டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அக்கா ஏறி மிதிச்சா.. மாவு வருதே.. இவங்கதான் உண்மையான "வில்லேஜ் விஞ்ஞானி" பாஸ்! - வைரல்

Google Oneindia Tamil News

டெல்லி: பெண் ஒருவர் ஜிம் சைக்கிளை ஓட்டிக் கொண்டே மாவு அரைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி விட்டது.

Recommended Video

    ஜிம் சைக்கிளை மாவு அரைக்கும் இயந்திரமாக மாற்றிய பெண்- வைரல் வீடியோ

    எந்த வேலை செஞ்சாலும் அதற்கு லஞ்சம், பிரதிபலனை எதிர்பார்ப்பது வழக்கம். அந்த வகையில் சிறு வயதில் அம்மா பச்சை மிளகாய் கேட்டால் அதற்கு லஞ்சமாக தேன் மிட்டாய் வாங்குவது...

    அது போல் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என சிலர் ஒரே வேலையில் இரு பலன்கள் கிடைப்பதை விரும்புகிறார்கள். வீட்டை பார்க்க வந்தேன், அப்படியே உங்களையும் பார்க்க வந்தேன் என சொல்வதை அடிக்கடி கேட்டுள்ளோம்.

    பாட்டிக்கு நெய் பந்தம் பிடிக்க இருந்த பேரன்.. ஆனால் பென்ஸ் காரின் ஸ்டியரிங்கை பிடித்து அசத்தல்! பாட்டிக்கு நெய் பந்தம் பிடிக்க இருந்த பேரன்.. ஆனால் பென்ஸ் காரின் ஸ்டியரிங்கை பிடித்து அசத்தல்!

    சமூக வலைதளங்கள்

    சமூக வலைதளங்கள்

    அது போல் சின்ன சின்ன விஷயங்களுக்கே இப்படி என்றால் உடம்பை குறைக்க செய்யும் உடற்பயிற்சியிலுமா இரு மாங்காய் அடிக்க நினைப்பது. ஆம்! பெண் ஒருவர் தனது ஜிம் சைக்கிளை மாவு அரைக்கும் இயந்திரம் போல் மாற்றிவிட்டார். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    ஜிம் சைக்கிள்

    ஜிம் சைக்கிள்

    மாவு அரைக்கும் இயந்திரத்துடன் தனது ஜிம் சைக்கிளை அந்த பெண் இணைத்துக் கொண்டார். அதில் அமர்ந்து பெடலை மிதித்தால் போதும் கோதுமை மாவு கொட்டும். அதே நேரத்தில் அம்மணிக்கு உடல் எடையும் குறையும். என்னா ஐடியா பாருங்க.. இந்த வீடியோ அனைவரையும் சென்றடைந்துள்ளது.

    பாத்திரம்

    பாத்திரம்

    பலர் புதுவிதமான ஐடியா என பாராட்டி வருகிறார்கள். இன்னும் சிலர் இந்த சைக்கிள் சக்கியை எங்கே வாங்குவது என கேட்கிறார்கள். ஒரு பாத்திரம் போல் இருக்கும் பகுதியில் கோதுமையை போடுகிறார், அதன் கீழே மற்றொரு பாத்திரம் வைத்துள்ளார்.

    ரத்த ஓட்டம்

    ரத்த ஓட்டம்

    பின்னர் சைக்கிளில் ஏறி உட்கார்ந்து கொண்டு ஜாலியாக சுற்றுகிறார். உடனே கோதுமை மாவு கொட்டுகிறது. இதே அவர் கையில் அரைத்தால் கைகளுக்கு மட்டுமே நன்மை கொடுக்கும். கைகளில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இதே இது போல் சைக்கிளில் மிதித்தால் தலை முதல் கால் வரை அனைத்தும் சுறுசுறுப்பாக இயங்கும்.

    சூழல்

    சூழல்

    உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளும் கரையும். தற்போதைய காலகட்டத்தில் உடற்பயிற்சி என்பது அனைவருக்கும் தேவை. ஒரு சிலர் தங்களுக்கு நேரம் இல்லை என கூறி தட்டிக் கழிக்கிறார்கள். ஆனால் இவரோ அதற்கான சூழலை உருவாக்கி உடல் எடையை குறைக்கிறார். மற்றவர்களை போல் நாமும் இவரை பாராட்டுவோம்.

    English summary
    Woman modifies a gym cycle to grind flour. This video goes viral in Social media.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X