வெரி இன்ட்ரஸ்டிங்.. நாடாளுமன்றம், மாநில சட்டசபைகளில் பெண்கள் % இப்போ எவ்வளவு இருக்கு தெரியுமா?
டெல்லி: சட்டசபை, நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா லோக்சபாவில் அறிமுகப்படுத்தப்பட்டு இன்று விவாதம் நடைபெற உள்ளது. இம்மசோதா நடைமுறைக்கு வர இன்னும் 15 ஆண்டுகள் ஆகலாம் என கூறப்படுகிறது.
நாடு விடுதலைக்கு முன்னர் இருந்து மகளிர் இடஒதுக்கீடு மசோதா குறித்து விவாதிக்கப்படுகிறது. மகளிர் இடஒதுக்கீடு சட்டம், 75 ஆண்டுகால சுதந்திர வரலாற்றில் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை.

தற்போதைய மத்திய பாஜக அரசு, பல்வேறு உட்பிரிவுகளை உள்ளடக்கிய ஒரு மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தாக்கல் செய்தது. இம்மசோதா மீது விவாதம் நடைபெற உள்ளது. ஆனால் இந்த மசோதாவும் நடைமுறைக்கு வரை இன்னமும் 15 ஆண்டுகள் ஆகக் கூடும் என்றே தெரிகிறது..
சரி நமது நாட்டில் நாடாளுமன்றம் ,சட்டசபைகளில் இப்போது பெண்களுக்கு எத்தனை சதவீதம் பிரதிநிதித்துவம் இருக்கிறது தெரியுமா?
நாடாளுமன்றம்:
லோக்சபா: 78 (543) ; 14.4%
ராஜ்யசபா: 24 (14%)
மாநிலங்கள்:
1. திரிபுரா- 15%
2. சத்தீஸ்கர்- 14.44%
3. மே.வங்கம்- 13.70%
4. ஜார்க்கண்ட் -12.35%
5. ராஜஸ்தான் 12%
6. உ.பி. 11.66%
7. டெல்லி 11.43%
8. உத்தரகாண்ட் 11.43%
9. பஞ்சாப்-11%
10. குஜராத்- 10.79%
11. பீகார்- 10.70%
12. ஹரியானா - 10%
13. சிக்கிம் 9.38%
14. மபி.- 9.13%
15. ஒடிஷா 8.9%
16. மகாராஷ்டிரா 8.33 %
17. மணிப்பூர்- 8.33 %
18. ஆந்திரா- 8.00 %
19. கர்நாடகா 7.86 %
20. கோவா 7.50%
21. தமிழ்நாடு 5.13%
22. தெலுங்கானா 5.04
23. அருணாச்சல பிரதேசம் 5%
24. மேகாலயா 5%
25. அஸ்ஸாம் 4.76%
26. கர்நாடகா 4.46%
27. நாகாலாந்து 3.33%
28. புதுச்சேரி- 3.33%
29. ஜம்மு காஷ்மீர் 2.30
30. இமாச்சல பிரதேசம் 1.47%
31. மிசோரம்- 0












Click it and Unblock the Notifications