பெண்களை குறி வைத்த நிர்மலா.. கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி உட்பட பல அறிவிப்புகள்
டெல்லி: கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுக்க 9 முதல் 14 வயது வரையிலான சிறுமிகளுக்கு தடுப்பூசி போடுவதை ஊக்குவிக்கும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
எச்பிவி தடுப்பூசி மூலம் கர்ப்பப்பைப் புற்றுநோயைத் தடுக்க முடியும் என்று உலக சுகாதார அமைப்பு அங்கீகரித்துள்ளது. 9 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு ஒரு முறை எச்பிவி தடுப்பூசியை செலுத்துவதற்கு நோய் எதிர்ப்பு சக்திக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக்குழு பரிந்துரைத்துள்ளது.

இதனிடையே இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டினை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதராமன்,
2047ல் புதிய இந்தியாவை படைப்போம். கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். மகளிர் இட ஒதுக்கீடு, முத்தாக் தடை போன்ற பெண்களுக்கான சட்டங்களை பாஜக அரசு நிறைவேற்றி உள்ளது.
பெண்கள் உயர்கல்வி பயில்வது 10 ஆண்டுகளில் 28 சதவிகிதம் அதிகரித்துள்ளது. முத்ரா திட்டத்தின் கீழ் பெண்களுக்கு ரூ30 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. பிரதான் மந்திரி வீடு காட்டும் திட்டம் மூலம் 70% பெண்களுக்கு வீடு வழங்கப்பட்டுள்ளன
இந்திய பொருளாதாரம் பெரும் பாய்ச்சலில் முன்னேறி வருகிது என்று கூறியு நிர்மலா சீதாராமன், பத்தாண்டுகளில் 25 கோடி பேர் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். அனைவரையும் அரவணைக்கும் அரசாக மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.
80 கோடி குடும்பங்களுக்கு இலசர ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி பாதையில் நாடு சென்று கொண்டிருக்கிறது.
தேசியக் கல்விக்கொள்கை இந்திய கல்வி துறையில் பெரும் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. எங்களின் வளர்ச்சி பணிகளுக்காக மக்கள் மீண்டும் எங்களை பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர்த்துவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. விவசாயிகள், ஏழைகள், பெண்கள் ஆகியோருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
அடுத்த 5 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவிற்கு வளர்ச்சி இருக்கும். மத்திய அரசு எடுத்த சீர்திருத்த நடவடிக்கையால் நாட்டின் பணவீக்கம் குறைந்துள்ளது என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
முத்தலாக் தடை, மாநில சட்டசபை, லோக்சபாவில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு, ஆவாஸ் யோஜனா மூலம் கிராமப்புறங்களில் வீடுகள் கட்டி தருதல் ஆகியவை பெண்களின் வாழ்வில் ஏற்றம் அளித்துள்ளன.
வாடகை வீடுகள், குடிசை வீடுகள், அங்கீகரிக்கப்படாத காலனிகளில் வசிக்கும் மக்களுக்கு சொந்த வீடு கட்டி தருவது தொடர்பாக புதிய திட்டம் ஒன்றை மத்திய அரசு அறிமுகம் செய்யப் போகிறது. இது நடுத்தர மக்களுக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும்.
பெண்களைப் பாதிக்கும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளே பயன்படுத்தப்பட்டு வந்தது. இதற்கான தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்க சீரம் நிறுவனத்திற்குக் கடந்த ஆண்டு மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது. பலகட்டங்களாகச் சோதனைகள் நடத்தப்பட்டு தற்போது தடுப்பூசி தயாரிக்கப்பட்டுள்ளது.
கர்ப்பப் பை புற்றுநோயை தடுக்க தடுப்பூசி திட்டம் அறிமுகப்படுத்தப்படும். ஊட்டச்சத்து குறைபாடுகளை சரிசெய்ய புதிய செயலி அறிமுகம் செய்யப்படும். அங்கன்வாடி மற்றும் ஆஷா பணியாளர்களுக்கு ஆயுஷ்மான் பாரத் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் கூறினார்.
கர்ப்பப்பைவாய் புற்றுநோய் இந்தியாவில் அதிகம் பாதிப்பை ஏற்படுத்துவதில், இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த நோய் பெரிதும் தவிர்க்கக் கூடியதாக இருந்தபோதும், இந்த புற்றுநோயால் உலகில் ஏற்படும் மரணங்களில் சுமார் நான்கில் ஒரு பங்கு இந்தியாவில் ஏற்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1.25 லட்சம் பெண்களுக்கு கர்ப்பப்பைவாய் புற்றுநோய் இருப்பது கண்டறியப்படுவதாகவும், இவர்களில், 75,000 பேர் உயிரிழப்பதாகவும் மத்திய அரசின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து கர்ப்பப்பைவாய் புற்றுநோயை தடுக்கும் செர்வாவாக் தடுப்பூசி உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ளது. கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுக்க 9 முதல் 14 வயது வரையிலான சிறுமிகளுக்கு தடுப்பூசி போடுவதை ஊக்குவிக்கும் என்று பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications