Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமித் ஷாவை சந்தித்து பேசியது இதற்காகத்தான்.. ஜெயலலிதா மகள் எனக் கூறிக்கொள்ளும் பெண் பரபர பேட்டி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அதிமுக விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசியதாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மகள் என்று கூறிவரும் ஜெ.ஜெயலட்சுமி என்ற அம்ருதா டெல்லியில் பேட்டி அளித்துள்ளார். ஜெயலலிதா மகள் எனக் கூறி வருபவர் அமித் ஷாவை சந்தித்துப் பேசியுள்ளது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெ.ஜெயலட்சுமி என்ற அம்ருதா செய்தியாளர்களிடம் பேசுகையில், "எங்க அம்மாவின் கட்சி நான்காக உடைந்து, தனித்தனியாக பிரிந்து சென்றுகொண்டு இருக்கிறார்கள். இதுபற்றி குரல் கொடுத்த செங்கோட்டையனுக்கு எந்த மரியாதையும் இல்லாமல் போய்விட்டது. ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தை அதிமுகவின் கோட்டையாக்கி வைத்திருந்த செங்கோட்டையனையே கட்சி பதவியில் இருந்து நீக்கி உள்ளனர்.

Woman Claiming to Be Jayalalithaa s Daughter Meets Amit Shah Sparks Stir in AIADMK Circles

அமித் ஷாவை சந்தித்தேன்

ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோரை மீண்டும் வரக்கூடாது எனச் சொல்கிறார்கள். ஈகோ பிரச்சனை பெரிதாகி ஒருவரை ஒருவர் அழிக்கும் நிலைக்கு வந்துவிட்டது. பொதுமக்கள் நிறைய பேர் என்னிடம் வந்து அம்மாவின் கட்சியை காப்பாற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர். நான் நிச்சயம் செய்கிறேன் என்று சொன்னேன்.

அதன்படி, நேற்று டெல்லிக்கு வந்தோம். இன்று காலை அப்பாயின்மெண்ட் கொடுத்தார்கள். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தோம். எல்லோரையும் மீண்டும் அழைத்துப் பேசிவிட்டு என்னிடம் சொல்வதாகச் சொல்லி இருக்கிறார். ஒரு வாரம் கழித்து மீண்டும் வாருங்கள் எனச் சொல்லி இருக்கிறார். அதிமுகவின் முக்கிய தலைவர்களையே நீக்கி வருகிறார் எடப்பாடி பழனிசாமி, கட்சியை கட்டுக்கோப்பாக ஒன்றிணைத்து 2026ல் அதிமுக ஆட்சி அமைய உதவ வேண்டும் எனக் கேட்டுக்கொண்டேன்.

டெல்லி தலைமை தான் சரி செய்ய முடியும்

நான் ஜெயலலிதாவின் மகள் என்பது அனைவருக்கும் தெரியும். நான் அதிமுக உறுப்பினர். ஆதரவு தருமாறு மக்கள் வந்து என்னைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதற்காகவே நான் வந்துள்ளேன். நான் 5 ஆண்டுகளுக்கு முன்பே அம்மா சமாதிக்கு சென்று நான் கோரிக்கை வைத்ததே அதிமுக ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்றுதான். இப்போது பாஜக தலைமை நினைத்தால் அதிமுக பிரச்சனையை சரி செய்ய முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

அதிமுகவில் முக்கியமான நபரான செங்கோட்டையனை கட்சி பதவியை விட்டு நீக்கியுள்ளனர். நாளை இன்னும் பல சீனியர்களை கட்சியை விட்டு நீக்குவார்கள். அப்படி எல்லோரையும் நீக்கிவிட்டு எடப்பாடி பழனிசாமி என்ன செய்யப்போகிறார்." எனக் கேள்வி எழுப்பி இருக்கிறார் அம்ருதா.

செங்கோட்டையன்

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைத்து, அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்று 10 நாட்கள் கெடு விதித்து, கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி பேசியிருந்தார். இதனால் கோபமடைந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையனை அமைப்புச் செயலாளர் மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் பொறுப்புகளில் இருந்து நீக்கினார்.

அதிமுகவில் பல்வேறு குழப்பங்கள் நீடிக்கும் நிலையில் செங்கோட்டையன் டெல்லிக்கு திடீர் பயணம் மேற்கொண்டார். டெல்லி புறப்படும் முன்பாக செய்தியாளர்களைச் சந்தித்தபோது ஹரித்வாருக்கு பயணம் மேற்கொள்வதாக தெரிவித்தார் செங்கோட்டையன். ஆனால், அன்று இரவே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வீட்டுக்குச் சென்று அவரைச் சந்தித்துப் பேசினார் செங்கோட்டையன்.

அமித் ஷா உடன் சந்திப்பு

டெல்லியில் இருந்து திரும்பியதும் செய்தியாளர்களை சந்தித்து பேசிய செங்கோட்டையன், அமித் ஷா மற்றும் நிர்மலா சீதாராமனை சந்தித்து அரசியல் சூழல் குறித்து விவாதித்ததாக தெரிவித்தார். மேலும், ரயில்வே துறை அமைச்சரை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியதாக தெரிவித்தார். அதிமுக வலிமை பெற உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்ததாகவும் தெரிவித்தார். அனைவரின் ஒத்துழைப்போடு மக்கள் பணிக்காக தொடர்ந்து போராடுவேன் என செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.

இந்தச் சூழலில் தான், ஜெயலலிதாவின் மகள் எனக் கூறிக்கொண்டு, ஜெயலலிதா கெட்டப்பிலேயே வலம் வரும் அம்ருதா, டெல்லி சென்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசியதாகத் தெரிவித்துள்ளார். இது அதிமுக வட்டாரத்தில் சலசலப்புகளை ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+