அண்ணான்னு சொன்னாரே! டெல்லியில் இருந்துகொண்டே ஸ்டாலினை சந்திக்காத ராகுல்! அவரை பார்த்ததால் பிரச்சனையா
டெல்லி: டெல்லியில் நேற்று நடைபெற்ற திமுக அலுவலக திறப்பு விழாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் எம்பி ராகுல் காந்தி கலந்து கொள்ளாதது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. ராகுல் காந்தி இந்த விழாவில் கலந்து கொள்ளாதது ஏன் என்பது தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன.
திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா கருணாநிதி அறிவாலயம் டெல்லியில் கட்டப்பட்டுள்ளது. நேற்று டெல்லியில் நடந்த பிரம்மாண்ட விழாவில் இந்த கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்ட இந்த விழாவில் பல்வேறு முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், இடதுசாரி தலைவர்களான சீதாராம் யெச்சூரி, டி ராஜா, விசிக தலைவர் எம்பி திருமாவளவன், திமுக அமைச்சர்கள், காங்கிரஸ் எம்பிக்கள் பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

ராகுல் காந்தி
ஆனால் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை. முன்பாகவே காங்கிரஸ் தலைவர்களுக்கு இது தொடர்பான அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுவிட்டது. அதோடு முதல்வர் ஸ்டாலின் டெல்லி போன முதல் நாளே நாடாளுமன்ற அலுவலகத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முதல்வர் ஸ்டாலினை பார்த்து.. கண்டிப்பாக சன்டே நிகழ்வில் கலந்து கொள்வேன். இப்போது வணக்கம் சொல்லிவிட்டு போகலாம் என்று வந்தேன் என்று சிரித்தபடி பேசிவிட்டு நகர்ந்தார்.

சோனியா காந்தி
சோனியா காந்தி இப்படி நாடாளுமன்ற வளாகத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்தது அதிகம் கவனம் பெற்றது. ஆனால் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி அன்று நாடாளுமன்ற வளாகத்தில் தென்படவில்லை. முதல்வர் ஸ்டாலினை அன்றும் ராகுல் காந்தி பார்க்கவில்லை. இதுவே அப்போது பெரிய சர்ச்சையானது. ஏனென்றால் ராகுல் சென்னை வந்தால் கண்டிப்பாக ஸ்டாலின் அவரை சந்திப்பார்.

சந்திக்கவில்லை
முதல்வராக ஸ்டாலின் இரண்டாவது முறை இப்போதுதான் டெல்லி செல்கிறார். ஆனால் அவரை பார்க்காமல் ராகுல் புறக்கணித்து இருக்கிறார். சரி நேற்று நடந்த திமுக அலுவலக திறப்பு விழாவிற்காவது ராகுல் வருவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் நேற்று நடந்த நிகழ்ச்சியில் ராகுல் கலந்துகொள்ளவில்லை. காங்கிரஸ் சார்பாக மூத்த தலைவர் சோனியா, ப. சிதம்பரம் ஆகியோர்தான் இதில் கலந்து கொண்டனர்.

ராகுல் ஸ்டாலின்
ராகுல் காந்தி இப்படி திடீரென திமுக நிகழ்வை புறக்கணித்தது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. முதல்வர் ஸ்டாலினின் 'உங்களில் ஒருவன்' (பாகம்-1) சுயசரிதை புத்தக வெளியீட்டு விழா கடந்த பிப்ரவரி மாதம் சென்னை நந்தம்பாக்கத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்.பி., ராகுல்காந்தி கலந்துகொண்டார். இதில் பேசிய ராகுல் காந்தி, ஸ்டாலின் எனக்கு அண்ணன். நான் என்னுடைய அண்ணன் மு.க.ஸ்டாலினை, ஒரு சிறப்பான புத்தகத்தை எழுதியதற்காக பாராட்டுகிறேன்.

