"பிரதமர் மீது நம்பிக்கை வையுங்கள்.." உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சொன்ன வாதம்! பின்னணி என்ன

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தலைமை தேர்தல் ஆணையரை நியமிக்கும் நடைமுறை சுதந்திரமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கூறிய உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையம் போன்ற அரசியலமைப்பு அமைப்புகளின் மீது பொதுமக்களின் நம்பிக்கை மிக முக்கியம் என்றும் அதனால் நியமன நடைமுறையிலும் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பாக 2023ல் மத்திய அரசு சட்டம் ஒன்றை கொண்டு வந்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபாங்கர் தத்தா மற்றும் சதீஷ் சந்திர சர்மா அமர்வு விசாரித்தது. இந்த விவகாரத்தை அரசியலமைப்பு அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்பதே மத்திய அரசின் பிரதான கோரிக்கையாக இருந்தது.

Supreme court election Comission Cental govt

மத்திய அரசு கேள்வி

இந்த வழக்கு நேற்றைய தினம் விசாரணைக்கு வந்தபோது, தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் குழுவில் இருந்து தலைமை நீதிபதி ஏன் நீக்கப்பட்டார் என்று உச்ச நீதிமன்றம் மத்திய அரசிடம் நேரடியாகவே கேள்வி எழுப்பியது. இது தொடர்பாக நீதிபதிகள், "சிபிஐ இயக்குநரை நியமிக்கும் குழுவிலும், லோக்பால் தேர்வு குழுவிலும் தலைமை நீதிபதி இடம்பெறுகிறார்.

அப்படியிருக்கும்போது, ஜனநாயகத்தின் முதுகெலும்பாக கருதப்படும் தேர்தல் ஆணையத்தின் நியமனத்தில் இருந்து மட்டும் அவரை நீக்கியது ஏன்? அதற்கான காரணம் என்ன?" தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படுவது மட்டுமல்ல.. அது சுதந்திரமாக செயல்படுகிறது என்ற நம்பிக்கையும் மக்களிடம் ஏற்பட வேண்டும்" என்றும் வலியுறுத்தினர்.

பிரதமரை நம்புங்கள்

அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, "பிரதமர் ஜனநாயகத்திற்கு எதிராக செயல்படுவார் என்ற எண்ணத்துடன் இந்த விவரத்தை நீதிமன்றம் அணுகக் கூடாது. பிரதமர் பதவிக்கு தனித்துவமான மரியாதை உள்ளது. எனவே, அந்த பதவியின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். நிர்வாகம், நாடாளுமன்றம், நீதித்துறை ஆகிய மூன்று அமைப்புகளும் தனித்தனியாக செயல்படுகின்றன. அவை ஒன்றுக்கொன்று மரியாதை அளிக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அரசியலமைப்புக்கு எதிராக செயல்படுவார்கள் என்று கருதுவது சரியல்ல" என்றார்.

நீதிமன்றம் பதில்

நீதிமன்றத்தில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் ஆர். வெங்கடரமணி, "நாடாளுமன்றத்திற்கு சட்டம் இயற்றும் அதிகாரம் இருக்கிறது. அது செல்லாது என சொல்லிவிட முடியாது. நாடாளுமன்றத்தின் சட்ட இயற்றும் அதிகாரத்தை நீதிமன்றம் கேள்வி எழுப்பக் கூடாது. நாடாளுமன்றத்தின் சுதந்திரத்தையும் மதிக்க வேண்டும்" என்று வாதிட்டார். இதற்கு பதிலளித்த நீதிபதிகள், "நாங்கள் பிரதமரின் நேர்மையை கேள்வி எழுப்பவில்லை. ஆனால், எந்த ஒரு அரசியலமைப்பு அமைப்பாக இருந்தாலும் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்க வேண்டும் என்பதை தான் வலியுறுத்துகிறோம்" என்றனர்.

மேலும், குற்ற பின்னணி கொண்டவர்களுக்கு பதவிகள் வழங்கக் கூடாது என்று மத்திய அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியதை சுட்டிக்காட்டிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள், "தற்போதைய அமைச்சரவையில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள அமைச்சர்கள் எத்தனை பேர் உள்ளனர்?" என்றும் கேள்வி எழுப்பினர். பிறகு இந்த வழக்கின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

பின்னணி

கடந்த 2023ல் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு, புதிய சட்டம் இயற்றப்படும் வரை தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் குழுவில் பிரதமர், தலைமை நீதிபதி மற்றும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் இடம்பெற வேண்டும் என்று உத்தரவிட்டது. அப்போது மத்திய அரசு உடனடியாக ஒரு சட்டத்தை கொண்டு வந்தது. அதன்படி தலைமை தேர்தல் ஆணையரை நியமிக்கும் குழுவில் தலைமை நீதிபதிக்கு பதிலாக பிரதமர் பரிந்துரைக்கும் மத்திய அமைச்சருக்கு இடம் வழங்கப்பட்டது. இந்த சட்டம் செல்லுமா செல்லாதா என்பதே உச்ச நீதிமன்றத்தில் வழக்காக இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+