"இந்தியா" கூட்டணியில் டம்மியான நிதிஷ்குமார்! முதல்வர் ஸ்டாலின் மீது கோபத்தை கொட்டியதன் பின்னணி என்ன?
டெல்லி: "இந்தியா" கூட்டணியில் தமக்கு முக்கியத்துவம் இல்லாமல் போவதால் கடும் அதிருப்தி அடைந்த பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அந்த கோபத்தை இந்தி மொழி விவகாரத்தை முன்வைத்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மீது காட்டியதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்லியில் 'இந்தியா' கூட்டணியின் 4-வது ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். பீகார் முதல்வர் நிதிஷ்குமார், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். 'இந்தியா' கூட்டணியில் உள்ள 28 கட்சிகளின் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் "இந்தியா" கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை முன் நிறுத்துவோம் என மமதா பானர்ஜியும் அரவிந்த் கெஜ்ரிவாலும் பரிந்துரைத்தனர். ஆனால் மல்லிகார்ஜூன கார்கே இதனை திட்டவட்டமாக ஏற்க மறுத்துவிட்டார்.
மேலும் இந்தக் கூட்டத்தில் நிதிஷ்குமார் இந்தியில் பேசும் போது, வழக்கம் போல ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க வேண்டும் என திமுக தரப்பில் கேட்கப்பட்டது. ஆனால் திடீரென நிதிஷ்குமார், இந்தி தேசிய மொழி; இந்தியை அனைவரும் கற்க வேண்டும் என பாடம் நடத்தி கோபத்தை கொட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நிதிஷ்குமாரின் இந்த கோபம் குறித்து பேசும் பத்திரிகையாளர்கள், "இந்தியா" கூட்டணியை உருவாக்கியதில் நிதிஷ்குமார் முக்கிய பங்கு வகித்தார். அத்துடன் இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் அல்லது ஒருங்கிணைப்பாளர் பதவி ஆகியவை தமக்கு கிடைக்கும் என தவமாய் தவமிருந்து வருகிறார் நிதிஷ்குமார். ஆனால் தற்போதைய நிலையில் இந்த இரண்டுமே நிதிஷ்குமாருக்கு கிடைக்காது என்பது முடிவான ஒன்றாக தெரிந்துவிட்டது.
மேலும் "இந்தியா" கூட்டணியை காங்கிரஸ் தன் வசம் கையில் எடுத்துக் கொண்டது. இந்தியா கூட்டணியில் பத்தோடு பதினொன்றாகவே தாமும் இருக்கிறோம் என்கிற குமுறலையும் கோபத்தையுமே இந்தி மொழிபெயர்ப்பு பிரச்சனையில் திமுக தலைவர்களான ஸ்டாலின், டிஆர் பாலு மீது காட்டிவிட்டார் நிதிஷ்குமார் எனவும் சுட்டிக்காட்டுகின்றனர். அதாவது இந்தியா கூட்டணியில் டம்மியாகிவிட்டோமே என்கிற விரக்தியின் வெளிப்பாடுதான் திமுக தலைவர்கள் மீதான நிதிஷ் கோபம் எனவும் மூத்த பத்திரிகையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications