இந்தியாவில் கொரோனா ஸ்பைக்.. ஒரு நாளில் 5000 பேருக்கு தொற்று.. மொத்த பாதிப்பு 1,12,335 ஆக உயர்வு
டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,12,335 ஆக உயர்ந்துள்ளது . கடந்த 24 மணி நேரத்தில் 5000க்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 45422 பேர் மீண்டுள்ளனர்.
Recommended Video
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வெறும் 10 நாளில் 42 ஆயிரம் பேருக்கு அதிகரித்துள்ளது. இந்த 10 நாளில் மட்டும் சராசரியாக தினசரி 4 ஆயிரம் பேருக்கு இந்தியாவில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 5600க்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் நேற்று 5000க்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக இந்தியாவில் கொரோனா தொற்றால் 112335 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 45422 பேர் குணம் அடைந்து வீடு திரும்பிவிட்டனர். 3434 பேர் கொரோனாவால் இதுவரை இந்தியாவில் உயிரிழந்துள்ளனர். 63472 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்,
இந்தியாவிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 39297 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் 13191 பேரும், குஜராத்தில் 12539 பேரும், டெல்லியில் 11088 பேரும், ராஜஸ்தானில் 6016 பேரும், மத்திய பிரதேசத்தில் 5735 பேரும், உத்தரப்பிரதேசத்தில் 5175 பேரும், மேற்கு வங்கத்தில் 3103 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டிலேயே கொரோனாவால் அதிக அளவாக மகாராஷ்டிராவில் 1390 பேர் உயிரிழந்துள்ளனர். அதற்கு அடுத்தபடியாக குஜராத்தில் 749 பேர் இறந்துள்ளனர். மேற்கு வங்கத்தில் 3103 என்ற அளவில் பாதிப்பு குறைவாக இருந்த போதிலும் உயிரிழப்பு அதிகமாக உள்ளது. மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது மேற்கு வங்கத்தில் இறப்பு விகிதம் மிக அதிகமாக உள்ளது. அங்கு இதுவரை 253 பேர் உயிரிழந்துள்ளனர்.
மத்திய பிரதேசத்தில் 5735 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 267 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இறப்பு விகிதம் மிக குறைவாக உள்ளது. 13191 பேர் பாதிக்கப்பட்டுள்ள போதிலும் 88 பேர் மட்டுமே தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் இறந்துள்ளனர்.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications