ஹோலி.. நாளை முழுதும் வீட்டில் பூஜை செய்யும் அரவிந்த் கெஜ்ரிவால்..பின்னணியில் பிரதமர் மோடியாம்! ஆஹா

டெல்லியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சத்யேந்தர் ஜெயின், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சத்யேந்தர் ஜெயின் மற்றும் துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோடியா ஆகியோரை அமலாக்கத்துறை, சிபிஐ கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. இந்நிலையில் ஹோலி பண்டிகையான நாளை முழுவதும் அரவிந்த் கெஜ்ரிவால் தனது வீட்டில் பூஜை செய்ய உள்ள தகவல் வெளியாகி உள்ளது. இந்த பூஜையின் பின்னணி என்ன? என்பது பற்றிய விபரமும் வெளியாகி உள்ளது. இதுபற்றி அரவிந்த் கெஜ்ரிவால் முக்கிய தகவலை கூறியுள்ளார்.

டெல்லியில் ஆம்ஆத்மி ஆட்சி நடக்கிறது. அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளராக அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக உள்ளார். இவரது அமைச்சரவையில் துணை முதல்வராக மணீஷ் சிசோடியா மற்றும் சுகாதாரத்துறை அமைச்சராக சத்யேந்தர் ஜெயின் இருந்தனர்.

இந்நிலையில் தான் கடந்த ஆண்டு பணமோசடி வழக்கில் சத்யேந்தர் ஜெயினை அமலாக்கத்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதேபோல் கடந்த மாதம் 26ம் தேதி டெல்லி புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் சிபிஐ அதிகாரிகள் மணிஷ் சிசோடியாவை கைது செய்தனர்.

எதிர்க்கட்சிகள் விமர்சனம்

எதிர்க்கட்சிகள் விமர்சனம்

இதற்கு ஆம்ஆத்மி கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆம்ஆத்மி கட்சியை பார்த்து பாஜக பயப்படுகிறது. பொய் குற்றச்சாட்டுகள் மூலம் பாஜக மத்திய விசாரணை அமைப்புகள் மூலம் கட்சி தலைவர்களை கைது செய்து செயல்பாட்டை தடுக்க பார்க்கிறது என குற்றம்சாட்டியது. இதேபோல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் இந்த விஷயத்தில் எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது.

ஹோலி தினத்தில் கெஜ்ரிவால் பூஜை

ஹோலி தினத்தில் கெஜ்ரிவால் பூஜை

இந்நிலையில் தான் நாடு முழுவதும் நாளை ஹோலி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த ஹோலி திருவிழா தென்மாநிலங்களை காட்டிலும் வடமாநிலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றவையாகும். இந்த வேளையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஒன்றுகூடி ஒருவர் மீது ஒருவர் வண்ண பொடிகளை தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். இந்த ஆண்டுக்கான ஹோலி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது. ஹோலி குளிர்காலத்தின் முடிவையும் வசந்த காலத்தின் மகிழ்ச்சியான நாட்களின் தொடக்கத்தையும் குறிக்கிறது. இந்நிலையில் தான் ஹோலி தினமான நாளை ஒருநாள் முழுவதும் வீட்டில் சிறப்பு பூஜை நடத்த உள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

சிறையில் அடைக்கும் மோடி

சிறையில் அடைக்கும் மோடி

இதுதொடர்பாக அவர் இன்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியதாவது: நாட்டின் நிலையை நினைத்து நான் மிகவும் கவலைப்படுகிறேன். அரசு பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் மோசமான நிலையில் இருப்பதை நாம் அறிந்துள்ளோம். ஆனால் இந்த அரசு பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் டெல்லியில் 2 பேர் மேம்படுத்தினர். ஒருவர் மணீஷ் சிசோடியா, இன்னொருவர் சத்யேந்திர ஜெயின். தற்போது இவர்கள் 2 பேரும் சிறையில் உள்ளனர். நல்ல கல்வி, நல்ல சுகாதார வசதிகளை வழங்குபவர்களை பிரதமர் நரேந்திர மோடி சிறையில் அடைக்கிறார். மேலும் நாட்டை கொள்ளையடிக்கும் நபர்களின் ஆதரவு நிலைப்பாட்டால் நாடு கவலை கொள்கிறது.

பூஜையுடன் பிரார்த்தனை

பூஜையுடன் பிரார்த்தனை

இதனால் நான் நாட்டுக்காக நாளை தியானத்துடன் பிரார்த்தனை செய்ய உள்ளேன். மேலும் பிரதமர் மோடி செய்வது தவற என நினைத்தால் நீங்களும் நாட்டை பற்றி கவலைப்படுகிறீர்கள் என அர்த்தம். ஹோலி கொண்டாடிய பிறகு நாட்டுக்காக அனைவரும் பிரார்த்தனை செய்ய நேரம் ஒதுக்க வேண்டும். கைது செய்யப்பட்டுள்ள மணீஷ் சிசோடியா மற்றும் சத்யேந்தர் ஜெயின் ஆகியோருக்காக நான் ஒருபோதும் கவலைப்படவில்லை. ஏனென்றால் இருவரும் தைரியமானவர்கள். துணிச்சல் மிக்கவர்கள். அவர்கள் நாட்டிற்காக தியாகம் கூட செய்ய தயாராக உள்ளனர். அவர்களின் மனஉறுதியை யாராலும் உடைக்க முடியாது.

 சாமானியர்களுக்கு உழைக்க..

சாமானியர்களுக்கு உழைக்க..

இதனால் தான் நான் நாட்டின் நிலையை நினைத்து கவலைப்படுகிறேன். சாமானியர்களுக்காக உழைக்கவோ, சாமானியர்களின் பேச்சைக் கேட்கவோ யாரும் இல்லை. பணக்காரர்களுக்கு மட்டுமே கிடைத்த கல்வியை 75 ஆண்டுகளுக்கு பிறகு ஏழை எளியவர்களுக்கு வழங்கியவர் மணீஷ் சிசோடியா. மோசமான மருத்துவமனைகளை மொஹல்லா கிளினிக் திட்டத்துடன் சேர்த்து ஏழைகளுக்கு தரமான சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுத்தவர் தான் சத்யேந்தர் ஜெயின். தற்போது இவர்கள் 2 பேர் மீதும் பொய் வழக்குகள் போட்டு சிறையில் தள்ளியுள்ளனர்'' என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+