என் அண்ணன்
நான் ஸ்டாலினின் வயதை என் அம்மாவிடம் சொன்ன போது அவர் நம்பவே இல்லை. என்ன ஸ்டாலினுக்கு 69 வயதா என்று என்னை பார்த்து கேட்டார். ஸ்டாலின் இளமையாக இருக்கிறார். இதை பற்றியே அவர் ஒரு புத்தகம் எழுத வேண்டும், என்று ராகுல் மிகவும் உருக்கமாக நட்பாக பேசினார். அப்படி நட்பாக பேசிய அதே ராகுல்தான் நேற்று நடந்த நிகழ்வை புறக்கணித்து இருக்கிறார். அதோடு ஸ்டாலினை சந்திக்காமல் இருந்துள்ளார்.

என்ன நடந்தது?
டெல்லியில் இருந்து கொண்டே ராகுல் இப்படி செய்ய என்ன காரணம் என்று கேள்வி எழுந்துள்ளது. பஞ்சாப்பில் காங்கிரஸ் ஆட்சியை ஆம் ஆத்மி கட்சி பிடித்துள்ளது. இதனால் ஆம் ஆத்மி மீது காங்கிரஸ் கடும் கோபத்தில் உள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை முதல்வர் ஸ்டாலின் சந்தித்தார். ஒருவேளை ஸ்டாலின் கெஜ்ரிவாலை பார்த்ததால் ராகுல் காந்தி அதிருப்தியில் இருக்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கெஜ்ரிவால் காரணமா?
அதோடு பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் நேரில் அழைப்பு விடுத்த அதிருப்தி எதுவும் அவருக்கு இருக்கிறதா அல்லது மாநில அளவில் காங்கிரஸ் - திமுக உறவில் ஏதாவது பிரச்சனையா என்றும் கேள்வி எழுந்துள்ளது. இல்லையென்றால் தேசிய அளவில் மாநில கட்சிகள் அமைக்கும் கூட்டணியில் (இதில் மம்தா பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட வாய்ப்புகள் உள்ளன) இணையும் வகையில் திமுக செயல்படுவதால் ராகுல் எதுவும் அதிருப்தியில் இருக்கிறாரா என்றும் கேளிவி எழுந்துள்ளது.
-
நம்பி நம்பி.. வெம்பி வெம்பி.. அல்வா போல அள்ளிட்டுப் போன அண்ணியார்! வேதனையில் திருமா எடுத்த முடிவு! -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
திமுக போட்டியிடும் தொகுதிகள் எவ்வளவு.. கூட்டணி கட்சிகளுக்காக ஸ்டாலின் எடுக்கும் ரிஸ்க் -
2026ல் மீண்டும் ஸ்டாலின் முதல்வர்.. 180+ இடங்களை வெல்லும் திமுக கூட்டணி.. ANS சர்வே முடிவுகள்! -
சட்டசபை தேர்தலில் முன்னாள் அமைச்சர் பொன்முடி போட்டியில்லை? திருக்கோவிலூர் தொகுதியில் மகனுக்கு சீட் -
என்னை முதல்வராக்கினால்! பெண்களுக்கு ரூ 1 லட்சம்! ஆண்டிப்பட்டி திமுக எம்எல்ஏ பேச்சால் கோபத்தில் தலைமை -
திமுக எங்களுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கியதில் திருப்தி இல்லை.. இருந்தாலும்! சிபிஎம் சண்முகம் பேட்டி! -
VCK: இரட்டை இலக்கம் + 2028ல் ஒரு மாநிலங்களவை! விசிக தீர்மானம்! என்ன செய்ய போகிறார் திருமாவளவன்? -
கோவை மாவட்டத்தில் 6 தொகுதிகளை கேட்கும் கூட்டணி! திமுகவுக்கு நிம்மதி கொடுத்த அந்த ரிப்போர்ட்! -
திமுகவால் எப்படி சமூகநீதி அரசாக நடைபோட முடியும்? ஊழலை தோலுரித்து காட்டுவேன்! வேல்முருகன் -
உடையும் திமுக காங்கிரஸ் கூட்டணி? தொகுதிகளை முடிவு செய்வதில் நீடிக்கும் குழப்பம்! புதுச்சேரியில் பரபர -
"6 தொகுதிகளிலும் ஜெயித்திருப்போம்!" 2021 தேர்தல் குறித்து சிபிஎம் பெ.சண்முகம் அதிரடி விளக்கம்!












Click it and Unblock the Notifications