ஒவ்வொரு மசூதியிலும் "சிவலிங்கத்தை" ஏன் தேடணும்".. ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் சுளீர் பேச்சு
ஞானவாபி மசூதி விவகாரம் குறித்து ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் உரையாற்றினார்
டெல்லி: ''ஞானவாபி மசூதி - காசி விஸ்வநாதர் கோயில் பிரச்சனைக்கு சுமுக தீர்வு காணப்பட வேண்டும்'' என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் வலியுறுத்தியுள்ளார்.. அதேசமயம், ஞானவாபியின் நடுவில் உள்ள ஒவ்வொரு மசூதியிலும் சிவலிங்கத்தை ஏன் தேடுகிறீர்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
சில தினங்களாகவே, ஞானவாபி மசூதி விவகாரம் தேசிய அரசியலில் தலைதூக்கி வருகிறது.. உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் நடத்தப்பட்ட ஆய்வில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
எனவே, அந்த மசூதி அமைந்துள்ள பகுதிக்குள் நுழைவதற்கு வாரணாசி கோர்ட் தடைவிதித்தது... இந்த தடை உத்தரவை சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் ரத்து செய்தது..

மசூதி
மேலும், மசூதி அமைந்துள்ள பகுதியில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை தளர்த்தியதுடன், இந்த வழக்கை வாரணாசி மாவட்ட நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.. சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டபடியே, இந்த மனுவை வாரணாசி மாவட்ட விரைவு நீதிமன்றமம் விசாரித்து கொண்டிருக்கிறது.. இந்த வழக்கு மீண்டும் ஜூலை 4ம் தேதிக்கு வாரணாசி கோர்ட்டில் விசாரணைக்கு வரஉள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

ஜேபி நட்டா
ஞானவாபி மசூதி குறித்து, அரசியல் கட்சிகள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றன.. அந்த வகையில், பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவும் கருத்து தெரிவித்திருந்தார்.. அதில், ''இந்த விவகாரங்களில் நீதிமன்றங்களே முடிவெடுக்கும். நீதிமன்ற உத்தரவு, அரசமைப்பு சாசனத்தை பாஜக உறுதியுடன் பின்பற்றும். எங்களை பொறுத்தவரை கலாச்சார வளர்ச்சியை ஊக்குவிக்கிறோம். வலுவான இந்தியாவை உருவாக்க மத்திய அரசு உறுதி பூண்டிருக்கிறது. நாட்டின் வளர்ச்சியில் அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்து அழைத்து செல்வோம். யாரையும் புறக்கணிக்க மாட்டோம்'' என்று தெரிவித்திருந்தார்.

மோகன் பகவத்
இந்நிலையில், நாக்பூரில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய ஆர்.எஸ்.எஸ் தலைவர், மோகன் பகவத் உரையாற்றினார்.. அப்போது ஞானவாபி விவகாரம் தொடர்பாக பரஸ்பர உடன்படிக்கை மூலம் தீர்வு காண வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.ஆர்எஸ்எஸ் செயற்பாட்டாளர்களுக்கான பயிற்சி நிறைவு நிகழ்ச்சியில் மோகன் பகவத் பேசியதாவது:

முஸ்லிம்கள்
''இந்து மற்றும் முஸ்லீம் தரப்பினர் ஒன்றாக உட்கார்ந்துதான், இந்த பிரச்சனையை சமரசமாக பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும்... கோர்ட் அதன் தீர்ப்பை வழங்கும்போது அது எப்படியிருந்தாலும் எல்லாரும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்... நமது நீதித்துறை புனிதமானது.. மிகவும் உயர்ந்தது என்று கருதி நாம் எடுக்கும் முடிவுகளுக்கு கட்டுப்பட வேண்டும்... அதனால், அதன் முடிவுகளை எல்லாம் நாம் கேள்வி கேட்கக் கூடாது. இது தொடர்பாக இப்படி சர்ச்சைகளை கிளப்பிவிட்டு வரக்கூடாது.. இந்துக்களும் சரி, முஸ்லிம்களும் சரி, வரலாற்று உண்மைகளை வெறுக்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ரிஷிகள் - முனிகள்
எந்தவித வழிபாட்டு முறைகளுக்கும் எதிராக இந்துக்கள் ஒருபோதும் எதிர்ப்பை கொண்டிருக்கவில்லை.. நாங்கள் எல்லாவற்றையும்தான் ஏற்றுக்கொள்கிறோம். எல்லாவற்றையும்தான் புனிதமாக கருதுகிறோம். அவர்கள் அந்த வழிபாட்டு முறையை ஏற்றுக்கொண்டிருக்கலாம், ஆனால் அவர்கள் நமது ரிஷிகள், முனிகள், க்ஷத்திரியர்களின் வழித்தோன்றல்கள்... நாங்கள் அதே மூதாதையர்களின் வழித்தோன்றல்கள்.. இந்துக்கள், முஸ்லிம்களுக்கு எதிராக ஒருபோதும் நினைப்பதில்லை. காரணம், இன்றைய முஸ்லிம்களின் முன்னோர்களும் இந்துக்களே ஆவர்..

சிவலிங்கம்
சில இடங்கள் மீது எங்களுக்கு, ஸ்பெஷலான பக்தி இருந்தது... அதுக்காக நாம் ஏன் சர்ச்சையை அதிகரிக்க வேண்டும்? ஞானவாபி விஷயத்தில் வரலாற்றை மாற்ற முடியாது... இன்றைய இந்துக்களோ, இன்றைய முஸ்லிம்களோ அதை உருவாக்கவில்லை. அது அந்த நேரத்தில் நடந்தது... ஞானவாபி மீது நமக்கு நிறைய பக்தி உள்ளது.. அதனால்தான் நாம் ஏற்கனவே அங்கு வழிபட்டு கொண்டிருக்கிறோம்.. ஆனால் ஒவ்வொரு மசூதியிலும் சிவலிங்கத்தை ஏன் தேட வேண்டும்?'' என்று கேள்வி எழுப்பினார்.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications