மீண்டும் 1,000 ரூபாய் நோட்டு வருதா? “எல்லா சிக்கலையும் தீர்த்தாச்சு”: ரிசர்வ் வங்கி முக்கிய தகவல்!
டெல்லி: ரிசர்வ் வங்கி மீண்டும் 1000 ரூபாய் நோட்டுகளை வெளியிட உள்ளதாக தகவல்கள் பரவிய நிலையில், அதுகுறித்து ரிசர்வ் வங்கி தரப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
2016ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை பிரதமர் மோடி அறிவித்தார். அதன்படி பழைய ரூ.1000 மற்றும் ரூ.500 நோட்டுகள் செல்லாது என அறிவித்து, அதற்கு பதிலாக புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகளை வெளியிட்டது மத்திய அரசு. ஆனால், 2000 ரூபாய் நோட்டுகளையும் மத்திய அரசு சமீபத்தில் திரும்பப் பெற்றுள்ளது.

தற்போது ரூ.2 ஆயிரம் நோட்டுகள் திரும்ப பெறப்பட்டுள்ளன. கடந்த மே மாதம் 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்ததைத் தொடர்ந்து, 1000 ரூபாய் நோட்டுகள் மீண்டும் அறிமுகம் செய்யப்படும் என வதந்திகள் எழுந்தன. 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்து மாற்றுவதற்கான காலம் நீட்டிக்கப்பட்டு தற்போது அதுவும் முடிந்துவிட்டது.
இந்த நிலையில், ரூ.1000 பழைய நோட்டுகள் மீண்டும் வரப்போவதாக செய்திகள் பரவின. இதற்கு ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. ரிசர்வ் வங்கி ரூ.1000 நோட்டை மீண்டும் அறிமுகம் செய்யவோ, புதிய ரூ.1000 நோட்டை வெளியிடவோ திட்டமிடவில்லை எனத் தெரிவித்துள்ளது. இது பற்றி ஆதாரப்பூர்வமாக செய்தி அளித்துள்ள ஏஎன்ஐ, ரிசர்வ் வங்கிக்கு 1000 ரூபாய் நோட்டை மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டம் இல்லை என தெளிவுபடுத்தியுள்ளது.
மேலும், செப்டம்பர் 30-ம் தேதி நிலவரப்படி, 87 சதவீத 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன என்றும், இன்னும் ரூ.10 ஆயிரம் கோடி புழக்கத்தில் உள்ளது என்றும் ஆர்பிஐ தெரிவித்துள்ளது. மேலும், 1000 ரூபாய் நோட்டை மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை என்று ரிசர்வ் வங்கி உறுதிப்படுத்தி உள்ளது.
போதுமான பணப்புழக்கத்தை உறுதி செய்வதற்காக, போதுமான அளவு 500 ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு, சாத்தியமான பண இருப்பு சிக்கல்களை நிவர்த்தி செய்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ரூபாய் நோட்டு தட்டுப்பாடு இல்லாமல் இருக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
அதே சமயம் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையால் மக்களின் பணத்தேவை குறைந்துள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில் 1000 ரூபாய் நோட்டுகளை கொண்டு வர வேண்டிய அவசியம் இல்லை என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. இது போன்ற போலியான மற்றும் பொய்யான விஷயங்களை பரப்புவதை நிறுத்த வேண்டும் என மக்களுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே












Click it and Unblock the Notifications