எல்லையில் இனி வாலாட்ட முடியாது.. வந்துவிட்டது அப்பாச்சி ஹெலிகாப்டர்கள்.. சிறப்பு அம்சங்கள் என்ன?
டெல்லி: அதிநவீன பாதுகாப்பு வசதிகள் கொண்ட அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்கள் இந்தியாவுக்கு வந்துள்ளன. ரூ.4,168 கோடி செலவில், ஆயுதங்கள் மற்றும் சென்சார்கள் பொருத்தப்பட்ட நிலையில் இந்த ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு அமெரிக்காவின் போயிங் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த அப்பாச்சி ஹெலிகாப்டர்களின் சிறப்பு அம்சங்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.
இந்தியாவுக்கு அதன் அண்டை நாடுகளில் இருந்து அச்சுறுத்தல் அதிகரித்து வருவதால், தற்போதைய காலச் சூழலுக்கு ஏற்ப அதிநவீன ஆயுதங்களைத் தனது பாதுகாப்புப் படையில் சேர்த்து வருகிறது. அந்த வகையில், உலகின் மிகவும் மேம்பட்ட பன்முனை தாக்குதல் ஹெலிகாப்டரான ஏ.எச்.-64இ (AH-64E) ரக 'அப்பாச்சி' இந்தியாவுக்கு வந்துள்ளது.

ரூ.4,168 கோடி செலவில்
அமெரிக்க ராணுவம் இயக்கி வரும் இந்த ஹெலிகாப்டரை வாங்குவதற்காக 2020 ஆம் ஆண்டு, அமெரிக்க விமானம் மற்றும் ஹெலிகாப்டர் தயாரிப்பு நிறுவனமான போயிங்கிடம் இருந்து 6 ஏ.எச்.-64இ ரக அப்பாச்சி ஹெலிகாப்டர்களை வாங்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி, ரூ.4,168 கோடி செலவில், ஆயுதங்கள் மற்றும் சென்சார்கள் பொருத்தப்பட்ட நிலையில் இந்த ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்நிலையில், 3 ஏ.எச்.-64இ ரக அப்பாச்சி ஹெலிகாப்டர்களை இந்திய ராணுவத்திடம் 'போயிங்' நிறுவனம் ஒப்படைத்துள்ளது. இந்த மூன்று ஹெலிகாப்டர்களும் ஜூலை 22, 2025 அன்று இந்தியாவுக்கு வந்து சேர்ந்தன. பல்வேறு அதிநவீன வசதிகள் கொண்ட இந்த ஹெலிகாப்டர்களால் இந்திய ராணுவத்தின் தாக்குதல் திறன் கணிசமாக அதிகரிக்கும் என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
முதல் கட்டமாக மூன்று அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் வந்துள்ள நிலையில், மீதமுள்ள 3 அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் நவம்பர் 2025-க்குள் ஒப்படைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அப்பாச்சி ஹெலிகாப்டர்களின் சிறப்பு அம்சங்கள் உள்ளிட்டவை பற்றி இங்கே பார்க்கலாம்.
அப்பாச்சி ஹெலிகாப்டர்களின் சிறப்பு அம்சங்கள்:
* அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்களில் 2 பேர் செல்ல முடியும். இதன் மொத்த எடை தாங்கும் திறன் 10,432 கிலோ ஆகும்.
* ட்ரோன்களை கட்டுப்படுத்த திறன் கொண்டதாக இந்த அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் உள்ளன. இதில் T700-GE-701D என்ஜின்கள் உள்ளன.
ராணுவ நடவடிக்கைகளுக்கு உதவியாக இருக்கும்
* தாக்குதலுக்கு மட்டுமின்றி, உளவு, பாதுகாப்பு மற்றும் அமைதி நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்த முடியும். இரவு நேரத்திலும் திறம்பட செயல்படும் நேவிகேசன் அமைப்பு உள்ளது.
* இந்த ஹெலிகாப்டரில் உள்ள தொழில் நுட்பங்கள் எந்த தட்ப வெப்பநிலையிலும் துல்லியமான தகவல்களை வழங்க கூடிய வகையில் உள்ளன.
* இந்த ஹெலிகாப்டர்களை போர்க்களத்தில் பல முனை நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த முடியும். ராணுவத்தின் நிலம், கடல், வான்வெளி, விண்வெளி மற்றும் சைபர் தலங்களில் குறிப்பிட்ட இலக்குகளை எட்டுவதற்கு ராணுவத்தின் நடவடிக்கைகளுக்கு உதவியாக இருக்கும்.
* இந்த ஹெலிகாப்டர், ஆன்-போர்டு மற்றும் ஆஃப்-போர்டு சென்சார்கள், நீண்ட தூர ஆயுதங்கள் மற்றும் சுற்றுச்சூழல் கருவிகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதனால், இது முழுமையாக மேம்படுத்தப்பட்ட தாக்குதல் திறன்களுடன் செயல்படுகிறது.
இரண்டு மேம்பட்ட என்ஜின்கள்
* இந்த ஹெலிகாப்டர்களை ஆளில்லா முறையிலும் இயக்க முடியும். இரண்டு மேம்பட்ட என்ஜின்களை கொண்டுள்ளது.
* அமெரிக்க ராணுவத்திடம் 1984 ஆம் ஆண்டு முதல் இந்த ஹெலிகாப்டர்கள் உள்ளன. அப்போது முதல் உலகின் பல்வேறு நாடுகளும் இந்த அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்களை வாங்கி வருகின்றன.
* இந்தியா மட்டும் இன்றி எகிப்து, கிரீஸ், இந்தோனேஷியா, இஸ்ரேல், ஜப்பான், கொரியா, குவைத், நெதர்லாந்து, சவுதி அரேபியா, சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், இங்கிலாந்து ஆகிய நாடுகளிடம் இந்த அப்பாச்சி ஹெலிகப்டர்கள் உள்ளன.
* அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் இந்திய ராணுவத்தில் இணைக்கப்பட்டு இருப்பது, பாதுகாப்பு படையின் வலிமையை மேலும் அதிகரிப்பதாக அமைந்துள்ளது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications