டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

10வது அட்டவணையில் ஆன்டிபாடி இருக்கு.. சிபிஐ விசாரணைக்கு காங். எதிர்ப்பு.. ராஜஸ்தான் ஆடியோ பூதாகரம்!

Google Oneindia Tamil News

டெல்லி: ராஜஸ்தானில் ஆட்சியை கவிழ்க்க குதிரை பேரம் நடப்பதாக ஆடியோ வெளியிட்டு காங்கிரஸ் குற்றம்சாட்டி வரும் நிலையில், இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு பாஜக கோரியுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள காங்கிரஸ், சிபிஐ விசாரணை கோருவது என்பது மிகப்பெரிய ஏமாற்று வேலை என்றும் உண்மையை மூடி மறைக்க இப்படி கேட்பதாகவும் குற்றம்சாட்டி உள்ளது.

ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு எந்த நேரமும் கவிழும் அபாயத்தில் உள்ளது. முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் தலைமையில் 199 எம்எல்ஏக்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். இதனால் அவர்களுக்கு தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

கர்நாடகா, மத்திய பிரதேசத்தைத் தொடர்ந்து ராஜஸ்தானிலும் ஆட்சியை பறிகொடுக்கும் அபாயத்தில் காங்கிரஸ் இருக்கிறது. இந்நிலையில் பாஜகவினர் ஆளும் காங்கிரஸ் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது.

முதல்வர் அசோக் கெலாட்டின் ஆட்சியைக் கவிழ்க்க சதித்திட்டம் தீட்டும் வகையில் இரு ஆடியோக்களை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான கஜேந்திர சிங் ஷெகாவத், காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ பன்வாரி லால் சர்மா, சஞ்சய் ஜெயின் ஆகியோர் அசோக் கெலாட் ஆட்சியை கவிழ்கக் பேரம் பேசியதாக ஆடியோ வெளியாகி உள்ளது.

ஈரானில் 2.5 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு- அதிபர் ஹாசன் ரவுகானி அதிர்ச்சி தகவல்ஈரானில் 2.5 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு- அதிபர் ஹாசன் ரவுகானி அதிர்ச்சி தகவல்

விளக்கம் அளிக்க உத்தரவு

விளக்கம் அளிக்க உத்தரவு

இது குறித்து விளக்கமான அறிக்கை அளிக்கக் கோரி மாநிலத் தலைமைச் செயலாளருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.இதனிடையே இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என பாஜக கோரியுள்ளது. இதற்கு வழக்கறிஞரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான அபிஷேக் மனு சிங்வி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்., "ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் அரசாங்கத்தை கவிழ்க்க சதி செய்ததாகக் கூறப்படும் விசாரணை முடிவடைவதைத் தவிர்க்க பாஜக முயற்சிப்பதாக குற்றம் சாட்டி உள்ளார்.

மிகப்பெரிய சீட்டிங்

மிகப்பெரிய சீட்டிங்

விசாரணைகளை செயல்முறையை நிறைவு செய்வதைத் தவிர்ப்பதற்கு, பதிலாக தங்களுக்கு வசதியாக பாஜக சிபிஐ விசாரணை கோருகிறது. மத்திய உள்துறை அமைச்சகம் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்கிறது என்றும் அபிஷேக் மனு சிங்வி தனது ட்வீட்டில் கூறினார். மேலும் சிபிஐ விசாரணை கோருவது மிகப்பெரிய ஏமாற்று வேலை, உண்மையை மூடி மறைக்கும் செயல் என்றும் குற்றம்சாட்டி உள்ளார்.

அபிஷேக் சிங்வி ஆஜர்

அபிஷேக் சிங்வி ஆஜர்

முன்னாள் முதல்வர் சச்சின் பைலட் உள்ளிட்டோருக்கு ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் சிபி ஜோஸி தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பியதை எதிர்த்து டோங்க் எம்எல்ஏ வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சபாநாயகர் சார்பில் அபிஷேக் மனு சிங்வி தான் ஆஜராகிறார். இதனிடையே குதிரை பேரம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் கபில் சிபல் ஞாயிற்றுக்கிழமை காலை வெளியிட்ட ட்வீட்டில், ஊழல் வைரஸ் பரவுவதை தடுக்க தடுப்பூசி தேவை என்று கூறியுள்ளார்.

10வது அட்டவணை

10வது அட்டவணை

அந்த ட்வீட்டில் "தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களை கவிழ்ப்பதற்கான 'ஊழல் வழிமுறைகள் வைரஸ்' டெல்லியில் வுஹான் போன்று பரவியுள்ளது. இதற்கு அரசியல் அமைப்பின் பத்தாவது அட்டவணையை திருத்துவதில் தான் ஆன்டிபாடிகள் உள்ளன" என்று சிபல் மேலும் கூறினார்.

Recommended Video

    Rajasthan Boy Climbs Mountain for Online Classes
    போராட வேண்டும்

    போராட வேண்டும்

    அரசுகளை கலைக்க விரும்பும் அனைவரையும் 10வது அட்டவணையை திருத்துவதன் மூலம் தடை செய்ய வேண்டும். 5 ஆண்டுகள் அரகளை நிலையாக வைத்திருப்பதற்கு , அடுத்த தேர்தலில் போராட வேண்டும் என்றும் கபில் சிபல் கூறியுள்ளார்.

    English summary
    "Virus of corrupt means to topple elected governments has spread through a Wuhan like facility in Delhi. It’s antibodies lie in amending the Tenth Schedule," Kapil Sibal
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X