வெற்றி உறுதியாகிவிட்டது.. நேஷனல் ஹெரால்ட் வழக்கில் சோனியா, ராகுலை கார்னர் செய்யும் சு. சாமி!
காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சிக்கி இருக்கும் நேஷனல் ஹெரால்ட் வழக்கு குறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி டிவிட் செய்துள்ளார்.
Recommended Video
டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இருவரும் சிக்கி இருக்கும் நேஷனல் ஹெரால்ட் வழக்கு குறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி டிவிட் செய்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் நேஷனல் ஹெரால்டு வழக்கில் சிக்கி உள்ளனர். இவர்கள் இருவரும் பிரபல நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நிறுவனத்தின் பங்குதாரர்களாக உள்ளனர்.
இதில் அவர்களுக்கு முறைகேடாக சொத்து இருப்பதாக புகார் எழுந்துள்ளது. அவர்கள் 2011, 2012-ம் ஆண்டுகளில் கிடைத்த வருமானத்தை குறைத்து காட்டி இருப்பதாக புகார் கூறப்பட்டு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

என்ன வழக்கு
அதன்படி 2011, 2012-ம் ஆண்டுகளில் நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தில் தங்களுக்கு ரூ.68 லட்சம் வரை வருமானம் வந்திருந்ததாக கணக்கு காட்டி இருந்தனர். ஆனால் மறு ஆய்வு செய்ததில் 2011-ம் ஆண்டு ரூ.155.4 கோடியும், 2012-ல் ரூ.155 கோடியும் வருமானம் வந்ததாக கூறப்பட்டது. இது தொடர்பான வழக்குதான் நடந்து வருகிறது.

இன்று விசாரணை
இந்த நிலையில்தான் இந்த வழக்கில் இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட உள்ளது. இதில் ஏற்கனவே சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி தரப்பு தங்கள் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர். அந்த எழுத்து பூர்வமான வாக்குமூலம் மீது இன்று விசாரணை நடக்க உள்ளது.

என்ன டிவிட்
இந்த வழக்கில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி தாக்கல் செய்த மனு மிக முக்கியமானது ஆகும். இந்த நிலையில் இது தொடர்பாக தற்போது சுப்பிரமணியன் சாமி டிவிட் செய்துள்ளார்.அதில், நேஷனல் ஹெரால்ட் வழக்கு இன்று நடக்கிறது, நாளையும் நடக்க உள்ளது. இந்த வழக்கு நான் தாக்கல் செய்த ஆவணங்களால் நடக்கிறது. அந்த ஆவணங்கள் குறைவாகவே இருக்கிறது.

நேரம் இல்லை
நான் அந்த ஆவணங்களை எல்லாம் பரிசோதனை செய்து பார்க்க வேண்டும், அதற்கு நிறைய நேரம் எடுக்கும். ஆனால் இந்த வழக்கில் நான் வெற்றிபெறுவது உறுதிதான் என்று சுப்பிரமணியன் சாமி குறிப்பிட்டுள்ளார்.

என்ன சிக்கல்
இந்த வழக்கில் சோனியா மற்றும் ராகுல் காந்திக்காக இத்தனை நாட்கள் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஆஜராகி வந்தார். ஆனால் அவர் தற்போது ஐஎன்எக்ஸ் வழக்கில் சிறையில் இருக்கிறார். இதனால் சோனியா, ராகுல் சார்பாக வேறு யாராவது ஆஜராக வாய்ப்புள்ளது என்கிறார்கள்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications