இந்தியாவின் கேம் சேஞ்சர் மூவ்.. இனி ஆட்டமே மொத்தமா மாற போகுது.. உற்று பார்க்கும் உலக நாடுகள்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பிரதமர் மோடி இப்போது இஸ்ரேல் நாட்டிற்குப் பயணம் சென்றுள்ளார். பிரதமர் மோடியின் இந்தப் பயணம் பாதுகாப்பு, தொழில்நுட்பம் மற்றும் மத்தியக் கிழக்கு பிராந்தியத்தில் இந்தியாவின் நிலைப்பாடு ஆகியவற்றில் ஒரு திருப்புமுனையாக இது அமைகிறது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இந்த இஸ்ரேல் பயணம், இரு நாடுகளுக்கிடையேயான உறவுகளில் ஒரு மைல்கல் தருணமாகக் கருதப்படுகிறது. இரு நாடுகளுக்கும் இடையே அதிகரிக்கும் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் நம்பிக்கையைப் பிரதிபலிப்பதாக இது இருக்கிறது. மேலும், பிரதமர் மோடி மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோருக்கு இடையிலான வலுவான தனிப்பட்ட பிணைப்பையும் எடுத்துக்காட்டுகிறது.

Why PM Narendra Modi Israel Visit Is a Strategic Turning Point for India s Middle east policy

பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணம்

இது தொடர்பாக இஸ்ரேல் வர்த்தகத்திற்கான சிறப்புத் தூதர் ஃபிளூர் ஹசன்-நஹூம் கூறுகையில், "மிக முக்கியமான காலகட்டத்தில் இந்த பயணம் நிகழ்கிறது. கடந்த இரு ஆண்டுகளின் புவிசார் அரசியல் மாற்றங்கள் உலக மற்றும் மத்தியக் கிழக்கு இயக்கவியல் அடிப்படையையே மாற்றியுள்ளது. இது புதிய ஒத்துழைப்பிற்கான சாத்தியங்களையும் உருவாக்கியுள்ளது. மாறிவரும் கூட்டணிகள் மற்றும் உருவாக்கி வரும் பொருளாதார வழித்தடங்களையும் நாம் கவனிக்க வேண்டும்" என்றார்.

பாதுகாப்பு, தொழில்நுட்பம் மற்றும் மத்தியக் கிழக்கு பிராந்தியத்தில் இந்தியாவின் நிலைப்பாடு ஆகியவற்றில் ஒரு திருப்புமுனையாக இது அமைகிறது. இந்தப் பயணம் இந்தியாவின் நலன்களை வலுப்படுத்துவதுடன், பிராந்தியச் சமநிலையை உறுதிப்படுத்தும் ஒரு முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.

அயர்ன் டோம்

இஸ்ரேலின் அயர்ன் டோம் தொழில்நுட்பம் எந்தளவுக்கு வலிமையானது என்பது அனைவருக்கும் தெரியும். ஹமாஸ், ஈரான் தாக்குதல்களில் இருந்து இஸ்ரேலைக் காப்பாற்றியதே அந்தத் தொழில்நுட்பம் தான். அந்தத் தொழில்நுட்பத்தை இந்தியாவுக்குக் கொண்டு வருவதிலும் இந்தப் பயணம் முக்கிய பங்காற்றும். பாதுகாப்புத் துறையில், இஸ்ரேலின் மிகப்பெரிய ஆயுத பாட்னராக இருக்கும் இந்தியா, அயர்ன் டோம் தொழில்நுட்பப் பரிமாற்றத்தை விரும்புகிறது. "அயர்ன் பீம்" லேசர் அமைப்பைச் சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லைகளில் பயன்படுத்தத் திட்டமிடுகிறது. இது பயங்கரவாத அச்சுறுத்தலைத் திறன்பட எதிர்கொள்ள உதவும்!

தொழில்நுட்பம்

தொழில்நுட்பத் துறைக்கும் இந்தப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்தது. செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் கம்ப்யூட்டிங் மற்றும் சைபர் பாதுகாப்பு ஒப்பந்தங்கள் மூலம் இந்தியாவின் வளர்ச்சி இடைவெளிகளை இஸ்ரேல் நிரப்பும். இது 5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கு மற்றும் 'மேக் இன் இந்தியா' திட்டத்திற்கு மிகவும் அவசியமானதாக இருக்கும்.

மத்தியக் கிழக்கில் சமநிலையைப் பேணுவதிலும் இந்தியாவின் பங்கு முக்கியமாகிறது. இஸ்ரேல், இந்தியா, கிரீஸ், சைப்ரஸ் மற்றும் அரபு நாடுகள் இணைந்த நெதன்யாகுவின் ஹெக்சகன் கூட்டணி ஒன்றாக இணைந்து ஈரான் மற்றும் சீனாவை எதிர்கொள்ளும். பாலஸ்தீனத்திற்கு ஆதரவளிக்கும் அதே நேரம், இஸ்ரேலுடன் உறவுகளைப் பேணுவதன் மூலம் இந்தியா தனது சமநிலையை உறுதி செய்கிறது.

எரிசக்தி

எரிசக்தி பாதுகாப்புப் பொறுத்தவரை, வளைகுடா நாடுகளின் ஸ்திரத்தன்மை இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு முக்கியம். இஸ்ரேல்- இந்தியா எரிசக்தி வழித்தடம் பாகிஸ்தான் மற்றும் ஹவுதி உருவாக்கும் தடைகளைத் தவிர்க்க உதவும்.

அதாவது இந்தியாவின் தேசியப் பாதுகாப்பை வலுப்படுத்தவும், தொழில்நுட்பத்தில் பாய்ச்சல் அடையவும், மத்திய கிழக்கில் தனது நலன்களைப் பாதுகாக்கவும் தான் இந்தப் பயணம் அமைகிறது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் அயர்ன் டோமை இந்தியா வெறுமன வாங்காது. மாறாகத் தொழில்நுட்பப் பரிமாற்றம் நடக்கும். இதன் மூலம் இந்தியாவிலேயே அது இணைந்து தயாரிக்கப்படும். இது மேக் இன் இந்தியா தொழில்நுட்பத்திற்கு முக்கியமானதாகும். மேலும், 2 பில்லியன் டாலர் மதிப்பிலான பாதுகாப்பு ஒப்பந்தங்களும் (ட்ரோன்கள், ஏவுகணைகள்) கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+