என்னதான் ஆச்சு டெல்லிக்கு.. கணவரை கொன்று 10 துண்டுகளாக்கிய மனைவி.. மகன் உடந்தை.. 2 ஷாக் காரணங்கள்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கொடூர கொலைகளின் தலைநகராக டெல்லி மாறிவருகிறதோ என்ற அச்சத்தை கிளப்புகிறது அடுத்தடுத்து நிகழும் சம்பவங்கள். ஸ்ரத்தா வாக்கர் 35 துண்டுகளாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் அதிர்ச்சி ஓய்வவதற்குள், அதே போன்ற சம்பவம் டெல்லியில் அரங்கேறி இருக்கிறது.

டெல்லி பாண்டவ் நகர் பகுதியை சேர்ந்தவர் பூணம். இவருக்கும் அஞ்சன் தாஸ் என்பவருக்கும் திருமணம் நடைபெற்று ஒரு மகன் உள்ளார். அஞ்சன் தாஸுக்கும் பூணத்திற்கும் இது இரண்டாவது திருமணம்.

அஞ்சன் தாஸுக்கு பீகாரை சேர்ந்த பெண்ணுக்கும் முதல் திருமணம் நடைபெற்று 8 குழந்தைகள் பிறந்து உள்ளன. அந்த மனைவி தற்போது குழந்தைகளுடன் பீகாரில் வசித்து வந்து இருக்கிறார்.

2வது திருமணம்

2வது திருமணம்

அதேபோல் பூணத்திற்கு ஏற்கனவே ஒருவருடன் திருமணமாகி தீபக் என்ற மகன் இருக்கிறார். தீபக்கிற்கும் திருமணம் ஆகிவிட்டது. இந்த நிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டு கேன்சர் நோய் பாதிப்பு காரணமாக கணவர் இறந்துவிட அஞ்சன் தாஸை அவர் திருமணம் செய்து உள்ளார். இருவரும் டெல்லி பாண்டவ் நகரில் வசித்து வந்து உள்ளனர்.

முதல் மனைவிக்கு உதவி

முதல் மனைவிக்கு உதவி

8 குழந்தைகளுடன் போதிய பொருளாதார வசதி இல்லாமல் சிரமப்பட்டு வந்த தனது முதல் மனைவிக்கு அவ்வப்போது செலவுக்கு பணம் அனுப்பி வைத்து வந்திருக்கிறார் அஞ்சன் தாஸ். இந்த நிலையில் பூணத்தின் நகைகளையும் விற்றுவிட்டு அஞ்சன் தாஸ் தனது முதல் மனைவிக்கு பணம் அனுப்பியதாக கூறப்படுகிறது. இது பூணத்திற்கு தெரியவந்து உள்ளது.

 மகனுடன் கொலை

மகனுடன் கொலை

இதனை அறிந்து அதிர்ச்சியடைந்த பூணம், இதுகுறித்து மகன் தீபக்கிடம் தெரிவித்து உள்ளார். அஞ்சன் தாஸை கொலை செய்ய இருவரும் திட்டம் தீட்டி இருக்கின்றனர். கடந்த ஜூன் மாதம் தீபக்கிற்கு போதை தலைகேறும் வகையில் மதுவை இருவரும் ஊற்றிக் கொடுத்து உள்ளனர். ஒரு கட்டத்தில் அவர் சுயநினைவை இழந்து உள்ளார்.

பல துண்டாக வெட்டி கொலை

பல துண்டாக வெட்டி கொலை

அதன் பின்னர் தாயும் மகனும் சேர்ந்து அஞ்சன் தாஸை கொன்று இருக்கிறார்கள். அவரது உடலை பல துண்டுகளாக வெட்டிய இருவரும், வெவ்வேறு இடங்களில் உடல் பாகங்களை வீசி இருக்கிறார்கள். உடலின் முதல் பாகத்தை அவர்கள் வசித்த பாண்டவ் நகர் பகுதிக்கு அருகிலேயே கடந்த ஜூன் மாதம் கண்டுபிடித்த போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

போலீஸ் விசாரணை

போலீஸ் விசாரணை

ஆனால், உடல் அழுகிய நிலையில் இருந்ததால் அது யார் என்பதை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனை தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை அவர்கள் ஆய்வு செய்தபோது ஒரு பெண்ணும் அவரது மகனும் உடல் பாகம் கிடந்த இடத்துக்கு இரவு நேரங்களில் அடிக்கடி வருவதை கண்டறிந்தனர்.

ஃப்ரிட்ஜில் உடல் பாகம்

ஃப்ரிட்ஜில் உடல் பாகம்

இதை வைத்து நடத்தப்பட்ட விசாரணையில் கொல்லப்பட்டது அஞ்சன் தாஸ் எனவும், பூணம் தனது மகனோடு சேர்ந்த இந்த கொலையை அரங்கேற்றி இருப்பது தெரியவந்தது. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் உடலை 10 துண்டுகளாக வெட்டி ஃப்ரிட்ஜில் வைத்தது தெரியவந்தது. இதுவரை 6 பாகங்களை போலீசார் கண்டுபிடித்து உள்ளனர்.

 மற்றொரு காரணம்

மற்றொரு காரணம்

கொல்லப்பட்ட பூணமின் 2வது கணவர் ஆஞ்சன் தாஸ், தன்னுடைய மனைவிடம் தகாத முறையில் நடந்துகொள்ள முயன்றதால் இந்த கொலைக்கு தாயுடன் சேர்ந்து தானும் சம்மதம் தெரிவித்ததாக போலீசாரிடம் விளக்கி உள்ளார். ஆனால் அஞ்சன் தாஸை காணவில்லை என போலீசுக்கு இதுவரை எந்த புகாரும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+