Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆசிய சிறுத்தையை தவிர்த்து ஆப்பிரிக்க சிறுத்தைகள் கொண்டு வரப்பட்டது ஏன்? ஆய்வாளர்கள் விளக்கம்

இந்தியாவில் சிறுத்தைகளுக்கு கரடிகள், காட்டு நாய்கள், மற்றும் ஓநாய்களும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இன்று தென்னாப்பிரிக்காவிலிருந்து சுமார் 12 சிறுத்தைகள் இந்தியா வரும் நிலையில், ஏன் ஆசிய கண்டத்தில் இருக்கும் சிறுத்தையை இந்தியாவுக்கு கொண்டுவரவில்லை? என்று கேள்வி எழுந்திருக்கிறது. இதற்கு ஆப்பிரிக்க விலங்கியல் ஆய்வாளர் விளக்கமளித்துள்ளார்.

இந்தியாவில் 1947ம் ஆண்டுக்கு பின்னர் யாரும் சிறுத்தையை பார்க்கவில்லை. இதனையடுத்து 1952ம் ஆண்டு நாட்டில் எங்கும் சிறுத்தை இல்லையென்றும், உலகிலேயே மிக வேகமாக ஓடும் ஒரு உயிரினத்தை தேசம் இழந்துவிட்டது என்றும் அப்போதைய காங்கிரஸ் அரசு அறிவித்தது. அதன் பின்னர் 70 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் சிறுத்தை குறித்த பேச்சுக்கள் கதைகளில் மட்டுமே அங்கொன்றும் இங்கொன்றுமாக அடிப்பட்டது.

இந்நிலையில் ஏன் இந்தியாவுக்கு மீண்டும் சிறுத்தைகளை கொண்டுவரக் கூடாது? என்று கேள்வியெழுந்ததையடுத்து தற்போதைய மத்திய அரசு இதற்கான முயற்சிகளை தொடங்கியது. தென்னாப்பிரிக்காவின் நமீபியாவிலிருந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 8 சிறுத்தைகள் இந்தியாவுக்கு வந்தன. இதனை பிரதமர் மோடி மத்தியப் பிரதேசத்தில் உள்ள 'குனோ' பூங்காவில் திறந்து வைத்தார். இதன் மூலம் மீண்டும் இந்தியாவுக்கு சிறுத்தைகள் வந்தன.

ஆசிய சிறுத்தைகள்

ஆசிய சிறுத்தைகள்

ஆனால் இந்தியாவுக்கு ஏன் ஆசிய சிறுத்தைகளை கொண்டு வராமல் ஆப்பிரிக்க கண்டத்தின் சிறுத்தைகள் கொண்டு வரப்பட்டது? என்று பரவலாக கேள்வியெழுப்பப்படுகிறது. இதற்கு தென்னாப்பிரிக்காவின் கால்நடை மருத்துவரும், இந்தியாவுக்கு மீண்டும் சிறுத்தைகளை கொண்டுவரும் திட்டத்தில் செயலாற்றி வரும் முக்கிய நபருமான வின்சென்ட் வான் டெர் மெர்வே விளக்கமளித்துள்ளார். அவர் கூறியதாவது, "இந்த கேள்வி மிகவும் நியாயமானதுதான். ஏனெனில் ஆப்பிரிக்க சூழலும், ஆசிய சூழுலும் ஓரளவு ஒத்து இருந்தாலும், கணிசமான அளவு வேறுபட்டுள்ளன. இங்கு இருக்கும் விவசாய நிலப்பரப்பு போல எங்கள் நாட்டில் கிடையாது.

ஆப்பிரிக்க சிறுத்ததை

ஆப்பிரிக்க சிறுத்ததை

எனவே மீண்டும் இந்தியாவில் ஆசிய சிறுத்தைகள்தான் அறிமுகப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். ஒரு காலத்தில் ஆசிய கண்டம் முழுவதும் வாழ்ந்து வந்த சிறுத்தைகள் தற்போது ஈரானில் மட்டும்தான் இருக்கிறது. அதுவும் வெறும் 30-40 எண்ணிக்கையில்தான் இருக்கிறது. இந்த குறைந்த எண்ணிக்கையில் உள்ள சிறுத்தைகளை சிங்கம் மற்றும் புலியின் நடமாட்டம் அதிகம் உள்ள இந்தியாவுக்கு திரும்ப கொண்டு வருவது என்பது அக்னி பரீட்சையை போன்றதாகும். ஒரு வேலை இப்படி கொண்டுவரப்பட்ட சிறுத்தைகளும் இறந்து போனால் நம்மால் மீண்டும் ஆசிய சிறுத்தைகளை பார்க்கவே முடியாமல் போய்விடலாம்.

அச்சுறுத்தல்கள்

அச்சுறுத்தல்கள்

ஆனால் ஆப்பிரிக்க சிறுத்தைகளின் கதையே வேறு. இந்த சிறுத்தைகள் ஆசிய சிறுத்தைகளை விட சற்று வித்தியாசமாக இருக்கும். ஆனால் அதே நேரத்தில் சிங்கத்தையோ, புலியையோ நேருக்கு நேர் எதிர்கொண்டால் என்ன செய்வதென்றும் இதற்கு தெரியும். இந்தியாவில் சிறுத்தைகளுக்கு கரடிகள், காட்டு நாய்கள், மற்றும் ஓநாய்களும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. எனவே இவற்றை இந்த சிறுத்தைகள் எதிர்கொள்ளும்போது எதிர்திசையில் ஓடிவிடும். இப்படி ஓடும் சிறுத்தைகளை துரத்தி பிடிப்பது சாத்தியமற்றது. மட்டுமல்லாது நல்ல ஆரோக்கியமான எந்த நோயும் இல்லாத சிறுத்தைகள்தான் இந்தியாவுக்கு வருகின்றன" என்று கூறியுள்ளார்.

வித்தியாசம்

வித்தியாசம்

அதேபோல பிரிட்டோரியா பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியரும் கால்நடை மருத்துவ வனவிலங்கு நிபுணருமான அட்ரியன் டோர்டிஃப் கூறுகையில், "இந்தியாவை பொறுத்த அளவில் குடியிருப்புகளுக்கு எந்த வேலியும் கிடையாது. ஆனால் ஆப்பிரிக்காவில் அனைத்து வீடுகளும் வேலிகளால் சூழப்பட்டிருக்கும். எனவே இந்தியாவில் காட்டு விலங்குளை மக்கள் பெரியதாக தொந்தரவு செய்வது கிடையாது. இம்மாதிரியான மக்களுக்குக்காக சிறுத்தைகளை இடமாற்றம் செய்வது பெருமைக்குரியதாக இருக்கிறது" என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+