வேலூர் ரயிலில் பாலியல் தொல்லை + கர்ப்பிணியை கீழே தள்ளிய கொடூரன்.. டிஜிபிக்கு மகளிர் ஆணையம் உத்தரவு
டெல்லி: வேலூர் அருகே ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தை கண்டித்த தேசிய மகளிர் ஆணையம் அதுபற்றிய விரிவான அறிக்கையை எப்ஐஆர் காப்பியுடன் 3 நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக டிஜிபிக்கு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனிகளில் வெளியூர் மற்றும் வெளிமாநிலத்தை சேர்ந்த பெண்கள் பணியாற்றி வருகின்றனர். ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த பெண் திருப்பூரில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் டெய்லராக பணியாற்றி வருகிறார்.

இந்த பெண் திருமணமானவர். தற்போது 4 மாத கர்ப்பிணியாக உள்ளார். இவர் நேற்று கோவையில் இருந்து திருப்பதி செல்லும் இன்டர்சிட்டி விரைவு ரயிலில் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றார்.
இந்த ரயில் வேலூர் மாவட்டம் கேவி குப்பம் அருகே சென்றது. அப்போது அந்த பெண் கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது ஒருவர் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் கத்தி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் கர்ப்பிணி என்று கூட பாராமல் ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டு சென்றுவிட்டார்.
அதன்பிறகு அந்த நபர் காட்பாடி நிலையத்தில் இறங்கி தலைமறைவானார். இதற்கிடையே ரயிலில் இருந்து மர்மநபர் கீழே தள்ளியதில் விழுந்த கர்ப்பிணிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றிய புகாரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து ஹேமராஜ் என்பவரை கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே கொலை வழக்கு, செல்போன் பறிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது. இவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே தான் சம்பவம் தொடர்பாக தமிழக டிஜிபியிடம் தேசிய மகளிர் ஆணையம் விரிவான அறிக்கை கேட்டுள்ளார். அதோடு தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கி உள்ளது. இதுதொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
சென்னை அருகே ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவத்துக்கு கடும் கண்டனத்தை தேசிய மகளிர் ஆணையம் பதிவு செய்துள்ளது. பெண்களுக்கான ரயில் பெட்டியில் பயணித்தபோதும் இப்படியொரு சம்பவம் நடந்துள்ளது மாநிலத்தில் பெண்களின் பாதுகாப்பு குறித்த கேள்வியை எழுப்புகிறது.
தேசிய மகளிர் ஆணைய தலைவர் உத்தரவின்படி இதுபற்றி தாமாக முன்வந்து விசாரணை மே்கொள்ளப்படுகிறது. இதுதொடர்பாக டிஜிபிக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும். பிஎன்எஸ் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இலவச சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி விரிவான விசாரணை அறிக்கை எப்ஐஆர் காப்பியுடன் 3 நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி












Click it and Unblock the Notifications