டெல்லி மெட்ரோ ரயில் என்ன பாவம் பண்ணுச்சு? ரீல்ஸ் செய்தா அபராதம் விதிங்க.. நெட்டிசன்கள் கமெண்ட்!
டெல்லி: டெல்லி மெட்ரோ ரயில் எந்த நேரத்தில் தொடங்கப்பட்டதோ தொடர்ந்து சர்ச்சைகளாகவே நடக்கிறது. அந்த ரயில் என்ன பாவம் பண்ணுச்சோ என நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகிறார்கள்.
மெட்ரோ ரயில்- பார்ப்பதற்கு ஸ்டைலிஷ்ஷாக, டம்ளர் நிறைய தண்ணீரை கொண்டு சென்றாலும் கீழே ஒழுகாத நல்ல கட்டமைப்பை கொண்டது. முழுக்க முழுக்க ஏசி! பாசன்ஜர் ரயில்களில் அலுப்பே தெரியாது. மெட்ரோ ரயில் என்றால் கேட்கவா வேண்டும்?

பெரும்பாலும் மெட்ரோவில் பயணிப்பதையே மக்கள் விரும்புகிறார்கள். டெல்லி மெட்ரோ ரயிலை தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த ரயிலில் சில நேரங்களில் சர்ச்சையான சம்பவங்கள் நடக்கின்றன.
ஒரு முறை அரை நிர்வாண உடையில் வந்த ஆண் பயணி ஒருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதையடுத்து பெண் ஒருவர் தனது நிறுத்தம் வந்தவுடன் இறங்குவதற்காக எழுந்தார். பார்த்தால் பிகினி போன்ற உடையை அணிந்திருந்தார். அனைவரது பார்வையும் அவர் மீதுதான் இருந்தது. கீழே அணிந்திருந்த ஆடையில் ஆங்காங்கே ஸ்டைலுக்காக கிழிந்திருந்தது. அது எலி கடித்துவிட்டதா என நெட்டிசன்கள் கிண்டல் செய்தனர்.
இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவியது. ஆடை என்பது தனிப்பட்ட சுதந்திரம் என்றும் பொது இடங்களில் கண்ணியமான ஆடைகளை அணிவதே பாதுகாப்பு என்றும் இரு வேறு கருத்துகள் விவாதிக்கப்பட்டன. இதையடுத்து டெல்லி மெட்ரோ நிர்வாகம் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் டீசன்ட்டான ஆடைகளை பயணிகள் அணிந்து வருமாறு கேட்டுக் கொண்டது.
இந்த சர்ச்சை அடங்கிய நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர் ஒருவர் இந்த டெல்லி மெட்ரோ ரயிலில் பல் தேய்த்து கொண்டே வந்தார். இதற்கு அவர் கூறிய காரணம், ஆபிஸுக்கு தாமதமாகிவிட்டதாம், அதனால் நேரத்தை மிச்சம் செய்ய ரயிலில் பல் துலக்குவதாக தெரிவித்தார். இதெல்லாம் அநியாயம் இல்லையா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பினர். இந்த பரபரப்பு அடங்குவதற்கு தற்போது மீண்டும் ஒரு பிரச்சினை கிளம்பிவிட்டது.
டெல்லி மெட்ரோ ரயிலில் வீடியோ எடுக்கக் கூடாது , ரீல்ஸ் செய்யக் கூடாது என நிர்வாகம் பல முறை எச்சரிக்கை விடுத்துள்ளது. எனினும் யாரும் கேட்பதே இல்லை. அதற்கு முத்தாய்ப்பாக பெண் ஒருவர் எடுத்த வீடியோ அமைந்துள்ளது. சிகப்பு நிற டீசர்ட், சாம்பல் நிறத்தில் குட்டை பாவடை அணிந்த படியே பெண் ஒருவர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார்.
அவர் திடீரென ரீல்ஸ் செய்வதற்காக பஞ்சாபி மொழியில் காகா பாடிய ஷேப் எனும் பாடலை ஒலிக்கவிட்டு அதற்கு நடனம் ஆடினார். இந்த வீடியோவை அவருடைய இன்ஸ்டாகிராமில் போட்டுள்ளார். அதில் டெல்லி மெட்ரோ ரயிலில் வீடியோ எடுக்கக் கூடாது என எனக்கு தெரியும். இருந்தாலும் முதல்முறையாக எடுத்துள்ளேன் என குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ 20 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
இந்த வீடியோவுக்கும் ஆதரவு எதிர்ப்பு என இரு வேறு கருத்துகள் நிலவுகின்றன. பொது இடங்களில் விதிகளை மீறினால் சம்பந்தப்பட்ட நிர்வாகம் அபராதம் விதிக்க வேண்டும் என சிலர் வலியுறுத்தி வருகிறார்கள். டெல்லி மெட்ரோ ரயில் தனது ட்விட்டரில் பயணம் செய்ங்க! ஆனால் யாரையும் தொந்தரவு செய்யாதீங்க என்றும் டெல்லி மெட்ரோவில் பயணியாக இருங்க, தொல்லையாக இருக்காதீங்க என குறிப்பிட்டுள்ளது.

இது போல் மெட்ரோவில் தேவையில்லாத விஷயங்களை செய்வோருக்கு மெட்ரோவில் பயணிக்கவே தடை விதிக்க வேண்டும் என்கிறார் இந்த வலைஞர்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications