அரசு அனுமதி இன்றி இப்படி எல்லாம் செய்ய முடியாது.. ஜேஎன்யூ தாக்குதல் பற்றி ப. சிதம்பரம் பரபர புகார்!
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடந்த தாக்குதல் அரசு அனுமதியுடன்தான் நடந்து இருக்கும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.
Recommended Video
டெல்லி: டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடந்த தாக்குதல் அரசு அனுமதியுடன்தான் நடந்து இருக்கும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முக்கியமான பல்கலைக்கழகமான டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் தற்போது பற்றி எரிந்து கொண்டு இருக்கிறது. அங்கு நேற்று மாணவர்கள் மீது முகமூடி அணிந்த கும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்தியது.
நூற்றுக்கும் மேற்பட்ட முகமூடி அணிந்த கும்பல் நேற்று மாலை பல்கலைக்கழக வளாகத்திற்குள் புகுந்து இந்த கொடூரத்தை நிகழ்த்தினார்கள். இதில் மாணவர்கள், மாணவிகள் மற்றும் ஆசிரியர்களும் சரமாரியாக தாக்கப்பட்டனர்.

கருத்து
இந்த தாக்குதல் குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். அதில், நாம் டிவியில் நேரலையில் பார்த்த விஷயங்கள் பெரிய அதிர்ச்சி அளிக்கிறது. முகத்தை மூடிக்கொண்டு மர்ம நபர்கள் ஜேஎன்யூ விடுதிக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி உள்ளார்கள். அங்குள்ள மாணவர்களை மோசமாக தாக்கி இருக்கிறார்கள்.

மிக மோசம்
இதில் மாணவர்கள் மோசமாக காயம் அடைந்துள்ளனர். இதெல்லாம் டிவியில் நடக்கிறது.அங்கு போலீசார் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள். டெல்லியில் போலீஸ் கமிஷ்னர் எங்கே சென்றார்.

காரணம்
இது டிவியில் நேரலையில் ஒளிபரப்பாகிறது. டிவியில் ஒரு கலவரத்தை நேரடியாக ஒளிரப்பும் இதுபோன்ற மோசமான விஷயங்கள் எல்லாம் அரசு அனுமதி இன்றி நடத்த முடியாது. நம்பிக்கைக்கு அப்பாற்பட்டு பல விஷயங்கள் நடந்து வருகிறது, என்று ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

தாக்குதல் எப்படி
இந்த நிலையில் இந்த தாக்குதல் விஷயத்தை கையில் எடுக்க ப. சிதம்பரம் முடிவு செய்துள்ளார். இன்று மாலை ப. சிதம்பரம் இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேச உள்ளார். இவருடன் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பேசுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications