நீதிபதி மீது விமர்சனம்-2-வது மன்னிப்பு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய துக்ளக் குருமூர்த்தி மறுப்பு!
டெல்லி: டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த முரளிதர் குறித்து அவதூறாக கருத்து தெரிவித்த வழக்கில் துக்ளக் குருமூர்த்தி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி 2-வது பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய டெல்லி உயர்நீதிமன்றத்தில் மறுத்துள்ளார்.
2018-ம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த நீதிபதி முரளிதர் குறித்து ட்விட்டர் பக்கத்தில் துக்ளக் ஆசிரியரான ஆடிட்டர் குருமூர்த்தி தெரிவித்திருந்த கருத்துகள் சர்ச்சையாகின. இது தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்ற பார் அசோசியன், துக்ளக் குருமூர்த்தி மீது அவதூறு வழக்கு பதிவு செய்தது.

இவ்வழக்கில் துக்ளக் குருமூர்த்தி ஏற்கனவே மன்னிப்பு கேட்டிருக்கிறார். அவர் தமது பதிவையும் நீக்கி இருந்தார். இது தொடர்பாக ஏற்கனவே பிரமாணப் பத்திரத்தையும் குருமூர்த்தி டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.
இவ்வழக்கு விசாரணை இன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் மீண்டும் நடைபெற்றது. இன்றைய விசாரணையின் போதும் நீதிபதி தல்வந்த்சிங், துக்ளக் குருமூர்த்தி இரு வரியில் நிபந்தனையற்றி மன்னிப்பு கேட்டு புதியதாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார் பிரச்சனை முடிந்துவிடும் என வலியுறுத்தினர்.
ஆனால் துக்ளக் குருமூர்த்தி தரப்பிலோ, மன்னிப்பு கேட்டு பதிவுகளும் நீக்கப்பட்டுவிட்டன; இது தொடர்பாக ஏற்கனவே பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துவிட்டோம்; புதியதாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய முடியாது என தெரிவிக்கப்பட்டது. இவ்வழக்கின் விசாரணை ஜூன் 6-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நீதிபதி முரளிதர் தற்போது ஒடிஷா மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ளார். கடந்த ஆண்டு நீதிபதி முரளிதரை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக உச்சநீதிமன்றத்தின் கொலிஜியம் பரிந்துரைத்தது. ஆனால் மத்திய அரசு இதற்கு ஒப்புதல் தரவில்லை. இதனால் தமது பரிந்துரையை உச்சநீதிமன்றம் திருமபப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications