ஜூம் மீட்டிங்கில் கணவர்.. அது தெரியாமல் முத்தம் கொடுக்க நெருங்கிய மனைவி.. கலகல வீடியோ!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஜூம் மீட்டிங்கின் போது கணவருக்கு முத்தம் கொடுக்க முயன்ற வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது. இதையடுத்து பெரும்பாலான நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. வீட்டிலிருந்து பணியாற்ற முடிந்த ஐடி ஊழியர்கள் அவ்வாறு பணியாற்றி வந்தனர்.

தற்போது நிலைமை சீரான போதிலும் பாதுகாப்பு கருதி வீட்டிலிருந்தபடியே பணியாற்றி வருகிறார்கள். அவ்வப்போது பணி குறித்து ஆலோசனை நடத்த ஜூம் ஆப் மூலம் மீட்டிங் நடத்தப்படுகிறது.

வைரல்

வைரல்

பணி நிமித்தமாக மட்டும் இல்லை ஆன்லைன் வகுப்புகளும் இதன் மூலம் நடைபெறுகிறது. நண்பர்கள் பேசி கொள்வது, குரூப் மீட்டிங் என ஜூம் ஆப் உதவி புரிகிறது. அந்த வகையில் இந்த மீட்டிங் நடந்த ஒரு காமெடி காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

நெருங்கிய மனைவி

ஜூம் கால் அலுவலக மீட்டிங்கில் ஒருவர் மும்முரமாக விவாதித்துக் கொண்டிருக்கிறார். இதை பார்க்கும் மனைவி, கணவர் ஏதோ பாட்டு கேட்டுக் கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டு அருகே வந்து முத்தம் கொடுக்க நெருங்கி வருகிறார். இதை சற்றும் எதிர்பாராத கணவர் , வெடுக்கென தனது தலையை பின்னால் இழுத்துக் கொள்கிறார்.

வெட்கத்தில் தலை

வெட்கத்தில் தலை

அப்படியும் விடாத அந்த பெண், தனது கணவர் முத்தம் வேண்டாம் என்கிறார் என நினைத்து வெட்கத்தில் சிரிக்க அப்போது ஜூம் மீட்டிங் இருப்பதை லேப் டாப்பை காட்டி சிக்னல் கொடுத்ததும் அந்த பெண் செய்வதறியாது வெட்கத்தில் தலை குனிந்து கொள்கிறார்.

சிறந்த மனைவி

சிறந்த மனைவி

இந்த வீடியோவிற்கு ஆனந்த மகிந்திரா காமெடியாக ஒரு பதில் அளித்துள்ளார். அதில் ஹா ஹா.. நான் இந்த ஆண்டின் சிறந்த மனைவியாக இந்த பெண்ணை பரிந்துரைக்கிறேன். இந்த பெண்ணின் முத்தத்தை அந்த கணவரும் யதார்த்தமாக ஏற்றுக் கொண்டிருந்தால் இந்த ஆண்டின் சிறந்த ஜோடிக்கு பரிந்துரைத்திருப்பேன் என கமெண்ட் அடித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+