"மீண்டும் ஸ்டேடியத்தின் மேல் மழை மேகங்கள்.." ஐபிஎல் பைனல் மழையால் பாதிக்கப்படுமா! வெதர்மேன் நறுக்
டெல்லி: ஐபிஎல் இறுதிப் போட்டி இப்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மழையால் போட்டி பாதிக்கப்படுமா என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் முக்கிய தகவலைப் பகிர்ந்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு உலகெங்கும் ரசிகர்கள் இருப்பது அனைவருக்கும் தெரியும். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் வந்துவிட்டாலே கிரிக்கெட் ரசிகர்களுக்குக் கொண்டாட்டம் தான். இந்தாண்டு மார்ச் 31ஆம் தேதி ஐபிஎல் தொடங்கியது

முதல் போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் மோதிய நிலையில், இப்போது இறுதிப் போட்டியிலும் மீண்டும் அதே இரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது. இரு அணிகளும் தான் புள்ளிப்பட்டியலிலும் டாப் இடத்தில் இருந்தனர்.
ஐபிஎல் பைனல்ஸ்:
16-வது ஐபிஎல் தொடரின் பைலனஸ் இன்று குஜராத் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்கி நடந்து வருகிறது. இதில் தல தோனி தலைமையிலான மஞ்சள் படை அணியும் ஹர்திக் பண்ட்யாவின் குஜராத் டைடன்ஸ் அணியை எதிர்கொண்டுள்ளது. இந்தப் போட்டி முதலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்தது. இருப்பினும், நேற்றைய தினம் மழை கொட்டி தீர்த்தால் போட்டி ரிசர்வ் நாளான இன்று ஒத்திவைக்கப்பட்டது.
அதன்படி இன்று மாலை 7.30 மணிக்குத் திட்டமிட்டபடி போட்டி ஆரம்பித்தது. இப்போட்டியில் டாஸ் வென்ற தோனி பந்து வீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி முதலில் குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங் செய்து வருகிறது. இதில் ஆரம்பம் முதலே குஜராத் அணி அதிரடி காட்டி வந்தது. அகமதாபாத் மைதானமும் பேட்டிங்கிற்கு சாதகமாக அமையவே குஜராத் அணி வீரர்கள் அதிரடியில் இறங்கினர். 14 ஒவர் முடிவில் குஜராத் அணி இரண்டு விக்கெட்களை இழந்து 131 ஓட்டங்களை எடுத்திருந்தது.

மழை வர வாய்ப்பு?
அதேநேரம் இன்றும் கூட மழை வர வாய்ப்புள்ளதாகச் சொல்லப்படுகிறது. டாஸ் வென்ற தோனி கூட மழையைக் கருத்தில் கொண்டே முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்துள்ளதாகக் கூறியிருந்தார். இன்று காலை வந்த பெரும்பாலான வானிலை மைய தகவல்களில் போட்டி நடைபெறும் போது மழை வர வாய்ப்பு உள்ளதாகவே கூறப்பட்டிருந்தது. போட்டி நடைபெறும் போது மழை பெய்தால் ஓவர்கள் குறைக்கப்படும். இது ரசிகர்களுக்குப் பெரிய ஏமாற்றத்தையே தரும்.
அதற்கேற்ப அகமதாபாத்தின் தெற்கே மழை மேகங்கள் உருவானது. அவை மைதானத்தை நோக்கி வந்து மழை பெய்யுமானால் போட்டி பாதிக்கப்படலாம். நேற்றைய தினமும் கூட இதேபோலத் தான் நடந்தது. இதனால் சிஎஸ்கே மற்றும் கிரிக்கெட் ரசிகர்கள் கவலையடைந்தனர். அதற்கேற்ப மழை வந்தால் மைதானத்தைக் கவர் செய்யவும் அங்குள்ள ஊழியர்கள் தயாராக உள்ளனர். இதற்கிடையே இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார்.

வெதர்மேன் என்ன சொல்கிறார்:
தமிழ்நாடு வெதர்மேன் தனது ட்விட்டர் பக்கத்தில், "உங்கள் பிரார்த்தனைகளுக்குப் பலன் கிடைக்கிறது.. அகமதாபாத்திற்கு தெற்கே மழை மேகங்கள் நகர்கிறது" என்று ட்வீட் செய்துள்ளார்.
அவர் தனது மற்றொரு ட்வீட்டில், "அகமதாபாத்திற்கு தெற்கே பெரும் மழை மேகங்கள் உருவாகியுள்ளது. இதனால் மைதானத்தில் தூறல் இருக்கும். ஆனால், தற்போதைய சூழலில் இது போட்டியைப் பாதிக்காது" என ட்வீட் செய்துள்ளார்.
இப்போது மழை பெய்வதால் போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், இது குறித்தும் அவர் ட்வீட் செய்துள்ளார். அவர் இப்போது தனது ட்விட்டரில், "அடுத்த 15 நிமிடங்களில், மழை மேகத்தின் தீவிரமான பகுதி மைதானம் மேல் செல்லும் என்பதால் மழை பெய்கிறது. அடுத்த 15-30 நிமிடங்களுக்கு மழை தொடரும்.

இந்த மழை மேகம் வலுவடைந்து, பின்னர் மீண்டும் வலுவிழந்தது. இப்போது மீண்டும் அது ஸ்டேடியத்தின் மேல் தீவிரமடைந்துள்ளது" என பதிவிட்டுள்ளார். 30 நிமிடங்களில் மழை நின்றுவிட்டால் பெரியளவில் ஓவர்கள் இழப்பு ஏற்படாது என்ற நம்பிக்கையிலேயே ரசிகர்கள் உள்ளனர்.
-
76 பந்துகளுக்கு பின் முதல் சிக்ஸ்.. சூர்யவன்ஷி கிட்ட சொல்லிடாதீங்க.. குஜராத்தை வெளுக்கும் ரசிகர்கள்! -
2வது முறையாக ஐபிஎல் கோப்பையை வெல்ல காத்திருக்கும் ஆர்சிபி.. குஜராத் அணி வெல்ல என்ன செய்ய வேண்டும்? -
மாடர்ன் லுக்கில் வைபவ் சூர்யவன்ஷி.. ஐசிசி தலைவர் ஜெய் ஷாவுடன் சந்திப்பு.. அப்போ அடுத்தது அதுதான்! -
இதுக்கு பேருதான் ஆதிக்கம்.. ஆர்சிபிக்கு எதிராக 3வது முறை.. பவர்பிளேயிலேயே சுருண்ட கில் - சுதர்சன்! -
குஜராத் அணி கதை ஓவர்.. ஹேசல்வுட்டிடம் 3வது முறையாக வீழ்ந்த சுப்மன் கில்.. சைலண்ட்டான அகமதாபாத்! -
கெய்ல், வார்னரால் கூட செய்ய முடியாத சாதனை.. பவர்பிளேயில் 500 ரன்களை விளாசிய வைபவ் சூர்யவன்ஷி! -
"நான் பொடியன் இல்ல.. என்னோட பேரு வைபவ் சூர்யவன்ஷி" தெறிக்கும் ராஜஸ்தான் மீம்ஸ்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications