டெல்லி ஆதரவு எனக்குதான் என காட்டுகிறாரா? மோடியின் நன்றி கடிதத்தை ஓபிஎஸ் வெளியிட்டதால் புதிய சர்ச்சை
சென்னை: பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்ததற்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி கடந்த 23-ந் தேதி தனக்கு அனுப்பிய கடிதத்தை ட்விட்டரில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டது பெரும் விவாதப் பொருளாகி இருக்கிறது.
அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக விடிய விடிய தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்தும் முடிவுக்கு வரவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
|
ட்விட்டரில் ரிலீஸ் செய்த கடிதம்
இந்த களேபரங்களுக்கு மத்தியில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நேற்று இரவு தமது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கடிதத்தை வெளியிட்டார். கடந்த மாதம் 23-ந் தேதி பிரதமர் மோடி அனுப்பிய நன்றி கடிதம் அது. அதாவது செப்டம்பர் 17-ந் தேதி பிரதமர் மோடியின் பிறந்த நாளுக்கு துணை முதல்வர் ஓபிஎஸ் வாழ்த்து கூறியிருந்தார்.

டெல்லி ஆதரவு என காட்டவா?
அந்த வாழ்த்துக்கு நன்றி தெரிவித்துதான் பிரதமர் மோடி இந்த கடிதத்தை அனுப்பி இருந்தார். இதனை இந்த சூழலில் ஓபிஎஸ் தமது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது மிகப் பெரிய விவாதமாகிவிட்டது. டெல்லியின் ஆதரவு எனக்குத்தான் இருக்கிறது என்பதை காட்டுவதற்காகவே ஓபிஎஸ் இந்த கடிதத்தை இப்போது வெளியிட்டுள்ளாரா? என அவரது ட்விட்டர் பக்கத்திலேயே சரமாரி கேள்விகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

டெல்லி ஆதரவு குறித்து விவாதம்
ஏற்கனவே தன்னை முதல்வர் வேட்பாளராக்க வேண்டும்; டெல்லியின் ஆதரவு எனக்குத்தான் இருக்கிறது; பிரதமர் மோடியே என்னை பாராட்டினார் என அதிமுக செயற்குழுவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் நேருக்கு நேர் மல்லுக்கட்டியிருந்தார் ஓபிஎஸ். இதற்கு அப்போதே ஈபிஎஸ்ஸும் 3 ஆண்டுகால நல்லாட்சியை பிரதமர் மோடியும் பாராட்டி இருக்கிறார் என பதிலடி கொடுத்திருந்தார்.

இன்று முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு?
இதன்பின்னர் இருதரப்பும் படுதீவிரமான ஆலோசனைகளை நடத்தியும் எந்த ஒருமுடிவும் எட்டப்படவில்லை. முதல்வர் வேட்பாளர், பொதுச்செயலாளர் பதவி, வழிகாட்டு குழு, ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு கூடுதல் அதிகாரம் என்கிற அடிப்படையில்தான் இப்போது அதிமுகவில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த பஞ்சாயத்து முடிந்து இன்று காலை 10 மணியளவில் முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு வெளியாகுமா? என்பதுதான் எதிர்பார்ப்பு.
-
தவெகவின் வியூகம்.. புஸ்ஸி ஆனந்துடன் பேச்சுவார்த்தை நிறைவு.. அடுத்த வாரத்தில் இணையும் விஜயபாஸ்கர்? -
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
காலை தொட்டு கேட்கிறோம்.. எங்களை சேர்த்துக்கோங்க.. தவெகவினரிடம் மேடையில் கெஞ்சிய அதிமுக நிர்வாகி -
அவரா? பெரிய தலைக்கட்டாச்சே! தவெகவுக்கு தாவும் ஜெயக்குமார்! எடப்பாடி அடுத்த தலைவலி! பரபர பாலிடிக்ஸ் -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
தப்பித்தது தம்பிரான் புண்ணியம்.. 21 அதிமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை இல்லை! 4 பேருக்கு தான் சிக்கலே! -
அத்தனை பேரும் இன்ஸ்டாகிராம் வீடியோ போடுங்க.. ஐடி விங் கூட்டத்தில் ராஜ் சத்யனை வறுத்தெடுத்த எடப்பாடி! -
இனிமே சிங்கப் பாதை தான்..ஆக்ஷனுக்கு ரெடியான அதிமுக! திமிறி எழுந்த எடப்பாடி பழனிசாமி! கையில் லிஸ்ட்! -
ஒருகாலத்துல எப்படி இருந்த மனுஷன்? விழுப்புரத்தில் ஓரம் கட்டப்பட்ட சிவி சண்முகம்! கண்முன் 3 சான்ஸ்? -
யாரை நம்பி நான் பொறந்தேன்.. விரக்தியான எடப்பாடி! இலைக் கட்சியின் 10 மா.செ.க்கள் தவெகவுடன் பேச்சு? -
தலைக்கு மேல் தொங்கும் கத்தி.. தவெகவுக்கு தாவிய அதிமுக மாஜி எம்.எல்.ஏ.க்கள்! சுப்ரீம் கோர்ட்டில் கேஸ் -
ஐசியூவில் அதிமுக.. ஆபரேசனுக்கு தயாராவாரா எடப்பாடி? குறுக்கே ஆம்புலன்ஸோடு விஜய்! பரபர பாலிடிக்ஸ்












Click it and Unblock the Notifications