே ஏற்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல்: வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், வெப்பம் குறித்தும் கோடைக் காலத்தில் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக் கூடாது என்பது குறித்தும் இணையத்தில் பல்வேறு தகவல்கள் பரவி வருகிறது. அப்படித்தான் சமீபத்தில் இணையத்தில் ஒரு போஸ்டர் வேகமாகப் பரவியது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வெளியிட்டுள்ளதாக பல்வேறு மொழிகளிலும் இந்த அறிவிப்பு சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியது.

அதில் வரவிருக்கும் நாட்களில் வெப்பநிலை அதிகரிக்கலாம் என்பதால் வாகனங்களில் எரிபொருளை முழு டேங்க் அளவுக்கு நிரப்ப வேண்டாம் என்றும் இது வாகனம் வெடிக்கும் ஆபத்தை அதிகரிக்கும் என்றும் அதில் கூறப்பட்டிருந்தது. நெட்டிசன்கள் பலரும் இதைப் பகிர்ந்தனர். வாட்ஸ்அப், ட்விட்டர், பேஸ்புக் என அனைத்து சமூக வலைத்தளங்களிலும் அது டிரெண்டிங் ஆனது.
எச்சரிக்கை: அந்த அறிவிப்பில், "இந்தியன் ஆயில் எச்சரிக்கை.. வரும் நாட்களில் வெப்பம் அதிகரிக்கும் என்பதால் எரிபொருளை முழுமையாக நிரப்ப வேண்டாம். இது எரிபொருள் டேங் வெடித்துச் சிதறும் வாய்ப்பை ஏற்படுத்தும். எனவே, தயவு செய்து உங்கள் வாகனத்தில் பாதி எரிபொருளை மட்டும் நிரப்புங்கள். காற்று செல்ல இடமளிக்கவும். இந்த வாரம் மட்டும் பெட்ரோலை முழுமையாக நிரப்பிய 5 வாகனங்கள் வெடித்துச் சிதறியுள்ளது.
பெட்ரோல் டேங்கில் வாயு செல்ல அனுமதிக்கவும். இதை உங்களுக்குக்கு தெரிந்த அனைவருக்கும் அனுப்புங்கள். இதன் மூலம் விபத்துகள் தடுக்கப்படும்" என்று கூறப்பட்டுள்ளது. இந்த போஸ்டை பலரும் தங்கள் சமூக வலைத்தளங்களில் பரவ இது டிரெண்டிங் ஆனது. பொதுமக்களின் நலனுக்காக இந்தியன் ஆயில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாகவே பலரும் நினைத்து ஷேர் செய்தனர்.
உண்மை என்ன: இதனிடையே இது குறித்து இந்தியன் ஆயில் சார்பிலும் மத்திய அரசின் பிஐபி சார்பிலும் விளக்கம் தரப்பட்டுள்ளது. இது குறித்து இந்தியன் ஆயில் கூறுகையில், "இந்தியன் ஆயில் நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு.. வெயில் காலமோ, குளிர் காலமோ எப்போது என்று இருந்தாலும் வண்டியை உற்பத்தி செய்த நிறுவனம் அனுமதிக்கும் அளவுக்கு எரிபொருளை நிரப்புவது முற்றிலும் பாதுகாப்பான ஒன்று தான்" என்று கூறப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பிஐபி அமைப்பும் இதையே தங்கள் சமூக வலைத்தளங்களிலும் ஷேர் செய்துள்ளன. அதாவது கோடைக் காலம் என்று இல்லை எந்த கிளைமேட் நிலவினாலும், அனுமதிக்கப்பட்ட அளவுக்கு முழு டேங்கை நிரப்புவதால் எந்தவொரு பாதிப்பும் ஏற்படப்போவதில்லை என்பதே உண்மை
பாதுகாப்பானது ஏன்: ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்கள் வாகனங்களில் உட்சபட்ச பாதுகாப்பு கட்டமைப்புகளை வைத்திருக்கும். பெட்ரோல்/ டீசல் நிரப்புவதில் அதிகபட்ச அளவும் அதில் விதிவிலக்கல்ல. எனவே, எந்த கிளைமேட்டாக இருந்தாலும் ஓவர் ஃபில் செய்யாமல் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதை நிரப்புவது பாதுகாப்பானதே..
மேலும், பெட்ரோல் தானாக எரியும் வெப்பநிலை (self-igniting temperature) என்பது 246 முதல் 280 டிகிரி செல்சியஸ் வரை ஆகும். அதேபோல டீசலுக்கு இது 210 டிகிரி செல்சியஸ் ஆகும். இந்தியாவில் அதிகபட்ச வெப்ப நிலை 40 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை எட்டுவதில்லை. அதாவது அது தானாக எரியும் வெப்பத்தை விட இது மிக மிக குறைவாகவே உள்ளது. எனவே, பெட்ரோல் அல்லது டீசல் எதுவும் நிச்சயம் தீப்பிடிக்காது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications