என்ன மேக மூட்டம் ரேடாரை மறைக்குமா? எனக்கு ஒரு டவுட்டு மோடி ஜி.. கலாய்க்கும் ராகுல்!
மேகமூட்டம் இருந்ததால் நமது போர் விமானங்கள் பாகிஸ்தானின் ரேடாரில் இருந்து தப்பிவிட்டதாக பிரதமர் மோடி பேசியதை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தற்போது கிண்டல் செய்துள்ளார்.
Recommended Video
டெல்லி: மேகமூட்டம் இருந்ததால் நமது போர் விமானங்கள் பாகிஸ்தானின் ரேடாரில் இருந்து தப்பிவிட்டதாக பிரதமர் மோடி பேசியதை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தற்போது கிண்டல் செய்துள்ளார்.
பாலக்கோடு தாக்குதல் எப்படி நடத்தப்பட்டது என்பது குறித்து பிரதமர் மோடி நியூஸ் நேஷன் தொலைக்காட்சிக்கு கடந்த வாரம் பேட்டி அளித்தார். இதில் பிரதமர் மோடி ரேடார் தொழில்நுட்பம் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

மோடி தனது பேச்சில், பாலக்கோடு தாக்குதல் திட்டமிடப்பட்ட அன்று இரவு 9-9.30 மணி இருக்கும். நான் தாக்குதலுக்கான ஏற்பாடுகளை ஆராய்ந்து கொண்டு இருந்தேன். ஆனால் வானிலை திடீர் என்று மோசமாக மாறிவிட்டது. நாங்கள் அதை எதிர்பார்க்கவில்லை.
நிறைய கருமேகம் இருந்தது. இந்த ஆபரேஷனை செய்ய முடியுமா என்று நாங்கள் நினைத்தோம். அதிகாரிகள் என்னிடம் ஆபரேஷனை தள்ளி வைக்கலாமா என்று கேட்டார்கள். ஆனால் தற்போது நிறைய மேகம் இருக்கிறது, மழை பெய்கிறது. இது விமானத்தை மறைக்கும், அதனால் இந்திய விமானப்படை ரேடாரில் இருந்து தப்பிக்க முடியும்.
அதனால் நான்தான் ஓகே சென்று தாக்குங்கள், மேகம் நம்மை காப்பாற்றும், என்று குறிப்பிட்டேன் என்று மோடி குறிப்பிட்டுள்ளார். தற்போது இதை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கிண்டல் செய்து இருக்கிறார்.
மத்திய பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய ராகுல் காந்தி, மோசமான வானிலை நிலவும் போது ரேடாரால் விமானத்தை கண்டுபிடிக்க முடியாது என்று மோடி கூறி இருக்கிறார். நான் அவரிடம் ஒரு கேள்வி கேட்கிறேன். இந்தியாவில் எப்போது மழை பெய்தாலும் ரேடாரில் இருந்து அனைத்து விமானங்களும் அப்படியே மறைந்துவிடுமா மோடி ஜி.. சொல்லுங்கள், என்று கிண்டலாக கேள்வி எழுப்பி உள்ளார்.
ராகுலின் இந்த பேச்சு பிரச்சாரத்தில் மக்களிடையே பெரிய அளவில் கைதட்டலை பெற்றது. முன்னதாக மோடியின் ரேடார் பேச்சை விமர்சித்த காங்கிரஸ் உத்தர பிரதேச மாநில கிழக்கு பகுதி பொதுச்செயலர் பிரியங்கா காந்தி, மோடி மக்களின் ரேடாரில் இருந்து எப்போதும் தப்பிக்க முடியாது என்று கூறினார்.
மோடியின் இந்த ரேடார் பேச்சு உலகம் முழுக்க வைரலானது குறிப்பிடத்தக்கது. பல நாட்டை சேர்ந்த நெட்டிசன்கள் இதை கிண்டல் செய்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications