நாடாளுமன்ற அட்டாக்.. முதலில் மொபைல்களை பிடுங்கி எரித்த லலித் ஜா! எதற்காக தெரியுமா? லிஸ்ட்லயே இல்லையே
டெல்லி: நாடாளுமன்றத்தில் சிலர் நுழைந்து தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவர்களிடம் இருந்த வேறு திட்டங்கள் குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது.
நாடாளுமன்றத்தில் கடந்த புதன்கிழமை அத்துமீறி நுழைந்து சிலர் ஸ்ப்ரே தாக்குதல் நடத்தினர். லோக்சபாவுக்குள் புகுந்த அவர்கள் புகை குப்பிகளை வீசினர். இரண்டு பேர் உள்ளே ரகளை செய்ய மேலும் இருவர் நாடாளுமன்ற வளாகத்தில் பிரச்சினை செய்தனர்.

இந்தச் சம்பவம் நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதில் குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ள நிலையில், அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
நாடாளுமன்ற தாக்குதல்: 2001இல் அரங்கேறிய நாடாளுமன்ற தாக்குதலின் நினைவு தினமான டிசம்பர் 13ஆம் தேதி இந்தாண்டு நாடாளுமன்றத்தில் ஸ்ப்ரே அட்டாக் நடத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டோரிடம் போலீசார் விசாரணை நடத்த ஏதுவாக அவர்களுக்கு ஏழு நாள் போலீஸ் காவல் வழங்கப்பட்டது.
நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் சாகர் சர்மா மற்றும் மனோரஞ்சன் ஆகியோர் பூஜ்ஜிய நேரத்தின் பொது கேலரியில் இருந்து லோக்சபாவுக்குள் குதித்தனர். மேலும், தங்கள் கைகளில் இருந்த புகை வரும் குப்பிகளையும் அவர்கள் வீசினர். இதையடுத்து சபாநாயகரை நோக்கி கோஷங்களை எழுப்பியவாறு அவர்கள் சென்ற நிலையில், அங்கிருந்த எம்பிக்களே அவர்களைப் பிடித்துக் கொடுத்தனர்.
பாஜக எம்பி: இதற்கிடையில், இந்த வழக்கை விசாரித்து வரும் டெல்லி போலீஸ் சிறப்புப் பிரிவு, இவருக்கும் பாஸ் வழங்கிய பாஜக எம்பி பிரதாப் சிம்ஹா என்பவரிடமும் வாக்குமூலத்தைப் பதிவு செய்யத் திட்டமிட்டுள்ளது.
மொபைல் தீ வைப்பு: நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் தொடர்பாக நேற்று 6ஆவது குற்றவாளி மகேஷ் குமாவத்தை டெல்லி போலீஸார் கைது செய்தனர். இந்த முழு சதியையும் மேற்கொண்டவர்களில் மகேஷ் குமாவத்தும் ஒருவர் ஆவர். மேலும், நாடாளுமன்ற வளாகத்திற்கு அருகே குற்றவாளிகளின் மொபைல், உடைகள் மற்றும் காலணிகளின் எரிந்த பாகங்களை போலீசார் மீட்டனர்.
இந்தச் சம்பவத்திற்கு மூளையாகச் செயல்பட்ட லலித் ஜா, அனைவரது மொபைல்களையும் வாங்கி, அதை உடைத்து தீ வைத்து எரித்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தை நடத்திவிட்டு லலித் ஷா மற்றும் விக்கி ஷர்மா ஆகியோர் அங்கிருந்த எஸ்கேப் ஆகி ராஜஸ்தான் செல்ல திட்டமிட்டனர். தங்களை டிராக் செய்யக் கூடாது என்பதற்காகவே அவர் இப்படி மொபைலை பிடுங்கி எரித்துள்ளார். ஆனாலும், போலீசார் தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தியதால், வியாழக்கிழமை அவர் போலீசாரிடம் சரணடைந்தார்.
தீ வைக்கத் திட்டம்: மேலும், இது தொடர்பாக வேறு சில பகீர் தகவல்களும் இப்போது வெளியாகியுள்ளது. இவர்கள் ஊடகங்களின் கவனம் பெற தங்களை தாங்களே தீ வைத்துக் கொள்ளவும் திட்டமிட்டுள்ளனர். இவர்கள் தங்கள் உடலில் தீப்பற்றாமல் இருக்கும் ஜெல் ஒன்றைத் தடவி அதன் பிறகு தங்களை தாங்களே தீ வைக்கத் திட்டமிட்டுள்ளனர். இதன் மூலம் உடலில் காயம் ஏற்படாது என்ற போதிலும் உடலில் தீ வைத்துக் கொண்டது போன்ற ஒரு பரபரப்பை ஊடகங்களில் பெற முடியும் என்பதே அவர்கள் திட்டம்.
இருப்பினும், சில காரணங்களுக்காக அவர்கள் இந்த யோசனையைக் கைவிட்டு, புகை ஏற்படுத்தும் குண்டுகளுடன் மக்களவைக்குள் நுழைந்து ரகளையில் ஈடுபட்டனர். மேலும், நாடாளுமன்றத்திற்குள் துண்டுப்பிரசுரங்களை வழங்கவும் திட்டமிட்ட நிலையில், அதையும் அவர்கள் சில காரணங்களால் மேற்கொள்ளவில்லை.
இந்த விவகாரத்தில் மத்திய பாஜக அரசைத் தான் பலரும் சாடி வருகின்றனர். குறிப்பாக உள்ளே ரகளை செய்த பாஜக எம்பி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications